என்ன சிம்ரன் இதெல்லாம்? முதல்வர் விஜயை சாடும் நெட்டிசன்கள்..!

Home TamilNadu என்ன சிம்ரன் இதெல்லாம்? முதல்வர் விஜயை சாடும் நெட்டிசன்கள்..!
என்ன சிம்ரன் இதெல்லாம்? முதல்வர் விஜயை சாடும் நெட்டிசன்கள்..!
Spread the love

முதலமைச்சராக விஜய் பதவியேற்றுக் கொண்ட பின்னர் சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு தளது குடும்பத்துடன் சென்று சந்தித்துள்ளார் சிம்ரன். அவரைத் தொடர்ந்து நடிகர் சிலம்பரசனும் சென்று சந்தித்தார். 

இந்தச் சந்திப்பு தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்த சிம்ரன், ”சினிமாவில் ஒன்றாக இணைந்து நடித்து பல ஆண்டுகளுக்குப் பின்னர் நான் நமது முதலமைச்சர் விஜய்யை எனது  குடும்பத்துடன் சந்தித்தேன். கோடிக்கணக்கான மக்களை அவர்பால் ஈர்த்த அந்த அன்பும் பணிவும் பொறுப்பும் இன்னும் அவரிடத்தில் அப்படியே உள்ளது. நமது மாநிலத்தின் முன்னேற்றத்திற்கான அவரது தொலைநோக்குப் பார்வையும் வியக்க வைக்கிறது. அவர் தமிழ்நாட்டை முன்னோக்கி வழிநடத்திச் செல்லும் இவ்வேளையில், அவருக்கு என் மனமார்ந்த  வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்று ஒரு மாதக் காலம் ஆன நிலையில், அலுவலகப் பணிகள் மற்றும் அவரது விவாகரத்து விசாரணை என அடுத்தடுத்து பல்வேறு விஷயங்கள் அவரை சுற்றி இருக்கின்றன.

இந்த நிலையில், இவற்றையெல்லாம் விட்டுவிட்டு, நடிகர், நடிகைகளை சந்திக்க நேரம் ஒதுக்குவது சரியா? குழந்தைகள் பாலியல் குற்றங்களுக்கு ஆளாக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்து வருகின்றன… இவற்றைக் கண்டுக் கொள்ளாமல் இருப்பது நியாயமா? இது மகளிருக்கான ஆட்சி, குழந்தைகளுக்கான ஆட்சி என்று சொல்கிறீர்களே மகளிருக்கும் குழந்தைங்களுக்கும் பாதுகாப்பு கொடுக்காமல், நட்சத்திரங்களை சந்திப்பது தான் உங்கள் அரசா? குட்டி நண்பா நண்பீஸ் என்று சொல்லி வாக்கு கேட்டீர்களே, அவர்கள் பாதிக்கப்படும் போது என்ன நடந்தது என்றாவது கேட்கிறீர்களா?  என்று சோஷியல் மீடியாவில் முதலமைச்சர் விஜயை கடுமையாக சாடி வருகின்றனர்.


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

× Free India Logo
Welcome! Free India