நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மாதந்தோறும் மின்கட்டணம் கணக்கீடு செய்யப்படும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும்’ என்றெல்லாம் வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த முதல்வர் விஜய், 500 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரத்தை பயன்படுத்துவோருக்கே 200 யூனிட் இலவசம், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறையே கணக்கீடு என அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார். இப்போது அதையெல்லாம் தூக்கி சாப்பிடும்விதமாக, விண்ணை முட்டும்வகையில் எகிறிவரும் மின் கட்டணத்தால் ‘ஷாக்’ அடித்து கதிகலங்கி நிற்கிறார்கள் தமிழக மக்கள்! இதுகுறித்து விவரமறிந்த அரசியல்...
Category: TamilNadu
கேப்டனை இழுத்துவிட்ட கீர்த்தனா… சட்டசபையில் சீறிய பிரேமலதா.. நடந்தது என்ன?
காவல்துறை மானியக் கோரிக்கை தொடர்பான விவாதத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை மற்றும் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். இதற்கு தவெக அமைச்சர்கள் பதிலளித்த நிலையில், இரு தரப்புக்கும் இடையே வார்த்தைப் போர் ஏற்பட்டது. தொடர்ந்து, அவையில் பல்வேறு உறுப்பினர்கள் குறுக்கிட்டு பேசியதால் விவாதம் சூடுபிடித்தது. இந்த நிலையில், தேமுதிக சார்பில் பிரேமலதா விஜயகாந்த் பேசுவதற்கு சபாநாயகர் அனுமதி வழங்கினார். அப்போது சட்டசபையில் நடைபெற்ற விவாதம்...
11 மதுபானங்களுக்கு தடை… மறுநாளே வாபஸ்….பின்னணி என்ன?
டாஸ்மாக் விவகாரம் ARR தொடர்பாக டாஸ்மாக் நிறுவனத்திடம் ஆர்.டி.ஐ.யில் பதில் கேட்டால், ‘உணவு பாதுகாப்பு ஆணையத்திடம் கேளுங்கள்’ என டாஸ்மாக் பதிலளித்திருப்பதும், அந்நிறுவனம் மீது முன்வைக்கப்படும் பல்வேறு குற்றச்சாட்டுகளும் பகீர் கிளப்புகின்றன. டாஸ்மாக் மதுவில் இருக்கும் ஆபத்துகளை அறிந்த அரசு நிர்வாகம், டாஸ்மாக் துறையை மொத்தமாக சீரமைக்க இருப்பதாக சமீபத்தில் நமது இதழில் ‘டாஸ்மாக் தனியார் மயமா, சீரமைப்பா? என்ற தலைப்பில் விரிவாக செய்தி வெளியிட்டிருந்தோம். இதன் தொடர்ச்சியாக, திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ‘என்ரிகா எண்டர்பிரைசஸ்’ நிறுவனத்தில் எஃப். எஸ்.எஸ்.ஏ.ஐ...
உதய் விட்ட வார்த்தை… உடனே டென்ஷனான அமைச்சர் ஆனந்த்…!
சட்டசபையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் முதலில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தற்போதைய ஆட்சியில் சட்டம் இருந்தாலும் ஒழுங்கு இல்லை என்றும், பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தார். மேலும், திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை தவெக அரசு ஏன் ரத்து செய்தது என்றும் அவர் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து, பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட தவெக பிரமுகர், அக்கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. பங்கேற்ற நிகழ்ச்சியில்...
கோபித்துக் கொண்ட சிவிஎஸ்… சமாதானப்படுத்திய சபாநாயகர்..!
சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக கொண்டு வர வலியுறுத்தி தமிழ்நாடு சட்டசபையில் இன்று(செப்.,03) தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டது. முதலமைச்சர் விஜய் முன்மொழிந்த இந்தத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தீர்மானம் தொடர்பான விவாதத்தில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது கருத்துகளைத் தெரிவித்தனர். திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ரகுபதி பேசினார். இதையடுத்து அதிமுக சார்பில் தளவாய் சுந்தரம் பேசுவதற்கு சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அழைப்பு விடுத்தார். அப்போது, தனக்கு முதலில் பேச வாய்ப்பு...
