சென்னையைச் சேர்ந்த ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் ஆர். வீரமணி மீது சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், தற்போது மேலும் ஒரு போக்ஸோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கடந்த காலங்களில் நடந்ததாக கூறப்படும் சம்பவங்கள் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் அல்லது தகவல் தெரிந்தவர்கள் காவல்துறையை அணுகும் வகையில் பிரத்யேக தொடர்பு எண்ணையும் சிறப்பு புலனாய்வு போலீஸ் குழு வெளியிட்டுள்ளனர். 20 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் தொடர்பாக புதிய...
Category: TamilNadu
வீரமணியால் பறிபோன 16 வயது சிறுமியின் உயிர் ! 20 வருசத்துக்குப் பின் வெளியான உண்மை !
சென்னையைச் சேர்ந்த ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் ஆர். வீரமணி மீது சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக தொடர்ந்து புதிய புகார்கள் எழுந்து வரும் நிலையில், தற்போது மேலும் ஒரு போக்ஸோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது . குழந்தைகள் உரிமை ஆர்வலர்கள் அளித்த புகார்களை தொடர்ந்து, வீரமணி மீது ஏற்கனவே பல்வேறு பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கடந்த காலத்தில் நடைபெற்றதாக கூறப்படும் ஒரு சம்பவம் தொடர்பாக தற்போது...
தாய்மாமன் தங்க மோதிரம்…குட்டீஸ்க்கு ஆபத்தா? மருத்துவர்கள் சொல்வது என்ன?
தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் எடையில் தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியாக தவெக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று மதுரையில் முதலமைச்சர் விஜய் கையால் இத்திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். ஜுன் 22 ஆம் அன்று முதல் தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பிறந்த ஒவ்வொரு குழந்தைகளுக்கும் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட இருக்கிறது. இதற்காக 107 மருத்துவமனைகள் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, அங்கு தங்க மோதிரங்கள் பாதுகாப்பில்...
தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம்: முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்!
இத்திட்டத்தைத் தொடங்கி வைப்பதற்காகச் சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் முதலமைச்சர் விஜய் இன்று காலை மதுரை வந்தடைந்தார். அங்கு அவருக்கு அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் தவெக நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்திலிருந்து மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை வரை செல்லும் வழியெங்கும் திரண்டிருந்த ஏராளமான பொதுமக்களையும் தொண்டர்களையும் பார்த்தபடி, முதலமைச்சர் உற்சாகமாக கை அசைத்துச் சென்றார். மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை கருத்தரங்கக் கூடத்தில் நடைபெற்ற விழாவில், இத்திட்டத்தை முதலமைச்சர் விஜய்...
பதிவை மாற்றிப் போட்டு மாட்டிக்கொண்ட மின்சாரத்துறை.. கலாய்க்கும் நெட்டிசன்கள்!
தமிழ்நாட்டில் சமீபகாலமாகப் பரவலாக நிலவி வரும் மின்தடைப் பிரச்னை, பொதுமக்களைத் தாண்டி அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளிலேயே அரங்கேறி வருவது பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது. குறிப்பாக ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், செங்கோட்டையன் போன்ற அமைச்சர்கள் கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் மின்தடை ஏற்படுவதும், அது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாவதும் வாடிக்கையாகி வருகிறது. அந்த வகையில், மதுரையில் உள்ள அரசு சட்டக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் பங்கேற்றார். அப்போது மேடையில் நீதிபதி ஒருவர்...
என்கிட்ட இவ்ளோ பணம்,நகை இருக்கு ! கொள்ளையடித்த கொள்ளையர்கள் ! பெண் யூடியூபர் கதறல் !
