Category: TamilNadu

Home TamilNadu
ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்- அதிர்ச்சியில் காங்கிரஸ் தொண்டர்கள்
Post

ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்- அதிர்ச்சியில் காங்கிரஸ் தொண்டர்கள்

சென்னையில் உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.எல்.ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை கடந்த மாதம் மோசமடைந்தது. மூச்சு திணறல் காரணமாக சென்னை அடுத்த ராமாபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில், கடந்த மாத இறுதியில் அவர் அனுமதிக்கப்பட்டார்.இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் சென்று, அவரது உடல்நலன் குறித்து விசாரித்தனர். தொடர் சிகிச்சைக்குப் பிறகு...

உருவானது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி – தமிழகத்திற்கு பாதிப்பா?- வானிலை மையம் சொன்ன அதிர்ச்சி ரிப்போர்ட்
Post

உருவானது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி – தமிழகத்திற்கு பாதிப்பா?- வானிலை மையம் சொன்ன அதிர்ச்சி ரிப்போர்ட்

மன்னார் வளைகுடா பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் புயல் சின்னங்களால் கனமழை பெய்தது. இதன் காரணமாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடுமையாக பாதிக்கப்பட்டது. குறிப்பாக விழுப்புரம் மாவட்டம் வரலாறு காணாத வகையில் வெள்ள நீர் சூழ்ந்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக தமிழகத்தில் டிச.16, 17 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஃபெஞ்சல் புயல் சென்னை, விழுப்புரம்...

மழையால் தென் மாவட்டங்கள் பாதிப்பு- அரசுக்கு அறிவுறுத்திய பிரேமலதா
Post

மழையால் தென் மாவட்டங்கள் பாதிப்பு- அரசுக்கு அறிவுறுத்திய பிரேமலதா

தமிழகம் முழுவதும் கனமழையிலிருந்து மக்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என பிரேமலதா வலியுறுத்தியுள்ளார். இது குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “தமிழகம் முழுவதும் கனமழையிலிருந்து மக்களின் பாதுகாப்பை இந்த அரசு உறுதி செய்ய வேண்டி அறிக்கை திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, தேனி மற்றும் தென் மாவட்டங்களில் அனைத்து மவட்டங்களிலும் கமழை நேற்றிலிருத்து பெய்து கொண்டிருக்கிறது. கனமழையின் காரணமாக அனைத்து வீடுகளிலும் தண்ணீர் புகுந்து மக்களுடைய வாழ்வாதாரமே கேள்விக்குறியாகா...

திருவண்ணாமலை தீபத்திருவிழா.. 2,668 அடி உயர மலை உச்சியில் அரோகரா முழக்கத்துடன் மகா தீபம் ..!
Post

திருவண்ணாமலை தீபத்திருவிழா.. 2,668 அடி உயர மலை உச்சியில் அரோகரா முழக்கத்துடன் மகா தீபம் ..!

நினைத்தாலே முக்தி தரும் தலமாகவும், பஞ்சபூத அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு விண்ணை பிளக்கும் அளவிற்கு அரோகரா முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலின் திருக்கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 4 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்றது. இந்நிலையில் திருக்கார்த்திகை தீபவிழா 10 ஆம் நாளான இன்று காலை அண்ணாமலையார் சன்னதியில் ஏகன் அனேகனாக மாறும் தத்துவத்தினை விளக்கும் விதமாக கோவிலில்...

எழுத்தாளரும் இயக்குனருமான 'குடிசை' ஜெயபாரதி காலமானார்..!
Post

எழுத்தாளரும் இயக்குனருமான 'குடிசை' ஜெயபாரதி காலமானார்..!

எழுத்தாளர், இயக்குனர், தேசிய விருது பெற்ற ஜெயபாரதி (குடிசை)வயது 77 நுரையீரல் தொற்று காரணமாக ஓமந்தூர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனிற்றி இன்று காலை 6 மணிக்கு காலமாகி விட்டார்.  திரைப்பட இயக்குநரும், பிரபல எழுத்தாளருமாக விளங்கியவர் ஜெயபாரதி (வயது 77). இவர் கடந்த 1979ஆம் ஆண்டு திரள் நிதி (கிரவுட் பண்டிங்) முறையில் ‘குடிசை’ என்ற திரைப்படத்தை தயாரித்து சினிமா உலகில் பிரபலமானவர். திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு பத்திரிகையாளராகப் பணியாற்றியவர் ஆவார். ...

