ரூ.256.44 கோடி பணமோசடி வழக்கில் 3-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மீண்டும் மருத்துவப் பரிசோதனை செய்ய மதுரை சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. துரை தயாநிதி பக்கவாதம் மற்றும் ஞாபக மறதியால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவரால் சி.பி.ஐ. விசாரணையை எதிர்கொள்ளும் சூழலில் இல்லை என்று ஏற்கனவே நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால், சமீபத்தில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அவர் கிரிக்கெட் போட்டியை நேரில் பார்த்தது மற்றும் தேர்தலில்...
Category: TamilNadu
NEPAL FLOODS: 400 தமிழர்களா? அமைச்சர் சொன்ன அதிர்ச்சி தகவல்!
நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் கனமழையால் சிக்கித் தவிக்கும் தமிழர்களின் எண்ணிக்கை இதுவரை கூறப்பட்ட 103-ஐ விட அதிகமாக இருக்கலாம் என்றும், தமிழகத்தில் இருந்து நேபாளம் சென்றவர்களின் எண்ணிக்கை சுமார் 400 பேர் வரை இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். 103 பேர் என முதலில் வெளியான தகவல்: நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ள பாதிப்பில் தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமானோர் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகின. முதற்கட்டமாக, சென்னை மற்றும் கும்பகோணத்தில் உள்ள தனியார் டிராவல்ஸ்...
விஜய்யுடன் நெருக்கம்.. கிரண் குமார் ரெட்டிக்கு புதிய பொறுப்பா?
தமிழ்நாடு கவர்னராக ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் நல்லாரி கிரண் குமார் ரெட்டியை நியமிக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என டெல்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கூடுதல் பொறுப்பில் கேரள கவர்னர்: தமிழ்நாடு கவர்னராக இருந்த ஆர்.என். ரவி பதவிக்காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கேரள கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் தமிழக கவர்னர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வருகிறார். கடந்த மார்ச் மாதம் முதல் தமிழ்நாடு...
ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு.. உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!
தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறை வழங்குவது தொடர்பான தனி கொள்கையை உருவாக்கக் கோரி, மதுரையைச் சேர்ந்த நர்மதா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். மனுதாரர் தனது மனுவில், “மாதவிடாய் காலங்களில் உரிய விடுமுறை இல்லாததால் பெண் ஊழியர்கள் கடுமையான உடல் மற்றும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். கர்நாடகா, பீகார், ஒடிசா, கேரளா போன்ற மாநிலங்களில் இத்தகைய விடுமுறைக் கொள்கைகள்...
சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் …கறுப்பு உடையில் வந்த மேயர் பிரியா..!
சென்னை மாநகராட்சியின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் நிதிப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கவுன்சிலர்களுக்கான வார்டு மேம்பாட்டு நிதி வழங்கப்படவில்லை என்றும், வேளச்சேரி மேம்பாலம் உள்ளிட்ட சில முக்கியத் திட்டங்களும் முன்னேறாமல் இருப்பதாகவும் மாநகரட்சி நிர்வாகம் குற்றஞ்சாட்டுகிறது. மேலும், மாநகராட்சிக்காக பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரர்களுக்கு உரிய தொகை வழங்கப்படாதது தொடர்பாகவும் புகார்கள் எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது. சென்னையில் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களுக்காக ஆண்டுதோறும் மாநகராட்சி கணிசமான தொகையை செலவிட்டு வருவதோடு, காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ள நிலையில், தனியார் நிதியுதவி...
விதியை மீறிய ECR பங்களா… மொத்தமாக காலி செய்த விஜய்..?
கெடு முடிந்த பிறகு சம்பந்தப்பட்ட கட்டிடங்களுக்கு பூட்டி சீல் வைக்கப்படும் என்றும், அதன்பின்னர் இடிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம் என்றும் மாநகராட்சி தெரிவித்துள்ளது. 10 முதல் 15 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த சில வழக்குகளில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடுகளும் நிராகரிக்கப்பட்டுள்ளன. மேலும், 3 வீடுகளின் உரிமையாளர்கள் கட்டிடங்களில் உள்ள FSI விதிமீறல்கள் மற்றும் கட்டிட விலகல்களை சரிசெய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். CRZ-II விதிகளின்படி, 1991-ம் ஆண்டில் ஏற்கெனவே இருந்த சாலை...
ரூ.1 கோடி இழப்பீடு கோரிய ஆதவ்! ஸ்டாலினுக்கு பறந்த நோட்டீஸ்! பின்னணி என்ன?
தன்னைப் பற்றி அவதூறு பரப்பியதாக ரூ.1 கோடி இழப்பீடு கோரி ஆதவ் அர்ஜுனா தொடர்ந்த வழக்கில், மு.க.ஸ்டாலினுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. திமுக ஐடி விங் சமூக வலைதளத்தில் தன்னைப் பற்றி அவதூறான தகவல் வெளியிட்டதாகக் கூறி, ரூ.1 கோடி இழப்பீடு கோரி அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தொடர்ந்த வழக்கில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. சர்ச்சையை ஏற்படுத்திய சமூக வலைதளப் பதிவு: சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தாக்கல்...
விஜய் இந்திய பிரதமர் என்ன.. அமெரிக்க ஜனாதிபதியே ஆகட்டும் – அன்பில் மகேஷ் பேச்சு..!
திருச்சியில், முன்னாள் அமைச்சர் அன்பில் பொய்யாமொழியின் 27-வது ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சட்டமன்ற செயல்பாடுகள் மற்றும் அரசின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்தார். சட்டமன்றம் மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் இடமாக இருக்க வேண்டும் என்றும், எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு ஆளுங்கட்சியினர் நேரடியான பதில்களை வழங்க வேண்டும் என்றும் அவர் கூறினார். கேள்விகளுக்கு...
பரபரப்பாக நடக்கும் சட்டப்பேரவை.. குறுக்கே இந்த முதல்வர் வந்தால்… இடத்தை மாற்றிய விஜய்…!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று(ஆகஸ்ட் 27) சமூகநீதி மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்ந்த மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. இதையொட்டி ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்களது கருத்துகளை முன்வைத்தனர். முதலமைச்சர் விஜய் வழக்கமாக சட்டப்பேரவை நிகழ்வுகளில் காலை முதலே பங்கேற்பது வழக்கம். ஆனால், இன்று பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டியிருந்ததால் அவர் காலையில் சட்டப்பேரவைக்கு வரவில்லை. டிஎன்பிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி, காவலர்களுக்கான குடியிருப்பு கட்டிடங்களைத் திறந்து...
நாளை முதல் டாஸ்மாக் ஊழியர்கள் ஸ்ட்ரைக்… மதுபிரியர்களின் நிலை என்ன?
தமிழ்நாட்டில் ஏற்கனவே தூய்மைப் பணியாளர்கள் மற்றும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது டாஸ்மாக் ஊழியர்களும் போராட்டக் களத்தில் இறங்குவதாக அறிவித்துள்ளனர். தங்களது நீண்டகால கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக டாஸ்மாக் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. இதனால் தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் மதுபானக் கடைகள் வழக்கம்போல் செயல்படுமா? மது விற்பனை பாதிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. டாஸ்மாக் விவகாரத்தில் அரசின் அதிரடி: 2026 தமிழ்நாடு...










