Category: TamilNadu

Home TamilNadu
மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்த வைரமுத்து – காரணம் இதுதான்!
Post

மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்த வைரமுத்து – காரணம் இதுதான்!

புகழ்பெற்ற கவிஞரும், திரைப்படப் பாடலாசிரியருமான வைரமுத்துவின் தொடர்ந்து திரைப்படங்களுக்கு பாடல் இயற்றி வருகிறார். இவர் எழுதிய வைகறை மேகங்கள், திருத்தி எழுதிய தீர்ப்புகள், இன்னொரு தேசியகீதம், எனது பழைய பனையோலைகள், கவிராஜன் கதை, இரத்த தானம், இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல. தமிழுக்கு நிறமுண்டு, பெய்யெனப் பெய்யும் ம‌ழை போன்ற கவிதை தொகுப்புகள் தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றது. இதுவரை 39 நூல்கள் எழுதியிருக்கிறார். சாகித்ய அகாடமி விருதுபெற்ற இவரது கள்ளிக்காட்டு இதிகாசம் 10 இந்திய...

தற்காலிக கால்நடை மருத்துவர்கள் நீக்கம்.. நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
Post

தற்காலிக கால்நடை மருத்துவர்கள் நீக்கம்.. நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

மதுரையைச் சேர்ந்த கால்நடை  மருத்துவர் அருள்ஜோதி உள்ளிட்ட 83 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அரசு கால்நடை மருத்துவமனைகளில் உதவி மருத்துவர்கள் பணி நியமனம் கடந்த 2012 -ஆம் ஆண்டு முதல் நடைபெறவில்லை. இதனால் காலி பணியிடங்கள் தற்காலிக மருத்துவர்கள் மூலம் நிரப்பப்பட்டன. தற்காலிக கால்நடை மருத்துவர்களை பணி நிரந்தரம் செய்ய கோரி தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தற்காலிக பணியாளர்கள் பணி நிரந்தரம் கோர முடியாது. இருப்பினும் எதிர்காலத்தில் நடைபெறும் கால்நடை...

விஜய் கொடுத்த விருந்து- நெகிழ்ந்து பாராட்டிய விவசாயிகள் 
Post

விஜய் கொடுத்த விருந்து- நெகிழ்ந்து பாராட்டிய விவசாயிகள் 

தவெக மாநாடு நடத்த நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு விஜய் இன்று விருந்தளித்தார். இதனால் நெகிழ்ந்து போன விவசாயிகள் விஜய்க்கு நெகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்தனர். நடிகர் விஜய் கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கினார். அதன்பின்னர் கட்சி கொடி அறிமுகம், தவெக முதல் மாநில மாநாடு என அடுத்தடுத்து அரசியல் பிரவேசம் சூடிபிடித்துள்ளது. இதைத்தொடர்ந்து தவெக சார்பில் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் அக்.27ம் தேதி தவெக முதல் மாநில மாநாடு மிக பிரமாண்டமாக...

வண்டலூர் உயிரியல் பூங்காவில் குரங்கு குட்டி உயிரிழப்பு -வனத்துறைக்கு நீதிமன்றம் போட்ட உத்தரவு
Post

வண்டலூர் உயிரியல் பூங்காவில் குரங்கு குட்டி உயிரிழப்பு -வனத்துறைக்கு நீதிமன்றம் போட்ட உத்தரவு

வண்டலூர் உயிரியல் பூங்காவில் உயிரிழந்த குரங்கு குட்டியின் உடற்கூராய்வு அறிக்கையை தாக்கல் செய்ய வனத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் நாய்களுக்கு தடுப்பூசி போடும்  முகாமில், நாய்களால் கடிக்கப்பட்டு காயமடைந்த ஒரு குரங்கு குட்டியை வனத்துறை பாதுகாப்பாளர் ஒருவர், முகாமில் கலந்து கொண்ட கால்நடை மருத்துவர் வல்லயப்பனிடம் ஒப்படைத்தார். சுமார் 10 மாதங்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், வனத்துறையினர்  கடந்த மாதம் 26ம்...

உணவு டெலிவரி ஆப் மூலம் போதைப்பொருள் சப்ளை – 2 பேரை தட்டித்தூக்கிய போலீஸ்
Post

உணவு டெலிவரி ஆப் மூலம் போதைப்பொருள் சப்ளை – 2 பேரை தட்டித்தூக்கிய போலீஸ்

Porter app மற்றும் swiggy App மூலம் மெத்தபெட்டமைன் போதைப்பொருளை சப்ளை செய்த 2 பேரை கைது செய்து தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர் சென்னை அண்ணாசாலை தர்கா பின்புறம் பகுதியில் மெத்தபெட்டமைன் போதைப்பொருளுடன் சிலர் சுற்றுவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தனிப்படை போலீசார் சந்தேகத்தின் பேரில் 2 பேரை பிடித்து சோதனை செய்த போது 12 கிராம் மெத்தபெட்டமைன், 27 போதை மாத்திரைகள் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.  இதையடுத்து 2...

