எனக்கும் முதலமைச்சர் கனவு உண்டு என்று 20 வருடங்களுக்கு முன்பாக பத்திரிகையில் முதல் பக்கத்தில் வந்த செய்தியை சுட்டிக்காட்டி விசிக தலைவர் திருமாவளவன் பேசினார். பழனியில் தனியார் திருமண்டப திறப்பு விழா மேடையில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், நானும் முதலமைச்சராக வேண்டும், எனக்கும் முதலமைச்சர் கனவு உண்டு என்று 20 வருடங்களுக்கு முன்பாக பத்திரிகையில் முதல் பக்கத்தில் வந்த செய்தியை சுட்டிக்காட்டி பேசினார். அதற்காக இன்று முதல் புள்ளியை வைத்துள்ளோம்....
Category: TamilNadu
வீட்டில் பிரசவம் பார்த்தால் நடவடிக்கை-சுகாதாரத்துறை எச்சரிக்கை
கர்ப்பிணி பெண்கள் முறையாக மருத்துவ பரிசோதனைக்கு வருகிறார்களா? என்ற கண்காணிப்பை தீவிரப்படுத்த கிராம சுகாதார அலுவலர்கள் மற்றும் ஆரம்ப சுகாதார அலுவலர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. குன்றத்தூர் அருகே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், வாட்ஸ் ஆப் குழுவில் வந்த குறிப்பை பயன்படுத்தி கணவனே மனைவிக்கு பிரசவம் பார்த்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மனோகரன் தனது மனைவி சுகன்யாவிற்கு 3ஆவது முறையாக கடந்த நவ.17ஆம் தேதி திடீரென பிரசவ வலி ஏற்பட்டதாகவும், பின்னர் வீட்டிலேயே ஆண்...
சென்னையில் சிறுமியை வெட்ட முயற்சி- சகோதரி கணவர் கைது
சென்னையில் சிறுமியை கத்தியால் கொடூரமாக தாக்கப்படும் சிசிடிவி காட்சி வெளியான சம்பவம் தொடர்பாக சகோதரி கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை அயனாவரம் கே.எச். சாலையில் நவ.19ம் தேதி மதியம் சிறுமியை மர்ம நபர் ஒருவர் கத்தியால் தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த நிலையில் அயனாவரம் போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் தாக்குதலுக்குள்ளான பெண் அயனாவரம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி என்பது தெரியவந்தது. போலீசார் தொடர் விசாரணையில்...
பரோலில் தமிழகத்திற்கு வந்த சிங்கப்பூர் தீவிரவாதி-என்ஐஏ அதிகாரிகள் விசாரணை
பரோலில் தமிழகத்திற்கு வந்த சிங்கப்பூர் தீவிரவாதியிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சிங்கப்பூர் நாட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருப்பவர் செய்யது இப்ராஹிம்.இவர் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர். சொந்த ஊர் ராமநாதபுரம். சிறிது வயதிலேயே சிங்கப்பூர் நாட்டிற்கு குடிபெயர்ந்து விட்டார்.இவர் ஜெமா இஸ்லாமியா (JI) என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர் என்பதால் சிங்கப்பூர் அரசு செய்யது இப்ராஹிமை கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த 2008ஆம் ஆண்டில் இருந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவரது தாயார் ராமநாதபுரத்தில்...
குடிபோதையில் பஸ் மெக்கானிக் செய்த சம்பவம்-10 நாட்களாக பணி வழங்காததால் ஆத்திரம்
சென்னையில் குடிபோதையில் பேருந்தை இயக்கி காவல் நிலைய காம்பவுண்டில் மோதிய மெக்கானிக்கால் பரபரப்பு ஏற்பட்டது. அடையாறு காவல் நிலையத்திற்கு எதிரில் உள்ள அடையாறு மாநகர போக்குவரத்து பணிமனையில் குணசேகரன்(50) என்பவர் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். ஒழுங்கீனம் காரணமாக கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இவருக்கு பணி வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.இந்த நிலையில் இன்று அதிகாலை இரண்டு முறை அடையாறு காவல் நிலையம் வந்த குணசேகரன் அங்கு வாசலில் நின்று கொண்டிருந்த காவலர்களிடம் தகராறு செய்ததாகவும் பின்னர், டெப்போவுக்குள்...
