Category: TamilNadu

Home TamilNadu
"நடிகர், நடிகைகளை மட்டும்தான் பார்ப்பாரா ?" – கொதிக்கும் கூடங்குளம் போராளி…
Post

"நடிகர், நடிகைகளை மட்டும்தான் பார்ப்பாரா ?" – கொதிக்கும் கூடங்குளம் போராளி…

“நடிகர், நடிகைகளை சந்தித்துப் பேசும் முதலமைச்சர் விஜய், எங்களைப் போன்ற சூழலியாளர்களை சந்திக்க மறுப்பது ஏன்?” என்று கேள்வி எழுப்புகிறார் கூடங்குளம் அணு மின் நிலையப் போராளி சுப.உதயகுமார். சூழலியலாளர், கல்வியாளர். சமூக செயற்பாட்டாளர் என்று அறியப்பட்ட சுப.உதயகுமார், நெல்லை மாவட்டம், கூடங்குளம் அணு மின் நிலைய திட்டத்தை எதிர்த்து மக்கள் இயக்கம் தொடங்கி தீவிரமாகப் போராடியவர். அவர்தான் தற்போது, முதலமைச்சர் விஜய்யை சந்திக்க முடியவில்லை என்கிற வேதனையில் கடிதம்  எழுதி சமூகவலைதளத்தில் வெளியிட்டிருக்கிறார். அவரது கடிதம்...

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கு தடை? தவெக வேட்பாளர்களுக்கு புது சிக்கல்..!
Post

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கு தடை? தவெக வேட்பாளர்களுக்கு புது சிக்கல்..!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 7 சட்டசபை தொகுதிகளில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் வரும் அக்டோபர் 6-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9-ந் தேதி தொடங்கிய நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இடைத்தேர்தலில் த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க. என அடுத்தடுத்து கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. கடந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு மதுராந்தகம் தொகுதியில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேலும், தாராபுரம் தொகுதியில் வெற்றி பெற்ற...

காலை உணவுத் திட்டத்திலும் கைவைத்த விஜய் அரசு… ஆதாரத்தோடு கொந்தளிக்கும் அன்புமணி..!
Post

காலை உணவுத் திட்டத்திலும் கைவைத்த விஜய் அரசு… ஆதாரத்தோடு கொந்தளிக்கும் அன்புமணி..!

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு எட்டாம் வகுப்பு வரை நீட்டிக்கப்பட்ட பெருந்தலைவர் காமராசர்  காலை உணவுத் திட்டத்தின் தொடக்க விழா வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான தேவைகள் அனைத்தையும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள்  அவர்களின் சொந்த செலவில் மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை ஆணையிட்டிருக்கிறது. இதனை கண்டித்து பாமகவின்  தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, காலை உணவுத் திட்ட...

பட்டிமன்றத்தின் குரல் ஓய்ந்தது… அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!
Post

பட்டிமன்றத்தின் குரல் ஓய்ந்தது… அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!

பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 90. அவரது மறைவு தமிழ் ஆர்வலர்கள், இலக்கிய உலகினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரையைச் சேர்ந்த சாலமன் பாப்பையா, பட்டிமன்ற நிகழ்ச்சிகள் வாயிலாக தமிழ்நாடு மக்களிடம் தனக்கென தனி இடத்தைப் பெற்றவர். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராக பணியாற்றிய அவர், தமிழ் இலக்கியங்கள் குறித்த தனது ஆழமான உரைகளாலும் புகழ்பெற்றார். திருக்குறள் உள்ளிட்ட பழந்தமிழ்...

தமிழ் பேச்சுலகின் ஜாம்பவான் சாலமன் பாப்பையா… நாளை இறுதி பயணம்!
Post

தமிழ் பேச்சுலகின் ஜாம்பவான் சாலமன் பாப்பையா… நாளை இறுதி பயணம்!

தமிழறிஞரும், பிரபல பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா உடல்நலக் குறைவு காரணமாக மதுரையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலமானார். அவருக்கு வயது 90. தமிழ் பேச்சுலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்திருந்த அவரது மறைவு, தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல் : மறைந்த சாலமன் பாப்பையாவின் உடல், மதுரை ஆரப்பாளையம் அருகே உள்ள ஞானஒளிபுரம் பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின்...

