Category: TamilNadu

Home TamilNadu
தலைமை செயலகம் எதிரே வாயு கசிவு, மூச்சு திணறல்: பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அச்சம்
Post

தலைமை செயலகம் எதிரே வாயு கசிவு, மூச்சு திணறல்: பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அச்சம்

சென்னை தலைமை செயலகம் அமைந்துள்ள சாலையில் மதியம் 12.15 மணியளவில் திடீர் புகைமூட்டம் ஏற்பட்டது. இதனால் தலைமை செயலகத்திற்கு வருகை தந்த பொதுமக்கள், அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. திடீர் புகைமூட்டம் காரணமாக பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.   தலைமை செயலகத்திற்கு அருகே இருக்கும்  சென்னை துறைமுகத்தில் திடீரென சல்பர் வாயு கசிவு ஏற்பட்டது தெரிய வந்தது. துறைமுகத்தில் இருந்த கண்டெய்னர் ஒன்றில் இருந்து இந்த வாயு கசிவு ஏற்பட்டதாக கூறப்பட்டது. ஆனால்...

வருமானத்தை மறைத்ததாக முதல்வர் விஜய் மீதான வழக்கு: உயர்நீதிமன்றம் தள்ளுபடி
Post

வருமானத்தை மறைத்ததாக முதல்வர் விஜய் மீதான வழக்கு: உயர்நீதிமன்றம் தள்ளுபடி

முதல்வர் விஜய் வீட்டில், கடந்த 2015ஆம் ஆண்டு சோதனை நடத்திய வருமான வரித்துறை, புலி படத்திற்கு பெற்ற 15 கோடி ரூபாய் வருமானத்தை கணக்கில் காட்டாததை கண்டறிந்து,  ஒரு கோடியே 50  லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.இந்த உத்தரவை எதிர்த்து முதல்வர் விஜய் தரப்பில் தாக்கல் செய்யபட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி தள்ளுபடி செய்திருந்தது. இந்நிலையில்,  வருமான வரித்துறை சோதனைகளின் போது பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள், மதிப்பீட்டு நடவடிக்கைகள்,...

இந்த நேரத்தில் யாரும் வெளியே வராதீங்க – மத்திய சுகாதாரத்துறை, 21 மாவட்டங்களில் நாளை கனமழை: வானிலை மையம் 
Post

இந்த நேரத்தில் யாரும் வெளியே வராதீங்க – மத்திய சுகாதாரத்துறை, 21 மாவட்டங்களில் நாளை கனமழை: வானிலை மையம் 

மத்திய சுகாதாரத்துறை  வெளியிட்டுள்ள பதிவில், வெய்யில் அதிகமாக இருக்கும்பட்சத்தில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை செல்ல வேண்டாம். பிற்பகலில் வெளியே இருக்கும்போது ஓடுவது, கடினமான வேலைகளைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும். வெறுங்காலுடன் வெளியே செல்ல வேண்டாம். கண்டிப்பாக செருப்பு அணிந்து செல்ல வேண்டும். கோடை வெய்யில் அதிகமாக இருக்கும் பிற்பகல் நேரத்தில் வீட்டில் சமைப்பதைத் தவிர்க்கவும். சமையலறை போதுமான காற்றோட்டத்துடன் இருப்பதை உறுதிசெய்துகொள்ளவும். கதவுகளையும்,...

Post

கன்னியாகுமரி விவசாயிகளுக்கு நீர் திறப்பு உத்தரவு: 4 அணைகளில் இருந்து 850 கனஅடி நீர் வெளியீடு

கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, பாசன தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் மாவட்டத்தின் முக்கிய 4 அணைகளில் இருந்து 850 கனஅடி (cusecs) நீரை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை முதல்வர் விஜய் வெளியிட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக மழை குறைவாக இருந்ததன் காரணமாக பல்வேறு பகுதிகளில் பயிரிடப்பட்ட நெல், வாழை, காய்கறி மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கு தேவையான நீர் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால்...

Post

திருவள்ளுவர் பட விவகாரம்: ஆளுநரை விமர்சித்த உதயநிதி ஸ்டாலின் – அரசியல் சர்ச்சையாக மாறிய புதிய விவாதம்

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையான லோக் பவனில் நடைபெற்ற ‘வைகாசி அனுடம் வள்ளுவர் திருநாள்’ நிகழ்ச்சியில் வைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் படமே தற்போது தமிழக அரசியலில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த நிகழ்ச்சியில் திருவள்ளுவர் காவி நிற உடையுடன் சித்தரிக்கப்பட்டிருந்தது சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் கடும் விவாதத்துக்கு வழிவகுத்துள்ளது. இந்த விவகாரத்தில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார். தனது சமூக வலைதள பதிவில், தமிழர்களின் அடையாளமாக போற்றப்படும் திருவள்ளுவரை குறிப்பிட்ட...