இனி சுரங்கப்பாதைகளில் பஸ் சிக்கி நிற்காது – சென்னை மாநகராட்சி புதிய திட்டம்
சென்னையில் மழைநீர் தேங்கும் சுரங்கப்பாதைகளில் போக்குவரத்தை தடை செய்ய தானியங்கி தடுப்புகளை அமைக்க சென்னை மாநகராட்சி டெண்டர் கோரியுள்ளது. AI தொழில்நுட்பத்துடன் தானியங்கி தடுப்புகள் அமைத்து போக்குவரத்தை தடை செய்ய மாநகராட்சி முடிவு செய்துள்ளது.சென்னையில் மழை காலங்களில் அதிகப்படியான மழை பொழிவு இருக்கும் நேரங்களில் தாழ்வான பகுதிகள், சாலைகள், சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்குவது வாடிக்கையான ஒன்றாக உள்ளது. மழை பெய்யும்போது சாலைகளில் தேங்கும் மழைநீர் வடிகால் வழியாக அகற்றப்படுகிறது. மழைக்காலங்களில் சாலைகளை காட்டிலும் சுரங்கப்பாதைகளில் மழைநீர் அதிகளவில்...
கிருஷ்ணகிரி போலி என்சிசி முகாம்: சிபிஐக்கு மாற்றக்கோரிய மனு முடித்து வைப்பு
கிருஷ்ணகிரியில் போலி என்சிசி முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்தததாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை முடித்து வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிருஷ்ணகிரியில் போலி என்சிசி முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்ற கோரி வழக்கறிஞர் ஏ.பி. சூரிய பிரகாசம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், பி.பி.பாலாஜி அமர்வில்...
கங்குவா பற்றி பேச மாட்டேன்- தயாரிப்பாளர் கே.ராஜன் பேச்சு
கங்குவா பற்றி பேச மாட்டேன் என விநியோகஸ்தர் சங்கத் தலைவர் கே.ராஜன் பேசியதால் பட விழாவில் பரபரப்பு ஏற்பட்டது. காரைக்கால் பகுதியில் நடந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி இருக்கும் கிரைம் திரில்லர் திரைப்படம் ‘லாரா’. இப்படத்தை மணி மூர்த்தி இயக்கியுள்ளார். எம்கே ஃபிலிம் ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் கார்த்திகேசன் தயாரித்துள்ளார்.இப்படத்தில் முருகா, பிடிச்சிருக்கு படங்களின் நாயகன் அசோக்குமார் கதாநாயகனாக நடித்துள்ளார். அனுஸ்ரேயா ராஜன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேத்யூ வர்கீஸ், வர்ஷினி, வெண்மதி ஆகியோருடன் தயாரிப்பாளர்...
தஞ்சையில் ஆசிரியை கொலை- இபிஎஸ் கண்டனம்
அரசுப்பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு பாதுகாப்பு துளியும் இல்லாத அளவிற்கு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்துள்ள திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம் என இபிஎஸ் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் அருகே சின்னமனை பகுதியை சேர்ந்தவர் முத்து. இவரது மகள் ரமணி (26). இவர் மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்தார்.இந்நிலையில், சின்னமனை பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் மதன்( 30) . இவருக்கு பெற்றோர் திருமணம் செய்ய முடிவு...
நடிகை கஸ்தூரிக்கு ஜாமின் – நீதிமன்றம் உத்தரவு
தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் கருத்து தெரிவித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை கஸ்தூரிக்கு ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் சமீபத்தில் நடந்த போராட்டத்தில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், தெலுங்கு பேசும் மக்கள் குறித்து இழிவாக பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்தது. மேலும் சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் நடிகை கஸ்தூரிக்கு எதிராக கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. மேலும் சென்னை...










