இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துர்கா ஸ்டாலின் ஆகிய இருவரும் பசுவுக்கும், கன்றுக்கும் வாழைப்பழம் ஊட்டினார்கள். பின்னர் அங்கு பானைகளில் பொங்கல் வைக்கப்பட்டது. அதன் பிறகு அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் பயிற்சி பெறும் மாணவிகளுக்கு பொங்கல் பரிசு பொருட்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.மேலும் விழாவில் பங்கேற்ற பெண்களுக்கும் பரிசுப் பொருட்கள்...
Category: TamilNadu
உஷாரா இருங்க மிஸ் பண்ணிடாதீங்க! டாஸ்மாக் கடைகள் 3 நாள் "லீவுங்க"
மேலும் இது குறித்து மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “வருகின்ற 16-01-2026 அன்று திருவள்ளுவர் தினம் வெள்ளிக்கிழமை). 26-01-2026 அன்று குடியரசு தினம் (திங்கட்கிழமை மற்றும் 01-02-2026 அன்று வடலூர் வள்ளலார் நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை) மேற்படி மூன்று தினங்களில் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் மதுபான கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மூடப்பட்டு விடுமுறை (Dry Day) நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மேற்படி தினத்தன்று மதுவகைகள் விற்பனை செய்யக்கூடாது என பார்வையில் காணும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது....
ஜனநாயகனுக்கு மீண்டும் சிக்கல் : சென்சார் போர்டு மேல்முறையீடு:சட்டப்படி எதிர்கொள்வோம்:தவெக வழக்கறிஞர்
நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படத்திற்கான சென்சார் சான்றிதழ் உடனடியாக வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து தவெக வழக்கறிஞர் சக்கரவர்த்தி சென்னை உயர்நீதிமன்ற வாசலில் செய்தியாளர்களை சந்தித்தார். ஜனநாயகன் படத்தை பார்த்து விட்டு சென்சார் சான்றிதழ் வழங்காமல் தணிக்கை குழுவினர் காலம் தாழ்த்தி வந்தனர். விஜய் ரசிகர்களின் கொண்டாட்டத்தை தடுக்கும் வகையில் சென்சார் போர்டு செயல்பட்டு வந்தது. பட தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்ட்டது. சென்சார்...
போகி பண்டிகை, டயர், ரசாயன பொருட்கள் எரிக்க வேண்டாம் : பொதுமக்களுக்கு மாசு கட்டுப்பாடு வாரியம் வேண்டுகோள்
இதுகுறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:-நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் பழைய கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகிப்பண்டிகையினைக் கொண்டாடி வந்துள்ளனர். இயற்கைப் பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்ட பழைய பொருட்களை தீயிட்டுக் கொளுத்தி வந்துள்ளனர். இச்செய்கையால் காற்று மாசுபடாமல் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாமல் இருந்து வந்துள்ளது. ஆனால் இன்றைய சூழலை எடுத்துக்கொண்டால், தற்பொழுது போகிப்பண்டிகையின் பொழுது பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும்...
ஆம்லெட் பிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ், தொடர்ந்து சரியும் முட்டை விலை
நாமக்கல் மண்டலத்தில் கொள்முதல் செய்யப்படும் முட்டைகளுக்கு தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு என்ற தனியார் அமைப்பு விலை நிர்ணயம் செய்து வருகிறது. அந்த விலையை கோழிப்பண்ணையாளர்களும் கடைபிடித்து வருகின்றனர். இதனிடையே, கிறிஸ்துமஸ், புத்தாண்டு போன்றவற்றால் கடந்த சில நாட்களாக முட்டை கொள்முதல் விலை 6 ரூபாய் 40 காசுகளுக்கு நிர்ணயிக்கப்பட்டது. சில்லறை விற்பனையில் முட்டை விலை ரூ.8 ஆக விற்பனை செய்யப்பட்டது. வரலாற்றில் இல்லாத அளவு முட்டை விலை கடும் உயர்வை கடந்த வாரங்களில் கண்டது. இதனால் தள்ளுவண்டி...
