தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி (எஸ்.ஐ.ஆர்.) ஒரு நிர்வாக நடவடிக்கையாகத் தொடங்கப்பட்டது. வீடு வீடாகச் சென்று படிவங்கள் வழங்கப்பட்டு, பூர்த்தி செய்தால் மட்டுமே வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. சுமார் 40 நாட்கள் நடந்த இந்தப் பணி டிசம்பர் 14-ம் தேதி நிறைவடைந்தது. இந்தப் பணியின் அடிப்படையில், தமிழகத்தில் 97 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். இதில், இடம் பெயர்ந்தோர் அல்லது குறிப்பிட்ட முகவரியில் வசிக்காதவர்கள் எனக்...
Category: TamilNadu
உஷார இருங்க இல்லான கஷ்டப்படுவீங்க: தமிழகம் முழுவதும் பிப்ரவரி 1-ம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
தமிழ்நாடு 4 ஆயிரத்து 829 டாஸ்மாக் கடைகள் உள்ளன.இதில் 3240 பார்களும் உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் (TASMAC) கடைகளில், விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் மது விற்பனை மிக அதிகமாக, சில நேரங்களில் ஒரே நாளில் ₹220 கோடி முதல் ₹270 கோடி வரை (குடியரசு தினம், தீபாவளி, சுதந்திர தினம்) நடைபெறுகிறது. சாதாரண நாட்களில் இந்த விற்பனை சுமார் 150 கோடி ரூபாய் வரை மதுவிற்பனை இருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது, மேலும் ஆண்டுதோறும்...
குடியரசு தினம் குடிகாரர்கள் செய்த சாதனை: ரூ.220 கோடி சரக்கு அடித்து அசத்தல்
காந்தி ஜெயந்தி, மகாவீர் ஜெயந்தி, மிலாது நபி, குடியரசு தினம் போன்ற நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இதன் காரணமாக டாஸ்மாக் கடைகளுக்கு முந்தைய தினம் அதிக அளவில் மதுவிற்பனை என்பது நடைபெறுகிறது. அந்த வகையில் குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள ‘டாஸ்மாக்’ கடைகளுக்கு நேற்று விடுமுறை என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் ஜனவரி 25-ம் தேதி ‘டாஸ்மாக்’ கடைகளில் மதுபிரியர்கள் கூட்டம் அலைமோதியது. மதுபிரியர்களின் படையெடுப்பால் அன்று ஒரே நாளில் ரூ.220...
“என்னங்க விஜய்க்கு வந்த சோதனை ” சட்டமன்ற தேர்தல் முடியும் வரை ஜனநாயகன் நோ ரீலிஸ்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளி போகிறது. இப்படத்திற்கு உடனடியாக தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டும் என்று தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு தற்போது ரத்து செய்துள்ளது. கே.வி.என். புரொடக்ஷன் தயாரிப்பில் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தணிக்கைக்காக விண்ணப்பிக்கப்பட்டது. படத்தை ஆய்வு செய்த தணிக்கை வாரியக் குழுவினர், அதில் மதம் மற்றும் நாட்டின் பாதுகாப்புப் படைகள் தொடர்பான சில...
பரந்தூர் புதிய விமான நிலையம் வேண்டாம்: 17வது முறையாக கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்
சென்னைக்கு அருகில் இருக்கும் ஸ்ரீபெரும்புதூர் அருகே பரந்தூர் புதிய விமான நிலையம் வர உள்ளது. இதற்காக 5,746.18 ஏக்கர் நிலத்தை எடுக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. நிலத்தை எடுப்பதற்கு தமிழ்நாடு தொழில்துறை அனுமதி கொடுத்துள்ளது. இதற்காக அரசு சுமார் 1,822.45 கோடி ரூபாய் இழப்பீடு தரப்போகிறது. இதற்கான அரசாணை 2023 அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டது. ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் வட்டங்களில் இருக்கும் கிராமங்களில் இருந்து நிலம் எடுக்கும் வேலைகள் நடக்கின்றன. ஆனால் தங்கள் வாழ்வாதாரம், விவசாய நிலம்,...