நாகர்கோவிலில் பிரபல பெண் யூடியூபர் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் பிரபலமாக இருக்கும் அந்த குடும்பத்தின் வீட்டை நோட்டமிட்ட மர்ம நபர்கள், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தை பயன்படுத்தி லட்சக்கணக்கான மதிப்புள்ள நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். வெளியூர் சென்ற குடும்பம்… வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி : நாகர்கோவில் அருகே உள்ள தம்பத்துக்கோணம் வி.ஐ.பி கார்டன் பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார். தொழிலதிபரான இவரது மனைவி மதுமிதா, சமூக...
தேர்தலில் யார் அதிக செலவு செஞ்சாங்க? கணக்கு காட்டாத தவெக.. டாப் லிஸ்டில் திமுக..!
தேர்தல் காலத்தில் கட்சிகளின் பிரசாரம், விளம்பரங்கள், பொதுக்கூட்டங்கள், வேட்பாளர்களுக்கான செலவுகள் உள்ளிட்டவை தனித்தனியாக கணக்கிடப்பட்டுள்ளன. வேட்பாளர்களுக்கான செலவுக்கு தேர்தல் ஆணையம் தனி உச்சவரம்பை நிர்ணயித்திருந்தாலும், கட்சிகளின் ஒட்டுமொத்த பிரசாரச் செலவுகள் தனியாக கணக்கிடப்பட்டு தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்யப்படுகின்றன. திமுக – ரூ.197.85 கோடி திமுக தாக்கல் செய்துள்ள அறிக்கையின்படி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி தேர்தலுக்காக மொத்தம் ரூ.197.85 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இதில் சுமார் ரூ.149.90 கோடி கட்சியின் பொதுப் பிரசாரம் மற்றும் விளம்பரங்களுக்காகவும், ரூ.47.95...
"நீரே இல்லை… எப்படி கொடுப்பது?" – காவிரி மேலாண்மை உத்தரவை மீறும் கர்நாடக CM !
காவிரி நீர் திறப்பு விவகாரம் மீண்டும் இரு மாநிலங்களுக்கும் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டிற்கு விநாடிக்கு 4,000 கனஅடி நீரை 15 நாட்களுக்கு திறக்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த உத்தரவை செயல்படுத்துவது தொடர்பாக கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தங்களின் நீர் இருப்பு நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், போதிய அளவு காவிரி நீர் இருந்தால் மட்டுமே தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வழங்க முடியும் என்றும் கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்....
5 அமைச்சர்கள்… ஒரே ‘கரண்ட் கட்’! – “ஒரு மாதமா இதுதான் நிலைமையா?” – அன்புமணி காட்டம்!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் இன்று காலை தேர்தல் பரப்புரைக் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. செங்கோட்டையன், அருண்ராஜ் உள்ளிட்ட 5 அமைச்சர்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தின்போது மின்தடை ஏற்பட்டதாக அன்புமணி தெரிவித்துள்ளார். “அமைச்சர்கள் கூட்டத்துக்கே கரண்ட் கட் என்றால்… சாமானிய மக்களின் நிலை என்ன?” என்ற கேள்வியை எழுப்பும் வகையில் அவரது அறிக்கை அமைந்துள்ளது. சென்னை தொடங்கி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அறிவிக்கப்படாத மின்வெட்டு மற்றும் அடிக்கடி ஏற்படும் மின்தடைகள் அதிகரித்துள்ளதாக அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். இதனால் வீடுகள்...
நிர்வாண கோலத்தில் ஜெம் வீரமணி..தேனாம்பேட்டை பங்களாவில் உல்லாசம்…சிக்கிய புதிய ஆதாரங்கள்!
சிறுமிகள் தொடர்பான பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தொழிலதிபர் ஜெம் வீரமணி தொடர்பான விசாரணையில், புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக காவல்துறை தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, தேனாம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் சில காட்சிகள் மற்றும் ஆவணங்கள் குறித்து போலீஸார் ஆய்வு மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஏற்கெனவே ஜெம் குழுமத் தலைவர் வீரமணி, அவருக்கு உதவியதாக கூறப்படும் சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்கன் ஆகியோர் கைது...










