பொங்கல் வருவதற்கு முன்பாகவே, ரேஷன் கடைகளில் சிறப்புத் தொகுப்பு குறித்து பட்ஜெட் ஒதுக்குவது வழக்கமான ஒன்றுதான். எவருடைய ஆட்சியாக இருந்தாலும் பொங்கலுக்கு வேட்டி சேலை மற்றும் கரும்புடன் கூடிய பொருட்கள் வழங்குவதைக் கொண்டிருக்கிறார்கள். திராவிடக் கட்சிகளை வீட்டில் அமரவைத்துவிட்டு, விஜய் தலைமையிலான அரசு, இன்றைக்கு 100 நாள் கடந்து ஆட்சி செய்துகொண்டிருக்கிறது. சட்டசபையில், வரவிருக்கும் ஜனவரி மாத பொங்கலுக்கு மக்களுக்கு கொடுக்கப்படுகிற பொங்கல் சிறப்புத் தொகுப்பு குறித்தான பேச்சு ‘கிழிஞ்சது போ’ என்கிற அளவுக்கு பேசுபொருளாகியிருக்கிறது. குடும்பத்தின்...
Category: TamilNadu
METTUR DAM : டெல்டா விவசாயிகளுக்கு குட் நியூஸ்! மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதல்வர்.
காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து முதலமைச்சர் விஜய் இன்று (செப்டம்பர் 1) தண்ணீரைத் திறந்து வைத்தார். இதற்காகச் சேலம் வருகை தந்த அவர், அணையின் மேல்பகுதியில் இருந்து காவிரி ஆற்றில் மலர்கள் மற்றும் நெல் தூவி வணங்கித் தண்ணீரைத் திறந்து வைத்தார். தாமதமான பாசன நீர் திறப்பு வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ஆம் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு தொடக்கத்தில்...
கிடுகிடுவென உயர்ந்த சிலிண்டர் விலை! ஹோட்டல்களில் விலை உயர்வு அபாயம்!
மாதத்தின் முதல் நாளான இன்று, சமையல் கியாஸ் சிலிண்டர்களுக்கான புதிய விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. அதன்படி, சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.10.50 அதிகரித்துள்ளது. ரூ.2,916.50-க்கு விற்பனை : விலை உயர்வைத் தொடர்ந்து, சென்னையில் 19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாட்டு கியாஸ் சிலிண்டர் தற்போது ரூ.2,916.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு முன்பு இருந்த விலையுடன் ஒப்பிடும்போது ரூ.10.50 அதிகரித்துள்ளது. வணிக பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டர்களின்...
விஜய்யின் முதல் வெளிநாட்டு பயணம்.. பின்னணி என்ன?
தொழில் முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு ஈர்க்கும் நோக்கில், முதலமைச்சர் விஜய் வரும் 10-ம் தேதி பிரிட்டன் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சருடன் தொழில்துறை உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவும் இந்த வெளிநாட்டு பயணத்தில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு விஜய் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு அரசு முறைப் பயணம் இதுவாக இருக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலீடுகளை ஈர்க்கும் முயற்சி : தமிழ்நாட்டில் புதிய தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்களை உருவாக்குவதற்கான முதலீடுகளை ஈர்க்கும்...
METTUR DAM: 90 அடியை கடந்த மேட்டூர் அணை! முதலமைச்சர் விஜய் நேரில் தொடங்கி வைப்பு!
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கான தண்ணீர் இன்று (செவ்வாய்க்கிழமை) திறக்கப்படுகிறது. இந்த நிகழ்வை முதலமைச்சர் விஜய் நேரில் பங்கேற்று தொடங்கி வைக்கிறார். இதையொட்டி சேலம் மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. டெல்டா விவசாயிகளின் முக்கிய நீராதாரம் : காவிரி டெல்டா மாவட்டங்களின் விவசாயத்திற்கு மேட்டூர் அணை முக்கிய ஆதாரமாக இருந்து வருகிறது. இந்த அணையின் மூலம் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், பெரம்பலூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர், மயிலாடுதுறை, அரியலூர்...
சென்னை மேயர் எங்க பேச்சே கேக்குறதில்ல… திமுகவிடம் Complaint செய்த அமைச்சர்!
அப்போது, மதுரை மாநகராட்சியில் சொத்து வரி முறைகேடு தொடர்பாக தவெக எம்எல்ஏ தங்கப்பாண்டி குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதற்கு பதிலளித்த திமுக எம்எல்ஏ கே.என்.நேரு, முறைகேடு தொடர்பாக ஆதாரங்கள் இருந்தால் அவற்றை வெளிக்கொண்டு வந்து நடவடிக்கை எடுக்கலாம் என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, மாநகராட்சிகளில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக குறிப்பிட்டார். மேலும், மாநில அரசு நிதி ஒதுக்கீடு செய்தாலும், பல...
துரை தயாநிதிக்கு மீண்டும் மருத்துவப் பரிசோதனை.. சி.பி.ஐ. நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
ரூ.256.44 கோடி பணமோசடி வழக்கில் 3-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மீண்டும் மருத்துவப் பரிசோதனை செய்ய மதுரை சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. துரை தயாநிதி பக்கவாதம் மற்றும் ஞாபக மறதியால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவரால் சி.பி.ஐ. விசாரணையை எதிர்கொள்ளும் சூழலில் இல்லை என்று ஏற்கனவே நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால், சமீபத்தில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அவர் கிரிக்கெட் போட்டியை நேரில் பார்த்தது மற்றும் தேர்தலில்...
NEPAL FLOODS: 400 தமிழர்களா? அமைச்சர் சொன்ன அதிர்ச்சி தகவல்!
நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் கனமழையால் சிக்கித் தவிக்கும் தமிழர்களின் எண்ணிக்கை இதுவரை கூறப்பட்ட 103-ஐ விட அதிகமாக இருக்கலாம் என்றும், தமிழகத்தில் இருந்து நேபாளம் சென்றவர்களின் எண்ணிக்கை சுமார் 400 பேர் வரை இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். 103 பேர் என முதலில் வெளியான தகவல்: நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ள பாதிப்பில் தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமானோர் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகின. முதற்கட்டமாக, சென்னை மற்றும் கும்பகோணத்தில் உள்ள தனியார் டிராவல்ஸ்...
விஜய்யுடன் நெருக்கம்.. கிரண் குமார் ரெட்டிக்கு புதிய பொறுப்பா?
தமிழ்நாடு கவர்னராக ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் நல்லாரி கிரண் குமார் ரெட்டியை நியமிக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என டெல்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கூடுதல் பொறுப்பில் கேரள கவர்னர்: தமிழ்நாடு கவர்னராக இருந்த ஆர்.என். ரவி பதவிக்காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கேரள கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் தமிழக கவர்னர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வருகிறார். கடந்த மார்ச் மாதம் முதல் தமிழ்நாடு...
ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு.. உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!
தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறை வழங்குவது தொடர்பான தனி கொள்கையை உருவாக்கக் கோரி, மதுரையைச் சேர்ந்த நர்மதா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். மனுதாரர் தனது மனுவில், “மாதவிடாய் காலங்களில் உரிய விடுமுறை இல்லாததால் பெண் ஊழியர்கள் கடுமையான உடல் மற்றும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். கர்நாடகா, பீகார், ஒடிசா, கேரளா போன்ற மாநிலங்களில் இத்தகைய விடுமுறைக் கொள்கைகள்...










