Category: TamilNadu

Home TamilNadu
அமைச்சர் அன்பில் மகேஷ் திடீர் மருத்துவமனையில் அனுமதி
Post

அமைச்சர் அன்பில் மகேஷ் திடீர் மருத்துவமனையில் அனுமதி

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வயிற்றுவலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வாலாஜாபாத், காஞ்சிபுரம், உத்திரமேரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். பள்ளி கட்டிடங்கள் குறித்தும்  நூலகங்கள் குறித்தும் கேட்டறிந்து நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கினார். மேலும் பள்ளி மாணவ, மாணவிகளின் இடைநிற்றல் குறித்து...

அக்.8ல் தமிழக அமைச்சரவைக் கூட்டம் – முக்கிய முடிவுகள் குறித்து ஆலோசனை
Post

அக்.8ல் தமிழக அமைச்சரவைக் கூட்டம் – முக்கிய முடிவுகள் குறித்து ஆலோசனை

தமிழக அமைச்சரவைக் கூட்டம் அக்.8ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அமைச்சரவை கடந்த செப்.28ம் தேதி மாற்றி அமைக்கப்பட்டது. அதன்படி, துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் தேர்வாகியுள்ளார். மேலும் புதிய அமைச்சரவையில் கோவி.செழியன், செந்தில் பாலாஜி , ராஜேந்திரன் மற்றும் நாசர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.  மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், ராமச்சந்திரன் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும், அமைச்சர்கள் பொன்முடி, கயல்விழி செல்வராஜ், மதிவேந்தன் உள்ளிட்ட6 பேர்...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பூரண நலம் பெற வேண்டும் – விஜய்
Post

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பூரண நலம் பெற வேண்டும் – விஜய்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பூரண பெற வேண்டும் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் நேற்று மாலை ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயிற்று வலி, சீரற்ற ரத்த  ஓட்டம் மற்றும் சிறுநீர் கழிப்பதில் பிரச்னை ஆகியவற்றால் அனுமதிக்கப்பட்டதாகவும் பரிசோதனைகள் அனைத்து மேற்கொள்ளப்பட்டு கூறப்பட்டது. இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் உடல் நிலை சீராக உள்ளதாகவும், 2 நாட்களில் வீடு திரும்புவார் என...

நடிகர் ரஜினிகாந்தின் உடல் நிலை – அறிக்கை வெளியிட்டது மருத்துவமனை 
Post

நடிகர் ரஜினிகாந்தின் உடல் நிலை – அறிக்கை வெளியிட்டது மருத்துவமனை 

நடிகர் ரஜினிகாந்த் உடல் நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.  நடிகர் ரஜினிகாந்துக்கு நேற்று மாலை ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயிற்று வலி, சீரற்ற ரத்த  ஓட்டம் மற்றும் சிறுநீர் கழிப்பதில் பிரச்னை ஆகியவற்றால் அனுமதிக்கப்பட்டதாகவும் பரிசோதனைகள் அனைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. ஐசியூ வார்டில் இருந்து இன்று ஜெனரல் வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் உடல் நிலை சீராக உள்ளதாகவும், 2...

கோவையில் எலிக்காய்ச்சலுக்கு சிறுவன் பலி- அலட்சியம் காட்டுகிறதா சுகாதாரத்துறை?
Post

கோவையில் எலிக்காய்ச்சலுக்கு சிறுவன் பலி- அலட்சியம் காட்டுகிறதா சுகாதாரத்துறை?

ஈரோடு மாவட்டம், பவானி அருகே உள்ள பருவாச்சி காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் பெரியசாமி- நிர்மலா தம்பதியினர், இவர்களின் இரண்டாவது மகன் தினேஷ்குமார் (13), அருகிலுள்ள அரசு  பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.தினேஷ்குமாருக்கு கடந்த மாதம் 16ஆம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனை மற்றும் ஈரோடு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அப்போது ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் டெப்த்திரியா பாக்டீரியா கிருமி இருப்பதால் இதற்கான மருந்து அரசு...

“வலிமையான நபர்களில் ரஜினிகாந்தும் ஒருவர்” – செல்வப்பெருந்தகை
Post

“வலிமையான நபர்களில் ரஜினிகாந்தும் ஒருவர்” – செல்வப்பெருந்தகை

நடிகர் ரஜினிகாந்துக்கு நேற்று மாலை ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நேற்றிரவு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது சிகிச்சை அனைத்தும் முடிந்துள்ளதாகவும், ஐசியூ வார்டில் இருந்து இன்று மாலை ஜெனரல் வார்டுக்கு மாற்றப்படுவார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினிகாந்த் விரைவில் நல பெற வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளம் மூலம் கருத்து...