மகளிர் உரிமைத்தொகை ரூ.2500 எப்போது? அப்டேட் கொடுத்த அமைச்சர்.!
Post

மகளிர் உரிமைத்தொகை ரூ.2500 எப்போது? அப்டேட் கொடுத்த அமைச்சர்.!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட மிக முக்கிய திட்டமாகும். சொல்லப்போனால், 2021 தேர்தலில் திமுக ஆட்சி அமைப்பதற்கு இந்த திட்டமே பிரதானமாக அமைந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. திமுக ஆட்சியில் மகளிருக்கு மாதம் ரூ 1000 வழங்கப்பட்டு வந்தது. இந்த தொகையை பெற சில விதிமுறைகள் வகுக்கப்பட்டிருந் நிலையில், தேர்தலின் போது முதல்வராக இருந்த ஸ்டாலின், மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் இந்த தொகை ரூ 2000...

திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்: திருப்புமுனை ஏற்படுத்துமா திமுக?
Post

திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்: திருப்புமுனை ஏற்படுத்துமா திமுக?

விஜய் தான் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த நிலையில், பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்துகொண்டு, திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்திருக்கிறார். அதனால் அங்கு விரைவில் இடைத்தேர்தல் வரப்போகிறது. இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சியின் அதிகாரத்திற்கும், அவர்கள் அள்ளி வீசும் பணத்திற்கும் பஞ்சம் இருக்காது. அரசியலில் திருமங்கலம் இடைத்தேர்தல் ஃபார்முலா, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ஃபார்முலா என இடைத்தேர்தல்களுக்கு பலவித சிறப்புகள் உண்டு. கடந்த 20 ஆண்டுகளாக இடைத்தேர்தல் என்றாலே தொகுதிவாசிகளுக்கு பணமும்,...

Post

சட்டம்-ஒழுங்கு விவகாரம் அரசியல் விவாதமாகிறது: ஆளும் கட்சி – எதிர்க்கட்சிகள் இடையே வார்த்தைப் போர்

சென்னை, மே 29: தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு நிலை தொடர்பான விவகாரம் தற்போது முக்கிய அரசியல் பேசுபொருளாக மாறியுள்ளது. மாநிலத்தில் அண்மைக்காலமாக நடைபெற்ற சில குற்றச் சம்பவங்கள், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் காவல்துறை செயல்பாடுகள் குறித்து ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் இடையே கடும் அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. கொலை, கொள்ளை, செயின் பறிப்பு, இணைய மோசடி மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து...

Post

சமூக வலைதளங்களில் வைரலான முதல்வர் விஜய் புகைப்படம்: ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு

சென்னை, மே 29: தமிழ்நாடு முதலமைச்சர் விஜயின் சமீபத்திய டெல்லி பயணத்தின் போது விமானத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலாகியுள்ளது. விமான பணிப்பெண்களுடன் மற்றும் பயணிகளுடன் முதலமைச்சர் விஜய் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் லட்சக்கணக்கான பார்வைகளை பெற்று ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. விமானப் பயணத்தில் எளிமையான தோற்றம் டெல்லியில் நடைபெற்ற முக்கிய அரசியல் சந்திப்புகளை முடித்துவிட்டு சென்னை திரும்பிய போது, சாதாரண பயணியாக விமானத்தில் பயணம் செய்த முதலமைச்சர் விஜய், விமான...

Post

தமிழ்நாடு கராத்தே அணி சர்வதேச போட்டியில் சாதனை: மலேசியாவில் பதக்க மழை

சென்னை, மே 29: மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கராத்தே வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் சிறப்பான திறமையை வெளிப்படுத்தி பல பதக்கங்களை வென்று மாநிலத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். இந்த வெற்றி விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச அரங்கில் தமிழகத்தின் முத்திரை மலேசியாவில் நடைபெற்ற இந்த சர்வதேச கராத்தே போட்டியில் பல நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். கடுமையான போட்டி நிலவிய போதிலும், தமிழ்நாடு அணியினர் தங்களது...

× Free India Logo
Welcome! Free India
FREE INDIA · Reader account

Login is optional. You can close this window and keep reading.