அமோனியா வாயு கசிவு தனியார் ஆலையை நிரந்தரமாக மூட ஆய்வு குழு பரிந்துரை 

Home TamilNadu அமோனியா வாயு கசிவு தனியார் ஆலையை நிரந்தரமாக மூட ஆய்வு குழு பரிந்துரை 
அமோனியா வாயு கசிவு தனியார் ஆலையை நிரந்தரமாக மூட ஆய்வு குழு பரிந்துரை 
Spread the love

கடந்த ஜூன் 21, 2026 அன்று திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர் கிராமத்தில் உள்ள ‘M/s St. Peter & Paul Seafoods Exports Private Limited’ என்ற தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் நிகழ்ந்தது. அமோனியா வாயு கசிவு காரணமாக இதுவரை 11 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர் மற்றும் 60-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முதலமைச்சர் விஜய்யின் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட இந்த ஆய்வுக் குழுவில் பின்வரும் முக்கிய அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் (DISH)தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் (TNPCB)பொதுச் சுகாதாரத் துறை கூடுதல் இயக்குநர் (DPH)இக்குழுவினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று, வாயு கசிவு ஏற்பட்டதற்கான தொழில்நுட்பக் காரணங்கள் மற்றும் ஆலையின் பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து தீவிர ஆய்வு நடத்தினர்.

விசாரணைக் குழுவின் முதற்கட்ட மற்றும் இடைக்கால அறிக்கைகளின்படி, ஆலையில் பல்வேறு கடுமையான பாதுகாப்பு விதிமீறல்கள் இருந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.  மறு அறிவிப்பு வரும் வரை இந்த இறால் பதப்படுத்தும் தொழிற்சாலை இயங்குவதற்கு அதிகாரிகள் உடனடியாகத் தடை விதித்து, ஆலையை மூடியுள்ளனர்.

உரிமையாளர்கள் கைது: அலட்சியமாகச் செயல்பட்டு மரணத்தை விளைவித்தல் (BNS பிரிவு 105), மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துதல் (BNS பிரிவு 125(A)) மற்றும் குழந்தை தொழிலாளர் தடைச் சட்டப் பிரிவுகளின் கீழ் ஆலை உரிமையாளர்கள் மோகன், ஜோசப் ஜெகன் மற்றும் மேலாளர் டேனியல் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

நிபுணர் குழு ஆய்வின் அறிக்கையில் தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையை நிரந்தரமாக மூட பரிந்துரை செய்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் மரணம் அடைந்துள்ளார். இதனால் பலி எண்ணிக்கை 11- ஆக உயர்ந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

× Free India Logo
Welcome! Free India