முடிந்தது சிகிச்சை- டாக்டர்களுக்கு நன்றி சொன்ன ரஜினி
Post

முடிந்தது சிகிச்சை- டாக்டர்களுக்கு நன்றி சொன்ன ரஜினி

நடிகர் ரஜினிகாந்துக்கு நேற்று மாலை ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயிற்று வலி, சீரற்ற ரத்த  ஓட்டம் மற்றும் செரிமான பிரச்னை ஆகியவற்றால் அனுமதிக்கப்பட்டதாகவும் பரிசோதனைகள் அனைத்து மேற்கொள்ளப்பட்டு  சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், விரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த  நிலையில் நடிகர் ரஜினிகாந்துக்கு ரத்த நாளத்தில் அடைப்பு கண்டறியப்பட்ட நிலையில் ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும், ரத்த நாளத்தில் இருந்த அடைப்புகள் சரிசெய்யப்பட்டு...

மறைந்தார் ஆம்பூரின் அன்னை தெரசா ‘ஆலிஸ் ஜி பிராயர்’
Post

மறைந்தார் ஆம்பூரின் அன்னை தெரசா ‘ஆலிஸ் ஜி பிராயர்’

ஆலிஸ் ஜி பிராயர் குறித்து அவ்வளவாக ஊடகங்களில் செய்தி வந்ததில்லை. ஏனென்றால் அவர் அதை விரும்பியதில்லை. அமெரிக்காவிலிருந்து மிஷினெரிக்காக நாகர்கோவில் வந்த ரிச்சர்ட் ஹென்றி பிராயரின் மகளாக 1938ம் ஆண்டு நாகர்கோவிலில் பிறந்தார் ஆலிஸ் பிராயர். அவர்களின் குடும்பம் பின்னர் அமெரிக்காவுக்கு சென்று விட்டாலும் ஆலிஸ் பிராயருக்கு தன் தந்தையைப் போல மிஷினெரியாக விரும்பி இந்தியாவுக்கு வந்தார். மருத்துவக் கல்வி பயின்று மருத்துவரான ஆலிஸ் பிராயர் Community health service – பணிக்காக 1968ம் ஆண்டு  இந்தியாவுக்கு...

QR Scanner மூலம் மதுபாட்டிகள் விற்பனை… கணினிமயமாகும் டாஸ்மாக்!
Post

QR Scanner மூலம் மதுபாட்டிகள் விற்பனை… கணினிமயமாகும் டாஸ்மாக்!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலம் மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது தரமான மதுபாட்டில்களை, நியாயமான விலைக்கு விற்பனை செய்ய டாஸ்மாக் கடைகளை நவீன மயமாக்கும் முயற்சிகளை டாஸ்மாக் நிர்வாகம் எடுத்து வருகிறது. மேலும் டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களுக்கு ரசீது வழங்குதல், மதுபாட்டில்களில் பார்கோட் அச்சிட்டு, அதன் மூலம் தொடர்ச்சியாக கண்காணிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில், டாஸ்மாக் கடைகளின் செயல்பாடுகளை கணினிமயமாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக பில்லிங் முறை செயல்படுத்தப்பட்டு, டாஸ்மாக்...

ரஜினி உடல்நிலை… அமைச்சர் மா.சுப்ரமணியன் பிரத்யேக பேட்டி!
Post

ரஜினி உடல்நிலை… அமைச்சர் மா.சுப்ரமணியன் பிரத்யேக பேட்டி!

கடந்த மாதம் 28ம் தேதி விசாகப்பட்டினத்தில் இருந்து கூலி படப்பிடிப்பு முடித்துவிட்டு சென்னை திரும்பினார். கூலி படப்பிடிப்பில் மழை காட்சியில் நடித்த போது உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன்காரணம் அடுத்த கட்ட நடவடிக்கையாக  மருத்துவர்களிடம் கலந்தாலோசித்து விட்டுத் மருத்துவமனையில் ரஜினி அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.  அடி வயிறு வீக்கம், முதுகு பிரச்னைகளுக்காக தான் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இதய சிகிச்சை நிபுணரின் பரிசோதனைக்கு பின்னரே ரஜினியின் அடுத்த கட்ட சிகிச்சை குறித்தும், எத்தனை நாட்கள் மருத்துவமனையில் இருக்கலாம்...

× Free India Logo
Welcome! Free India