ஒரு கிலோ வெங்காயம் ரூ.35…. சென்னை ரேஷன் கடையில் தொடங்கிய விற்பனை..!
வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வெங்காயம் வரத்து குறைந்துள்ளதால், கடந்த சில நாட்களாக வெளிச்சந்தையில் அதன் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சில இடங்களில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.70 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதையடுத்து, பொதுமக்களுக்கு குறைந்த விலையில் வெங்காயம் கிடைக்கும் வகையில் நகர்ப்புற பகுதிகளில் செயல்பட்டு வரும் நியாய விலைக் கடைகள் மூலம் வெங்காயம் விற்பனை செய்யப்படும் என சட்டப்பேரவையில் உணவுப் பொருள் பாதுகாப்புத் துறை அமைச்சர் வெங்கடரமணன் அறிவித்திருந்தார். அதன்படி, நகர்ப்புற ரேஷன்...
ஜார்ஜ் கோட்டைக்கு Bye Bye… சென்னையில் புதிய தலைமைச் செயலகம்… மாஸ் காட்டிய விஜய்..!
தமிழ்நாடு சட்டசபை இன்று (செப்.,03) காலை 9.30 மணிக்கு கூடியது. சட்டசபையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் விஜய் வெளியிட்டார். அதன் ஒரு பகுதியாக, சென்னையில் அனைத்து அரசுத் துறைகளும் ஒரே இடத்தில் செயல்படும் வகையில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என தெரிவித்தார். தற்போது தலைமைச் செயலகத்தின் நிர்வாகப் பணிகள் புனித ஜார்ஜ் கோட்டை மற்றும் நாமக்கல் கவிஞர் மாளிகை ஆகிய இரு வளாகங்களில் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக நாமக்கல் கவிஞர் மாளிகையில் 30-க்கும் மேற்பட்ட...
கொளத்தூர் வெற்றி வழக்கு: ஸ்டாலின் மனு செல்லாது… நீதிமன்றம் அதிரடி..!
தேர்தல் முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்படும் மனுக்கள், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காலக்கெடுவுக்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும். இந்த வழக்கில், தேர்தல் முடிவு வெளியான 45 நாட்களுக்குள் உரிய முறையில் தேர்தல் வழக்கு தொடரப்படவில்லை என வி.எஸ். பாபு தரப்பில் வாதிடப்பட்டது. காலதாமதத்தை மன்னித்து, வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என மு.க.ஸ்டாலின் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும், கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் தொடர்பாக பல்வேறு முறைகேடு குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டன. இந்த மனு சென்னை...
தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா? டிக்கெட் புக்கிங்கில் முந்திக்கோங்க!
தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், சொந்த ஊர்களுக்குத் திரும்பும் பயணிகளுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு வருகிற 6-ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்க உள்ளது. ரயில்களில் 60 நாட்களுக்கு முன்பாக டிக்கெட் முன்பதிவு செய்யும் நடைமுறையின்படி, நவம்பர் 5-ஆம் தேதி சொந்த ஊர்களுக்குச் செல்ல விரும்புவோர் வருகிற 6-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும், தீபாவளி பண்டிகை முடிந்து நகரங்களுக்குத் திரும்ப விரும்புவோர் பெரும்பாலும் வருகிற 7 மற்றும் 8-ஆம் தேதிகளில்...
இனி ரேஷன் கடைகளில் வெங்காயம்! விலை உயர்வால் அரசு அதிரடி!
தமிழ்நாட்டில் வெங்காயத்தின் விலை உயர்வை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்ய அரசு முடிவு செய்துள்ளதாக உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ரமணன் தெரிவித்துள்ளார். சட்டமன்றத்தில் வெளியான முக்கிய அறிவிப்பு : தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று (செப்டம்பர் 1) நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அமைச்சர் வெங்கட்ரமணன், மக்கள் நலன் மற்றும் விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். அத்தியாவசிய உணவுப் பொருட்களின்...










