இங்கிலாந்தின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில் நடைபெற உள்ள Michelin Le Mans Cup கார் பந்தயத்தில், அஜித் குமார் ரேசிங் அணி பங்கேற்க உள்ளது. இந்த பந்தயத்தில் இந்திய வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கலந்து கொள்ள உள்ளதாக Michelin Le Mans Cup அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. Michelin Le Mans Cup வெளியிட்ட முக்கிய அறிவிப்பு : Michelin Le Mans Cup தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதள பக்கத்தில்...
Category: TamilNadu
சென்னை டூ துபாய் டூ லண்டன்… விஜய்யின் லண்டன் டிரிப் பிளான்ஸ்..!
தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் முதலமைச்சர் விஜய் மேற்கொள்ளும் முதல் அரசுமுறை வெளிநாட்டுப் பயணம் நாளை தொடங்குகிறது. இதற்காக சென்னையில் இருந்து துபாய் வழியாக லண்டன் செல்ல அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எமிரேட்ஸ் விமானத்தில் சென்னை டு துபாய் : முதலமைச்சர் விஜய் நாளை இரவு சுமார் 10 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து எமிரேட்ஸ் நிறுவனத்தின் EK 547 பயணிகள் விமானத்தில் துபாய் புறப்பட உள்ளதாக கூறப்படுகிறது. வழக்கமான பயணிகள்...
ரூ.1200 கோடி திட்டம்… 26 ஏக்கரில் பிரம்மாண்ட தலைமைச் செயலகம்!
தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் இடம் குறித்த அரசாணையை தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதன் மூலம் புதிய தலைமைச் செயலகம் அமையவுள்ள இடம் குறித்த நீண்டநாள் எதிர்பார்ப்புகளுக்கு தற்போது முடிவு ஏற்பட்டுள்ளது. புதிய நிர்வாக வளாகம் சுமார் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஆரம்பகட்ட பணிகளை மேற்கொள்ளும் வகையில், கட்டட வடிவமைப்பு, திட்டமிடல் மற்றும் செயலாக்க நடவடிக்கைகளுக்காக தனித்தனி குழுக்களை அமைக்கவும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ரூ.1,200 கோடி...
TN Assembly: நீக்க மறுத்த சபாநாயகர்.. தூக்கிச் சென்ற காவலர்கள்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்றைய கூட்டத்தொடரின் போது, சர்க்காரியா கமிஷன் அறிக்கை குறித்து முதலமைச்சர் விஜய் பேசிய கருத்துகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என திமுக தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்குத் தனது தீர்ப்பை வழங்கிய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், முதலமைச்சரின் பதிலுரையில் இடம்பெற்ற எந்தப் பகுதியையும் அவைக்குறிப்பிலிருந்து நீக்க முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் சபாநாயகரின் இருக்கையை முற்றுகையிட்டுத் தொடர் அமளியில் ஈடுபட்டனர். அப்போது பேசிய சபாநாயகர், “இது பொதுக்கூட்ட மேடையோ...
விஜய் டேபிளில் இருந்த அந்த 3 Files இவை தானா?
சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் கடந்த வாரம் வெளியிட்ட ஒரு அறிவிப்பு, தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. தனது மேஜையில் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களுடன் தொடர்புடைய மூன்று முக்கிய கோப்புகள் இருப்பதாகவும், அவற்றை விரைவில் திறக்க இருப்பதாகவும் விஜய் கூறியிருந்தார். இதனால், எதிர்க்கட்சிக்கு எதிரான புதிய ஆவணங்கள், மாநில லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணையில் கிடைத்த தகவல்கள் அல்லது இதுவரை வெளிவராத முக்கிய ஆதாரங்கள் சட்டப்பேரவையில் வெளியாகும் என அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், சட்டப்பேரவையில் விஜய்...
“இந்த ஆதாரம் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?” – சர்க்காரியா கமிஷனை கையில் எடுத்த விஜய்..!