“விஜய் ஆட்சி நன்றாக இல்லை!” சாலமன் பாப்பையாவின் கடைசி பேட்டி மீண்டும் வைரல்
Post

“விஜய் ஆட்சி நன்றாக இல்லை!” சாலமன் பாப்பையாவின் கடைசி பேட்டி மீண்டும் வைரல்

தமிழறிஞரும், பேராசிரியரும், பட்டிமன்ற ஜாம்பவானுமான பிரபல பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா தனது 90-வது வயதில் இன்று காலமானார் என்ற செய்தி தமிழ்நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் மொழி, இலக்கியம், சமூக சிந்தனைகளை எளிய முறையில் மக்களிடம் கொண்டு சேர்த்த அவரது மறைவு, தமிழ்கூறு நல்லுலகிற்கு மிகப்பெரும் இழப்பாக பார்க்கப்படுகிறது. 1936ஆம் ஆண்டு மதுரை திருமங்கலம் அருகே உள்ள சாத்தங்குடியில் பிறந்த சாலமன் பாப்பையா, பேராசிரியர், எழுத்தாளர், பேச்சாளர், பட்டிமன்ற நடுவர், நடிகர் என...

"ஏம்மா… கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க…" பட்டிமன்ற ஜாம்பவானின் புகழ்மிக்க உரைகள் !
Post

"ஏம்மா… கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க…" பட்டிமன்ற ஜாம்பவானின் புகழ்மிக்க உரைகள் !

தமிழ்நாட்டின் பட்டிமன்ற மேடைகளில் நகைச்சுவையோடும், நயமான தமிழோடும், வாழ்க்கையைத் தொட்டுச் செல்லும் கருத்துகளோடும் பல தலைமுறை மக்களை கவர்ந்தவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா. தமிழ் இலக்கியத்தின் ஆழமான கருத்துகளை எளிய மக்களுக்கும் புரியும் வகையில் எடுத்துச் சொன்ன அவரது பேச்சு பாணி தனித்துவமானது. ஒரு பேராசிரியராக தமிழ் இலக்கியத்தை கற்றுத் தந்ததைக் கடந்து, பட்டிமன்ற மேடைகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என பல்வேறு தளங்களின் வழியாக தமிழையும், அதன் வாழ்வியல் சிந்தனைகளையும் மக்களிடம் கொண்டு சென்றவர் சாலமன் பாப்பையா....

“என் தந்தையை இழந்துட்டேன்” – சாலமன் பாப்பையா மறைவு குறித்து சீடர்கள் உருக்கம்!
Post

“என் தந்தையை இழந்துட்டேன்” – சாலமன் பாப்பையா மறைவு குறித்து சீடர்கள் உருக்கம்!

தமிழறிஞரும், பேராசிரியரும், பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா வயது முதிர்வு காரணமாக தனது 90-வது வயதில் காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக மதுரையில் ஓய்வில் இருந்து வந்த அவர் இன்று உயிரிழந்தார். அவரது மறைவு தமிழ்நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 1936ஆம் ஆண்டு மதுரை திருமங்கலம் அருகே உள்ள சாத்தங்குடியில் பிறந்த சாலமன் பாப்பையா, தமிழ் இலக்கியங்களையும் சமூகக் கருத்துகளையும் சாமானிய மக்களுக்கும் எளிதில் புரியும் வகையில் கொண்டு சென்றவர். பேராசிரியர், எழுத்தாளர், பேச்சாளர், பட்டிமன்ற...

4 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது….போராட்டத்தை கையில் எடுத்த ஊழியர்கள்!
Post

4 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது….போராட்டத்தை கையில் எடுத்த ஊழியர்கள்!

அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிப்பது உள்ளிட்ட பல்வேறு நீண்டகாலக் கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் சுமார் 8½ லட்சம் வங்கி ஊழியர்கள் இன்று ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக வங்கி ஊழியர் சங்கங்களின் ஐக்கிய முன்னணி அறிவித்துள்ளது. சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளரும், வங்கி ஊழியர் சங்கங்களின் ஐக்கிய முன்னணி ஒருங்கிணைப்பாளருமான எச்.வெங்கடாசலம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், அனைத்துச் சனிக்கிழமைகளிலும் விடுமுறை வழங்க வேண்டும்...

விஜயின் லண்டன் மிஷன்! யாருடன் ஒப்பந்தம்? எவ்வளவு முதலீடு?
Post

விஜயின் லண்டன் மிஷன்! யாருடன் ஒப்பந்தம்? எவ்வளவு முதலீடு?

தமிழ்நாட்டிற்கு அதிகளவிலான தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இங்கிலாந்து தலைநகர் லண்டன் புறப்பட்டுச் சென்றுள்ளார். உலகளாவிய முதலீட்டாளர்களை சந்தித்து, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குவது இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கமாகும். தமிழ்நாட்டை ஆசியாவிலேயே முதலீட்டுக்கு ஏற்ற முன்னணி மாநிலமாக உருவாக்க வேண்டும் என்ற இலக்குடன் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முதலமைச்சர் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற குறுகிய காலத்திலேயே முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமான...

× Free India Logo
Welcome! Free India
FREE INDIA · Reader account

Login is optional. You can close this window and keep reading.