நாளை மறுநாள் தீர்ப்பு : ஜன 9-ம் தேதி ஜனநாயகன் ரிலீஸ் ஆவதில் சிக்கல்:விஜய் ரசிகர்கள் கவலை
நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தணிக்கைச் சான்றிதழ் தாமதம் குறித்து, படத்தின் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு இன்று (விசாரணைக்கு வந்தது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், இந்த வழக்கில் தீர்ப்பு ஜனவரி 9 ஆம் தேதி வழங்கப்படும் என உயர் நீதிமன்ற நீதிபதி அறிவித்துள்ளார். இதனால், அன்று வெளியாகவிருந்த திரைப்படத்தின் முதல் காட்சி வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. நீதிபதி சரமாரி கேள்வி வழக்கின் விசாரணை தொடங்கியதும், நீதிபதி பி.டி. ஆஷா, “ஒரு...
மாதம்பட்டி ரங்கராஜ் புதிய சிக்கல்: ஜாய் கிரிசில்டா அவதூறு பேச்சுக்கு தடை கோரிய வழக்கு:நீதிமன்றம் தள்ளுபடி
தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா, காவல் துறையில் புகார் அளித்ததுடன், சமூக வலைதளங்களில் பேட்டியும் அளித்திருந்தார். இந்நிலையில், தனக்கு எதிராக அவதூறு கருத்துக்கள் தெரிவிக்க ஜாய் கிரிசில்டா-வுக்கு தடை விதிக்கக் கோரியும், சமூக வலைதளங்களில் உள்ள வீடியோக்களை நீக்கக்கோரியும் மாதம்பட்டி ரங்கராஜ் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி என். செந்தில்குமார் முன் விசாரணைக்கு வந்தது.அப்போது ஜாய் கிரிசில்டா தரப்பில் மூத்த வழக்கறிஞர்...
பொங்கலுக்கு வெளியாகுமா விஜய் படம்? இடியாப்ப சிக்கலில் 'ஜனநாயகன்' திரைபடம்
நடிகர் விஜய்-ன் ஜனநாயகன் படம் ஜனவரி 9 ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை எனக் கூறி, படத்துக்கு தணிக்கை சான்று வழங்க உத்தரவிடக் கோரி, பட தயாரிப்பு நிறுவனமானகே. வி. என் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு, அவசர வழக்காக நீதிபதி பிடி ஆஷா முன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. பட்ச் தயாரிப்பு நிறுவனம் தரப்பில், 500 கோடி ரூபாய் முதலீட்டில் எடுக்கப்பட்டுள்ள...
9-ம் தேதி வெளியாகுமா 'ஜனநாயகன்'? தணிக்கை சான்றிதழ் வழங்கக்கோரி நடிகர் விஜய் நீதிமன்றத்தில் அவசர வழக்கு
இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய்,நடிகை பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடிப்பில் ஜனநாயகன் திரைப்படம் உருவாகி உள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி வரும் 9ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுவரை ஜனநாயகன் படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை. படத்திற்கான அனைத்து பணிகளையும் முடித்து கடந்த மாதம் தணிக்கைக்காக படக்குழு அனுப்பியது. தொடர்ந்து டிசம்பர் 19-ஆம் தேதி படத்தை பார்த்த தணிக்கைக்குழு, சில காட்சிகளை நீக்கவும், சில வசனங்களை மியூட் செய்யவும் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது....
மேல் முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி: திருப்பரங்குன்றம் தீபத்தூண்டில் தீபம் ஏற்ற வேண்டும்: நீதிபதிகள் உத்தரவு
திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என, தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்தார். இதற்கு எதிராக, தமிழக அரசு மற்றும் தர்கா நிர்வாகம் தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை, இரு நீதிபதிகள் அமர்வில் டிச., 18 ல் முடிந்தது. தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்திருந்தனர். இந்த வழக்கில் இன்று (ஜனவரி 06) காலை, 10:30 மணிக்கு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு...