கழிவுநீர் கலந்த குடிநீர் குடித்த 3 பேர் உயிரிழப்பு – அமைச்சருக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி
Post

கழிவுநீர் கலந்த குடிநீர் குடித்த 3 பேர் உயிரிழப்பு – அமைச்சருக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி

குடிநீரில் கழிவு நீர் கலக்கவில்லை என்றால், அமைச்சரும், திமுகவினரும் அந்தப் பகுதியில் வழங்கப்படும் குடிநீரைக் குடிக்க முன்வருவார்களா? என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை பல்லாவரத்தில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த 23 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து சம்பவ இடத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், மற்றும் எம்.எல்.ஏ கருணாநிதி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பொதுமக்களை சந்தித்து நலம் விசாரித்தார்....

நாதக ஒரு பிரிவினைவாத இயக்கம்?-திருச்சி எஸ்.பி வருண் குமார் 
Post

நாதக ஒரு பிரிவினைவாத இயக்கம்?-திருச்சி எஸ்.பி வருண் குமார் 

நாம் தமிழர் கட்சி கண்காணிக்கப்பட வேண்டிய ஒரு பிரிவினைவாத இயக்கம் என ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாநாட்டில் திருச்சி எஸ்.பி வருண் குமார் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐந்தாவது தேசிய ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு சண்டிகர் மாநிலத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பணியாற்றி வரும் இளம் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு அழைப்பு விடப்பட்டு கலந்து கொண்டனர்.  இந்த மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அழைப்பின்பேரில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் கலந்து...

அமரன் படத்தால் வந்த மன உளைச்சல் – நீதிமன்றம் சென்ற மாணவர்
Post

அமரன் படத்தால் வந்த மன உளைச்சல் – நீதிமன்றம் சென்ற மாணவர்

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படத்தில் தனது மொபைல் எண்ணை பயன்படுத்தியதால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி  பொறியியல் மாணவர் வாகீசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். ராஜ்கமல் பிலிம் நிறுவனம் தயாரித்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கி நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளிக்கு திரைக்கு வந்த அமரன் திரைப்படத்தில், கதாநாயகி சாய்பல்லவியின் மொபைல் எண் என்று தனது எண்ணை காண்பித்ததால், பலர் அந்த எண்ணை...

சாராயம் குடித்து இறந்தால் ரூ.20 லட்சம்.. பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த நிதியும் வழங்கவில்லை – அர்ஜூன் சம்பத்
Post

சாராயம் குடித்து இறந்தால் ரூ.20 லட்சம்.. பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த நிதியும் வழங்கவில்லை – அர்ஜூன் சம்பத்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த சேமலைகவுண்டன்பாளையம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் மர்ம நபர்களால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இதனையடுத்து பல்வேறு அரசியல் கட்சியினறும் நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜூன் சம்பத், “தமிழகத்தில் கொங்கு மண்டலத்தில் அதிகளவு கொலைகள் தொடர்கதையாகி வருகிறது....

தமிழ்நாட்டை உலுக்கிய கொலை வழக்கு… 4 மாணவர்களுக்கு நிபந்தனை ஜாமீன்
Post

தமிழ்நாட்டை உலுக்கிய கொலை வழக்கு… 4 மாணவர்களுக்கு நிபந்தனை ஜாமீன்

சென்னை மாநிலக் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பச்சையப்பன் கல்லூரி மானவர்கள் நான்கு பேருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநிலக் கல்லூரியில் படித்த திருத்தணியை சேர்ந்த மாணவர் சுந்தர், கடந்த அக்டோபர் 4ஆம் தேதி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களால் சரமாரியாக தாக்கப்பட்டார். அவரை மீட்ட ரயில்வே பாதுகாப்பு படையினர், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர்.  அங்கு கடந்த அக்டோபர்...

× Free India Logo
Welcome! Free India
FREE INDIA · Reader account

Login is optional. You can close this window and keep reading.