கர்நாடக அரசுக்கு செக்…..காவிரி மேலாண்மையின் அதிரடி உத்தரவு….!

Home TamilNadu கர்நாடக அரசுக்கு செக்…..காவிரி மேலாண்மையின் அதிரடி உத்தரவு….!
கர்நாடக அரசுக்கு செக்…..காவிரி மேலாண்மையின் அதிரடி உத்தரவு….!
Spread the love

காவிரி நீர் பங்கீடு தொடர்பான கர்நாடகா தமிழ்நாடு இடையே பல ஆண்டுகளாக சிக்கல் நீடித்து வரும் நிலையில் தற்போது அதற்கு செக் வைக்கும் விதமாக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி தமிழகத்திற்கு உரிய நீர் கிடைப்பதை உறுதி செய்வதற்காக காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் டெல்லியில் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டத்தில் தமிழகம் மற்றும் கர்நாடக நீர்வளத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு பேசிய போது காவிரியில் இருந்து 29-ந்தேதி முதல் (நேற்று) தினமும் 3,500 கன அடி வீதம் அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடகாவுக்கு காவிரி நீர் முறைப்படுத்தும் குழு உத்தரவிட்டது.

இந்நிலையில் தமிழகத்திற்கு காவிரியிலிருந்து கர்நாடகா அரசு தண்ணீரை திறந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றன. ஏனென்றால் தற்போது கர்நாடகவுக்கு நீரின் தேவை அதிகமாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர்  திறந்து விடும் சூழ்நிலை  தற்போது இல்லை என அம்மாநில அரசு கூறி வருகிறது.

மேலும் தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறக்குமாறு காவிரி நீர் முறைப்படுத்தும் குழு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக அரசு முறையீடு செய்தது. இந்நிலையில் தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறக்க வேண்டும் என்று காவிரி நீர் முறைப்படுத்தும் குழு பிறப்பித்த உத்தரவை காவிரி மேலாண்மை ஆணையம் இன்று உறுதிப்படுததியுள்ளது. இதன்படி தமிழகத்திற்கு தினமும் 3500 கன அடி வீதம்  அடுத்த நாட்களுக்கு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

  

 


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

× Free India Logo
Welcome! Free India