திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குள் செல்போனுக்கு தடை : ஜூலை 1 முதல் கடுமையாக நடைமுறைப்படுத்த திட்டம் 

Home TamilNadu திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குள் செல்போனுக்கு தடை : ஜூலை 1 முதல் கடுமையாக நடைமுறைப்படுத்த திட்டம் 
திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குள் செல்போனுக்கு தடை : ஜூலை 1 முதல் கடுமையாக நடைமுறைப்படுத்த திட்டம் 
Spread the love

இதுகுறித்து கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி, கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படும் பொது தரிசன வரிசை, ரூ.100/ விரைவு தரிசன கட்டண வரிசை, மூத்தக் குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வரிசை போன்ற அனைத்துப் பகுதிகளிலும், பக்தர்கள் முழுமையாகப் பரிசோதனை செய்யப்பட்டு அதன் பின்னரே கோயிலுக்குள் அனுமதிக்கப்படவுள்ளனர்.

எனவே, பக்தர்கள் கோயிலுக்கு வருகை தரும்போது தங்களது கைப்பேசிகளை, தாங்கள் தங்கியிருக்கும் இடங்களிலோ தங்களது வாகனங்களிலோ, பாதுகாப்பாக வைத்துவிட்டு சுவாமி தரிசனம் செய்ய திருக்கோயிலுக்கு வருகை தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், பக்தர்கள், தமது செல்போன்களைப் பாதுகாப்பாக வைப்பதற்காக ஆங்காங்கே கோயில் நிர்வாகம் சார்பில் செல்போன் பாதுகாக்கும் இடங்கள் நிறுவப்பட்டுள்ளன. 

அவற்றைப் பயன்படுத்தி பக்தர்கள் தங்கள் கைப்பேசிகளைப் பாதுகாப்பாக வைத்துவிட்டு தரிசனத்திற்குச் செல்லுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. பரிசோதனையின்போது பக்தர்களிடம் கைப்பேசிகள் இருப்பது கண்டறியப்பட்டால், அவற்றைப் பறிமுதல் செய்து பாதுகாப்புப் பெட்டகங்களில் வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

× Free India Logo
Welcome! Free India