தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், இன்று மீண்டும் விலை உயர்ந்துள்ளது. நேற்று சவரனுக்கு ரூ.400 அதிகரித்த நிலையில், இன்று சவரனுக்கு மேலும் ரூ.160 உயர்ந்துள்ளது. இதனால் நகை வாங்க திட்டமிட்டுள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் இன்று (ஆகஸ்ட் 18) “ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,14,320-க்கு” விற்பனை செய்யப்படுகிறது. நேற்று “ஒரு சவரன் ரூ.1,14,160-க்கு” விற்பனையான நிலையில், இன்று ரூ.160 அதிகரித்துள்ளது. அதேபோல், “ஒரு கிராம் தங்கத்தின்...
Category: TamilNadu
மைக்கை பிடுங்குங்க… அடுத்தடுத்து வார்த்தைவிட்ட அமைச்சர்கள்… டென்ஷனான சபாநாயகர்..!
சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற விவாதத்தின்போது பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, திமுகவை விமர்சிக்கும் வகையில் கருத்துகளை முன்வைத்தார். இதற்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அமைச்சர் பேசிய குறிப்பிட்ட பகுதியை ஏற்க முடியாது என தெரிவித்த சபாநாயகர், அந்த கருத்தை அவைக்குறிப்பில் இருந்து நீக்கினார். இதனைத் தொடர்ந்து மேகமலை விவகாரம் தொடர்பான விவாதத்தில் அமைச்சர் நிர்மல்குமார் பேசும்போது, முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். தொடர்பாக குறிப்பிட்ட கருத்துக்கும் திமுக தரப்பில் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து அந்த குறிப்பிட்ட...
லாலா கடை பர்பி சாப்பிட்டவருக்கு உடல்நலக்குறைவு… ஆக்ஷன் எடுத்த அதிகாரிகள்..!
எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட வெள்ளாண்டிவலசு பகுதியைச் சேர்ந்த சிவானந்தம் என்பவர், எடப்பாடி பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் லாலா ஸ்வீட்ஸ் கடையில் தேங்காய் பர்பி வாங்கியுள்ளார். அதனை வீட்டில் சாப்பிட்ட சில மணி நேரங்களில் வாந்தி மற்றும் தலைசுற்றல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கடை நிர்வாகத்திடம் புகார் அளித்தபோதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து சிவானந்தத்தின் உறவினர்கள் உணவு பாதுகாப்புத் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். புகாரைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட கடைக்குச் சென்ற அதிகாரிகள், அங்கு ஆய்வு...
உதயநிதியிடம் மன்னிப்பு கேட்ட முதலமைச்சர் விஜய்.. நடந்தது என்ன?
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஆகஸ்ட் 17) மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய தவெக அமைச்சர் ரஞ்சித்குமார், முன்னாள் முதலமைச்சர் மறைந்த கலைஞர் கருணாநிதியின் பெயரை குறிப்பிட்டு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அமைச்சரின் பேச்சுக்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், கண்டனமும் தெரிவித்தனர். இதனால் அவையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிடும்போது இந்த விவகாரம் குறித்து பேசினார். அப்போது, முன்னாள் முதலமைச்சர்...
எல்லை மீறிய அமைச்சர்… மீண்டும் மீண்டும் நீக்கப்பட்ட பேச்சு.. இதுக்கு இல்லையா சார் ஒரு END?
அமுதன் கொலை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கொண்டு வந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. அப்போது, மாணவர் கொலைக்கு பின்னணியில் போதைப்பொருள் விவகாரம் இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியதுடன், சட்டம்-ஒழுங்கு தொடர்பாகவும் அரசை விமர்சித்தார். இதற்கு பதிலளித்த தவெக அமைச்சர் நிர்மல் குமார், திமுக ஆட்சிக் காலத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்ததாகக் குற்றம்சாட்டினார். மேலும், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்குடன் முதலமைச்சர் குடும்பத்தினருக்கு தொடர்பு இருந்ததாகவும் அவர்...
கோவை மாணவர் கொலை விவகாரம்: சரவெடியாய் வெடித்த உதயநிதி..!
தமிழ்நாடு சட்டப்பேரவை நான்கு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று மீண்டும் கூடியது. அப்போது, கோவை கல்லூரி மாணவர் அமுதன் கொலை தொடர்பாக திமுக சார்பில் கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானம் ஏற்கப்பட்டு விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அமுதன் கொலை சம்பவத்தை கோஷ்டி மோதல் எனக் குறிப்பிடுவதை ஏற்க முடியாது என்று அவர் தெரிவித்தார். இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இந்த சம்பவம் நடைபெறவில்லை என்றும், 20 பேர் சேர்ந்து...
விசிக மாநாடு: விடுமுறை அளித்த த.வெ.க. அரசு
விசிக தலைவர் திருமாவளவன் பிறந்தநாளையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் இன்று தமிழ் தேசிய எழுச்சி மாநாடு நடைபெறவுள்ள நிலையில், உளுந்தூர்பேட்டை பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று (ஆகஸ்ட் 17) நடைபெற உள்ள தமிழ் தேசிய எழுச்சி மாநாட்டுக்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. மாநாட்டில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 50...
தவெக அரசின் 100 நாள் ஆட்சி; ஒரு யுகத்திற்கான மக்களின் மனசாட்சி- வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்!
தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி பொறுப்பேற்று இன்றுடன் 100 நாட்கள் நிறைவடைகின்றன. இதனையொட்டி, த.வெ.க. அரசின் 100-வது நாள் சாதனைகள் மற்றும் நிறைவேற்றப்பட்ட முக்கிய திட்டங்களைச் சுட்டிக்காட்டி முதலமைச்சர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் செய்தி மற்றும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். தனது பதிவில், “100 நாள் ஆட்சி என்பது ஒரு யுகத்திற்கான மக்களின் மனசாட்சி” எனக் குறிப்பிட்டு, அரசு செயல்படுத்திய நலத்திட்டங்களைப் பட்டியலிட்டுள்ளார். பெண்கள் மற்றும் சமூக நல திட்டங்கள் * ரூ.560 கோடி ஒதுக்கீட்டில் ‘தாய்மாமன் தங்க...
TN Weather: தமிழகத்தில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை!
தமிழ்நாட்டில் இன்று (ஆகஸ்ட் 17) மூன்று மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்ட செய்தி குறிப்பில், தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இந்த நிலையில், இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர்...
கோட்டையில் கொடியேற்றிய முதலமைச்சர் விஜய்… அறிவித்த அதிரடி அறிவிப்புகள் என்ன?
இந்தியாவின் 80-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் முதல்முறையாக தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். தமிழ்நாட்டில் தவெக கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு, முதலமைச்சராக விஜய் பங்கேற்கும் முதல் சுதந்திர தின விழா இதுவாகும். தேசியக் கொடியை ஏற்றிய பின்னர் சுதந்திரப் போராட்ட தியாகிகளை நினைவுகூர்ந்து வீர வணக்கம் செலுத்திய அவர், பொதுவாழ்வு, மக்கள் நலன்,...










