அரசுப் பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்து குறைபாட்டை குறைக்கும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவுத் திட்டம் இன்று மேலும் விரிவுபடுத்தப்படுகிறது. இதற்கான தொடக்க விழா சென்னை திருவான்மியூரில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் இன்று காலை நடைபெறுகிறது. பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் காலை 8.30 மணியளவில் தொடங்கி வைக்க உள்ளார். இதனை முன்னிட்டு மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ள காலை உணவுகளை தயார் செய்யும் பணிகள் தீவிரமாக...
Category: TamilNadu
“முதல்வருக்கே தெரியாமல் அரசாணையா?” – ஆதவை வெளுத்து வாங்கும் பெ.சண்முகம்!
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் விவகாரம் தமிழ்நாடு அரசியலில் தொடர்ந்து விவாதப் பொருளாகி வருகிறது. இந்த நிலையில், “முதலமைச்சர் விஜய் இறுதி முடிவே எடுக்கவில்லை என்றால், புதிய தலைமைச் செயலகம் தொடர்பாக அரசாணை எப்படி வெளியானது?” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதிய தலைமைச் செயலகம் தொடர்பாக அரசுத் தரப்பில் வெளியான அரசாணை எண் 564-ஐ சுட்டிக்காட்டினார். சீனிவாசபுரத்தில் புதிய தலைமைச் செயலகம்...
6, 7, 8 – வகுப்பு மாணவர்களுக்கும் காலை உணவு ! ரெடியான மெனு !
தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்து மற்றும் கல்வி நலனை கருத்தில் கொண்டு செயல்படுத்தப்பட்டு வரும் காமராஜர் காலை உணவுத் திட்டம் தற்போது மேலும் விரிவுபடுத்தப்படுகிறது. இதன்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கப்பட உள்ளது. விரிவாக்கம் செய்யப்பட்ட திட்டத்தின் தொடக்க விழா சென்னையின் திருவான்மியூரில் உள்ள நடுநிலைப்பள்ளியில் செப்டம்பர் 22ஆம் தேதி நடைபெற உள்ளது. காலை 8.30 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில்...
மக்களே உஷார்!..டெங்குவை விட வேகமாக பரவும் உண்ணிக் காய்ச்சல்…மருத்துவர்கள் எச்சரிக்கை!
தமிழ்நாட்டில் இன்னும் சில வாரங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கயிருப்பதால் இதற்கு முன்பே டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது. இது மக்களுக்கு அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ள நிலையில்,உண்ணிக் காய்ச்சல் என்ற புதிய நோய் பாதிப்பும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது வரை 17,000பேர் டெங்கு காய்ச்சலிலும் 4,619 பேர் உண்ணி காய்ச்சலிலும் பாதிக்கப்பட்டதாக சுகாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் கூறியுள்ளார். உண்ணிக் காய்ச்சல் என்றால் என்ன? (scrub typhus அல்லது tick fever) என்பது புல்,புதர்கள் மற்றும் வயல்வெளிகளில் காணப்படும்...
மழை பாதிப்பை தடுக்க என்னென்ன நடவடிக்கைகள்? ACTION MODE-ல் முதலமைச்சர் விஜய் !
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், அதனை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விஜய் இன்று (திங்கட்கிழமை) தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். பருவமழை பாதிப்புகளை தடுக்கும் நடவடிக்கைகள் : தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்யும் காலமாகும். இந்த காலகட்டத்தில் கனமழை, வெள்ளம், நீர்த்தேக்கம் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், அரசு சார்பில் முன்கூட்டியே பல்வேறு பாதுகாப்பு...
ஆக்ரமிப்பாளர்களின் பிடியில் அண்ணாமலையார் ! அகற்றச் சொல்லும் நீதிமன்றம் !