டிசம்பரில் சென்னையில் பெருமழைக்கு வாய்ப்பு -அலர்ட் விடுத்த வானிலை ஆய்வாளர் 
Post

டிசம்பரில் சென்னையில் பெருமழைக்கு வாய்ப்பு -அலர்ட் விடுத்த வானிலை ஆய்வாளர் 

வரும் டிசம்பர் மாதம் சென்னையில் பெருமழைக்கான வாய்ப்பு என தனியார் வானிலை ஆய்வாளர் தெரிவித்துள்ளார். தென் மாவட்டங்களில் பருவமழை பெய்துவரக்கூடிய நிலையில் வரும் நாட்களில் தமிழகத்தில் பருவமழை எவ்வாறு இருக்கும் என்பது குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் வெங்கடேஷ் குமுதம் செய்திகளுக்கு பிரத்தியேகமாக பேட்டியளித்துள்ளார்.அப்போது அவர் பேசியதாவது,  “இலங்கைக்கு கீழே உள்ள வளிமண்டல மேடுக்கு சுழற்சியின் மூலம் உருவாகக்கூடிய ஈரப்பதம் மிக்க காற்றின் குவியல் காரணமாகவே ராமநாதபுரம் மாவட்டத்தில் 44 சென்டிமீட்டர் அளவிலான அதிக கன மழை...

விஜய் குறித்த கேள்விக்கு வணக்கம் போட்ட ராதாரவி- இங்கே இருந்தால் தான் வலி தெரியும் என பதில் 
Post

விஜய் குறித்த கேள்விக்கு வணக்கம் போட்ட ராதாரவி- இங்கே இருந்தால் தான் வலி தெரியும் என பதில் 

நடிகர் விஜய் கட்சி தொடங்கி இருப்பது குறித்து, நடிகர் ராதாரவியிடம் கேட்டபோது, கிழக்கே சூரியன் உதிக்கும், மேற்கே மறையும். இதனை மாற்றி  அமைப்பது முடியுமா என, எதிர் கேள்வியுடன் கிளம்பிச் சென்றார். கோவை அடுத்த கோவைபுதூர் பகுதி  தனியார் அரங்கில், கோவை மாவட்ட நடிகர் சங்கத்தின் 10வது ஆண்டு கலை விழா, தமிழ்நாடு நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர் சங்கத்தின் கோவை மாவட்டத்தின் இரண்டாம் ஆண்டு விருது வழங்கும் விழா, ஆகியவை  நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் ராதாரவி...

“எனக்கும் முதலமைச்சர் கனவு இருக்கு..”- திருமாவளவன் பேச்சு
Post

“எனக்கும் முதலமைச்சர் கனவு இருக்கு..”- திருமாவளவன் பேச்சு

எனக்கும் முதலமைச்சர் கனவு உண்டு என்று 20 வருடங்களுக்கு முன்பாக பத்திரிகையில் முதல் பக்கத்தில் வந்த செய்தியை சுட்டிக்காட்டி விசிக தலைவர் திருமாவளவன் பேசினார். பழனியில் தனியார் திருமண்டப திறப்பு விழா மேடையில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், நானும் முதலமைச்சராக வேண்டும், எனக்கும் முதலமைச்சர் கனவு உண்டு என்று 20 வருடங்களுக்கு முன்பாக பத்திரிகையில் முதல் பக்கத்தில் வந்த செய்தியை சுட்டிக்காட்டி பேசினார். அதற்காக இன்று முதல் புள்ளியை வைத்துள்ளோம்....

வீட்டில் பிரசவம் பார்த்தால் நடவடிக்கை-சுகாதாரத்துறை எச்சரிக்கை
Post

வீட்டில் பிரசவம் பார்த்தால் நடவடிக்கை-சுகாதாரத்துறை எச்சரிக்கை

கர்ப்பிணி பெண்கள் முறையாக மருத்துவ பரிசோதனைக்கு வருகிறார்களா? என்ற கண்காணிப்பை தீவிரப்படுத்த கிராம சுகாதார அலுவலர்கள் மற்றும் ஆரம்ப சுகாதார அலுவலர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. குன்றத்தூர் அருகே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், வாட்ஸ் ஆப் குழுவில் வந்த குறிப்பை பயன்படுத்தி கணவனே மனைவிக்கு பிரசவம் பார்த்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மனோகரன் தனது மனைவி சுகன்யாவிற்கு  3ஆவது முறையாக கடந்த நவ.17ஆம் தேதி திடீரென பிரசவ வலி ஏற்பட்டதாகவும், பின்னர் வீட்டிலேயே ஆண்...

சென்னையில்  சிறுமியை வெட்ட முயற்சி- சகோதரி கணவர் கைது
Post

சென்னையில்  சிறுமியை வெட்ட முயற்சி- சகோதரி கணவர் கைது

சென்னையில் சிறுமியை கத்தியால் கொடூரமாக தாக்கப்படும் சிசிடிவி காட்சி வெளியான சம்பவம் தொடர்பாக சகோதரி கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.  சென்னை அயனாவரம் கே.எச். சாலையில் நவ.19ம் தேதி மதியம் சிறுமியை  மர்ம நபர் ஒருவர் கத்தியால் தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த நிலையில் அயனாவரம் போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் தாக்குதலுக்குள்ளான பெண் அயனாவரம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி என்பது தெரியவந்தது. போலீசார் தொடர் விசாரணையில்...

× Free India Logo
Welcome! Free India
FREE INDIA · Reader account

Login is optional. You can close this window and keep reading.