தொடர் விடுமுறைக்குப் பிறகு தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று மீண்டும் கூடிய நிலையில், காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் பதிலளித்தார். அப்போது பேசிய முதலமைச்சர் விஜய், 1970-களில் திமுக ஆட்சியில் நடைபெற்ற வீராணம் திட்டத்திற்கான டெண்டர் விவகாரத்தை குறிப்பிட்டு தனது உரையை தொடங்கினார். திமுக ஆட்சிக் காலத்தி டெண்டர் பெறுவதற்காக கமிஷன் கேட்கப்பட்டதாகக் கூறப்படும் தகவல்களை பேரவையில் முன்வைத்தார் விஜய். மேலும், பல ஆண்டுகளுக்கு முன்பு டெண்டர் விவகாரத்தில்...
"பார்ட்டி ஃபண்டு வாங்கியதே ஸ்டாலின் & உதயநிதி தான்…" – பேரவையில் கொந்தளித்த விஜய்..!
தொடர் விடுமுறைக்குப் பிறகு தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று மீண்டும் கூடிய நிலையில், காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் பதிலளித்து கொண்டிருக்கிறார். அப்போது பேரவைக்குள் திமுகவினர், தன்னை நோக்கி எலும்பு முறியும் எனக் கூறும் அளவுக்கு நிலைமை சென்றுள்ளதாக விஜய் தெரிவித்தார். இதுபோன்ற செயல்பாடுகளை பார்த்துதான் மக்கள் திமுகவை எதிர்க்கட்சி வரிசையில் அமர வைத்துள்ளதாகவும் அவர் விமர்சித்தார். மேலும், திமுகவுக்கு வாக்களிக்காதவர்களுக்கு நல்ல சாவே வராது என திமுகவைச்...
TN Assembly: யாரும் ஓடிடக் கூடாது..! எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு முதலமைச்சரின் பதில் என்ன?
தொடர் விடுமுறைக்குப் பிறகு தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று மீண்டும் கூடும் நிலையில், காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் பதிலளிக்க உள்ளதால் பேரவையில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி நிதியமைச்சர் மரிய வில்சன் பொது பட்ஜெட்டையும், ஆகஸ்ட் 6-ஆம் தேதி வேளாண் துறை அமைச்சர் வினோத் வேளாண் பட்ஜெட்டையும் தாக்கல் செய்தனர். அதில் ‘வெற்றி மடிக் கணினி திட்டம்’, ‘வெற்றி வீடு திட்டம்’, ‘துளித்...
"இந்துக்கள் 2-3 குழந்தைகள் இருக்க வேண்டும்.." – விஷ்வ இந்து பரிஷத் வேண்டுகோள்.. காரணம் என்ன?
சென்னை விமான நிலையத்தில் விஸ்வ இந்து பரிஷத் அகில உலக அமைப்பாளர் மிலிந்த் பரண்டே செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது அவர் கூறியதாவது, ”கடந்த 5 நாட்களாக தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் செய்து நிலவரங்களை அறிந்தேன். தமிழ்நாட்டில் கிறிஸ்தவ மதமாற்ற நடவடிக்கைகள் அதிகரித்து வருவதோடு பெருமளவில் மதமாற்றம் நடைபெற்று வருகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 25 ஆவது பிரிவு மதத்தைப் பின்பற்றவும், பரப்பவும் உரிமை அளிக்கிறது. ஆனால் கட்டாய மதமாற்றத்திற்கு அனுமதி அளிக்கவில்லை. ஆசை வார்த்தைகளைக் கூறியோ பயமுறுத்தியோ...
விஜய் வீட்டின் அருகில் புதிய தலைமை செயலகம்? பட்டியலில் 4 இடங்கள்?
சென்னையில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவை வளாகம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக பட்டினப்பாக்கம், கிண்டி, நந்தம்பாக்கம், கோயம்பேடு உள்ளிட்ட 4 முக்கிய இடங்கள் அரசின் பரிசீலனையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய தலைமைச் செயலகம் என்பது ஒரு நிர்வாகக் கட்டிடம் மட்டுமல்லாமல், எதிர்கால தேவைகளையும் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட வேண்டிய முக்கிய அரசு வளாகமாக பார்க்கப்படுகிறது. இதனால் நிலப்பரப்பு, போக்குவரத்து வசதி, பாதுகாப்பு அம்சங்கள், சுற்றுச்சூழல் தாக்கம்,...