விசேஷ நாட்கள் என்றில்லை, சாதாரண நாட்களிலும்கூட திருவண்ணாமலை பக்தர்கள் கூட்டத்தால் திமிலோகப்படுகிறது. கடும் நெரிசலில் வெளியூர் பக்தர்கள் மட்டுமல்லாமல், உள்ளூர் பொது மக்களும் அல்லல்பட்டுவருகின்றனர். திருவண்ணாமலை அடிவாரத்தில் இருக்கும் ஆக்ரமிப்பு அராஜகமே இதற்கெல்லாம் காரணம் என்றும், இத்தகைய ஆக்ரமிப்புகளுக்கு அனைத்துக் கட்சிகளுமே ஆதரவாக நிற்கின்றன என்றும் வெடிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். இதுபற்றி நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர்கள், “திருப்பதி திருமலையில் ஒரு தனிநபர் ஆக்ரமிப்புகூட கிடையாது. இதனால் எத்தனை ஆயிரம் பக்தர்கள் அங்கு வந்தாலும் வாகனங்களை நிறுத்தவோ,...
சென்னையில் இன்று தங்கம் விலை மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. சமீப நாட்களாக ஏற்றத் தாழ்வுகளை சந்தித்து வந்த தங்கத்தின் விலை, சர்வதேச சந்தை மாற்றங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் வர்த்தக நடவடிக்கைகளால் உயர்ந்த நிலையில் தொடர்கிறது.
தற்போதைய சந்தை நிலவரப்படி, 22 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு சுமார் ₹14,000-க்கு மேல் விற்பனையாகி வருகிறது. ஒரு சவரன் (8 கிராம்) தங்கத்தின் விலை ₹1.12 லட்சத்தைத் தாண்டிய நிலையில் உள்ளது. கடந்த வாரத்தில் விலையில் ஏற்றமும் இறக்கமும் ஏற்பட்டாலும், மாத அளவில் தங்கத்தின் விலை உயர்வுப் பாதையிலேயே உள்ளது. சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு மாற்றம், மத்திய வங்கிகளின் வட்டி விகித முடிவுகள் மற்றும் உலகளாவிய பொருளாதார சூழ்நிலைகள் தங்க விலையை நேரடியாக...
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026: இந்தியாவின் பதக்க வேட்டை தொடக்கம் – டெக்பாலில் வரலாறு படைக்க க்விம்சி டி’சோசா தயாராகிறார்
நாகோயா, ஜப்பான், செப். 19: ஆசியாவின் மிகப்பெரிய பல்வகை விளையாட்டுத் திருவிழாவான ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 (Asian Games 2026) ஜப்பானின் ஐச்சி–நாகோயா நகரில் இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. 45 நாடுகள் மற்றும் பிராந்தியங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் இதில் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்த உள்ளனர். இந்தியா தனது முந்தைய ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெற்ற சாதனைகளை மேலும் மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்த போட்டியில் களமிறங்கியுள்ளது. இந்தியாவின் கவனத்தை அதிகம் ஈர்த்துள்ள விளையாட்டு...
செப். 28 முதல் அமல்: பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் திட்டம்
சென்னை, செப். 19:தமிழக அரசு மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலனை மேம்படுத்தும் நோக்கில் புதிய நலத்திட்டத்தை அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது. இந்தத் திட்டம் வருகிற செப்டம்பர் 28 முதல் நடைமுறைக்கு வர உள்ளது. மக்கள் அதிக அளவில் அரசு மருத்துவமனைகளை பயன்படுத்த ஊக்குவிப்பதற்கும், பாதுகாப்பான மகப்பேறு சேவைகளை அனைவருக்கும் கிடைக்கச் செய்வதற்கும் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது. தாய்...
மின் வெட்டுக்கு முற்றுப்புள்ளி…. எண்ட்ரி கொடுக்கும் ராதாகிருஷ்ணன்..!
மாநிலத்தில் மின்சாரத் துறையை ஒழுங்குபடுத்தும் முக்கிய அமைப்பாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் செயல்பட்டு வருகிறது. கடந்த 1999-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த ஆணையம், மின்சாரக் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்களில் முடிவெடுக்கும் அதிகாரத்தை கொண்டுள்ளது. மின் உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து மின்சாரம் வாங்குவது, மின்சாரத்தை கொண்டு செல்வதற்கான கட்டணங்களை ஒழுங்குபடுத்துவது என பல்வேறு பணிகளையும் ஆணையம் மேற்கொள்கிறது. இதுதவிர, மின்சாரத் துறையில் அமல்படுத்த வேண்டிய விதிமுறைகளை உருவாக்குவதுடன், அது தொடர்பான சட்டப்பூர்வ விவகாரங்களையும் விசாரிக்கிறது....