77-வது குடியரசு தினம்: ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடி ஏற்றினார்
77-வது குடியரசு தின விழாவிற்காக உழைப்பாளர் சிலை பகுதியில் பிரமாண்டமான அளவில் பந்தல்கள் போடப்பட்டுள்ளன. அங்கு சபாநாயகர், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி, நீதிபதிகள், வெளிநாட்டு தூதுவர்கள் உள்பட பல முக்கிய பிரமுகர்கள் வருகை தந்து இருந்தனர். காலை 7.55 மணிக்கு விழாப் பகுதிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வந்தார். அவர், காரின் முன்னும் பின்னும் போலீசாரின் மோட்டார் சைக்கிள்கள் புடைசூழ அழைத்து வரப்பட்டார். அணி வணக்கம் ஏற்கும் மேடை அருகே வந்த முதல்வர்...
மாமல்லபுரம் கடற்கரை இறந்து கரை ஒதுங்கும் ஆமைகள்: சுற்றுலா பயணிகள் கவலை
மாமல்லபுரம் கடற்கரையில் சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு இடைவெளியிட்டு ஆங்கா ங்கே 50-க்கும் மேற்பட்ட ஆமைகள் சடலங்களாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் சுமார் 10 கிலோ எடை கொண்ட இந்த ஆமைகள், கடற்கரையில் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் கண்களில் படுவதால் அவர்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். மரணத்திற்கான காரணங்கள் நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான காலக்கட்டம் ஆமைகளின் இனப்பெருக்கக் காலமாக இருந்தாலும், தற்போது நிலவும் சில சூழலியல் மாற்றங்கள் அவற்றின் உயிருக்கு உலையாக மாறியுள்ளன. மீனவர்கள்...
குடியரசு தினவிழா, சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு, ட்ரோன்கள் பறக்க தடை
வருகிற 26 திங்கட்கிழமை குடியரசு தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னை, காமராஜர் சாலை- வாலாஜா சாலை சந்திப்பில் உள்ள மெரினா உழைப்பாளர் சிலை அருகே தேசிய கொடியேற்றி சிறப்பிக்க உள்ளார். இதனையொட்டி சென்னை, காமராஜர் சாலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 7,500 போலீசார் சிறப்பு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.மேலும், சென்னை பெருநகர காவல் சரக எல்லைக்குட்பட்ட சென்னை விமான நிலையம், இரயில்...
‘ஜனநாயகன்’ திரைப்படம் ரிலீஸ் ஆகுமா? 27-ம் தேதி தீர்ப்பு: விஜய் ரசிகர்கள் ஆவல்
நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மறுத்த தணிக்கை வாரியம், இந்த படத்தை மறுஆய்வு செய்ய பரிந்துரை செய்தது. இதை எதிர்த்து அந்த படத்தை தயாரித்துள்ள கே.வி.என். நிறுவனம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, தணிக்கை சான்றிதழை உடனடியாக வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டு, மறு ஆய்வு பரிந்துரையை ரத்து செய்தார். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில், தணிக்கை வாரியம் உடனடியாக...
பிப் 2-ல் தமிழக இடைக்கால பட்ஜெட்: தேர்தலையொட்டி புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு
ஆண்டுதோறும் பிப்ரவரி, 1ம் தேதி, மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து, மாநில அரசுகளின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். தமிழக சட்டசபைக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்குள் நிர்வாக செலவுகளை கவனிப்பதற்காகவும், எஞ்சியுள்ள திட்டங்களுக்கு நிதி விடுவிப்பதற்காகவும், இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும். கடந்த 2021 சட்டசபை தேர்தல், அதே ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி நடந்தது. இதற்கான தேர்தல் நடத்தை விதிகள், 2021 மார்ச் 12ம்...










