ஈரோடு சூரம்பட்டி வ.உ.சி வீதியை சேர்ந்த மைதீன்பாஷா என்பவர் பன்னீர்செல்வம் பூங்கா அருகே உள்ள துணிக்கடையில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். அதே கடையில் பணிபுரிந்து வந்த பெண் ஒருவருடைய மகளான, எட்டாம் வகுப்பு படித்து வந்த 14 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த சிறுமியிடமன ஆசை வார்த்தை கூறி பள்ளிபாளையம் பகுதிக்கு அழைத்துச் சென்ற மைதீன்பாஷா கட்டாய திருமணம் செய்ததை அடுத்து, அச்சிறுமியை ஒன்பது மாத கர்ப்பமாக்கியுள்ளார். இதனையடுத்து கடந்த 2020 ஆம்...
Category: TamilNadu
காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் எத்தனை – சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!
சென்னை நொளம்பூர் அடுக்குமாடி குடியிருப்பு நலச் சங்க நிதியில் முறைகேடு என புகார் அளித்த பட்டியல் இனத்தவரை அவமானப்படுத்தியது தொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், புகார் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் நீதிபதி வேல்முருகன் முன்பு சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் நேரில் ஆஜரானார்....
உச்சநீதிமன்ற உத்தரவு.. கட்டண வசூலை தொடங்கிய எலியார்பத்தி சுங்கச்சாவடி!
மதுரை, தூத்துக்குடி நான்கு வழி சாலையில்சுங்க கட்டணம் வசூலிக்கும் மதுரை எலியார்பத்தி, தூத்துக்குடி மாவட்டம் புதூர் பாண்டியபுரம் தனியார் சுங்கச்சாவடி நிர்வாகம் சாலை ஓரகளில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கவில்லை, சாலையின் நடுவே பெரும்பாலான இடங்களில் செடிகள் வைக்கப்படவில்லை. சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப்படவில்லை எனவே சுங்க கட்டண வசூலுக்கு தடை விதிக்க வேண்டும் என தூத்துக்குடியை சேர்ந்த பாலமுருகன் என்பவர் பொது நலமனு தாக்கல் செய்திருந்தார். அதனை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை உரிய நடவடிக்கைகள் எடுக்கும் வரை...
சங்கரன்கோவில் அருகே கார் விபத்து: ஒருவர் உயிரிழப்பு, 3 பேருக்கு தீவிர சிகிச்சை!
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் முதல் புளியங்குடி செல்லும் சாலையில் உள்ள நகரம் என்ற கிராமத்தின் அருகே சாலை ஓரம் நின்று கொண்டிருந்தவர்கள் மீது குற்றாலம் சென்று விட்டு அதிவேகமாக சங்கரன்கோவில் நோக்கி வந்து கொண்டிருந்த கார் சாலை ஓரம் இருந்த மின்கம்பத்தை இடித்து தள்ளிவிட்டு சாலையோரம் நின்று கொண்டிருந்தவர்கள் மீது மோதியதில் மருதுபாண்டி(48) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் மூன்று பேர் பலத்த காயங்களுடன் மூன்று ஆம்புலன்ஸ்களில் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். தற்போது...
"பாலியல் 'சார்'-களை எப்போது கண்ட்ரோல் செய்யப் போகிறீர்கள்?" – இபிஎஸ் கேள்வி
அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், சென்னை தாம்பரம் அரசு சேவை இல்லத்திலேயே 8-ம் வகுப்பு மாணவிக்கு பாதுகாப்பு இல்லை என்பது இந்த திமுக அரசு முற்றிலும் செயலிழந்து நிற்பதையே உணர்த்துவதாகவும், முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இதற்கு வெட்கித் தலைகுனிய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அரசு சேவை இல்லத்தில் உள்ள சிறுமிகளைக் காக்க வேண்டிய காவலாளியே இப்படி ஒரு கொடூர செயலில் ஈடுபட்டிருப்பது, குற்றம்...
அங்கன்வாடி மையத்தில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை? ஆசிரியருடன் பெற்றோர் வாக்குவாதம்..!
சென்னையில் அரசு சேவை இல்லத்தில், சிறுமிக்கு பாலியல் தொல்லை நேர்ந்தது போல, நாமக்கல் மாவட்டம் பள்ளிப் பாளையம் அருகே 4 வயது குழந்தை அங்கன்வாடியில் வைத்து பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக புகார் கூறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டம் பிள்ளையார் காட்டூர் குமரன் காலனி பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி(34) கூலி தொழிலாளி இவரது மனைவி வனிதா இந்த தம்பதியருக்கு நான்கு வயதில் ஒரு பெண் குழந்தையும், ஆறு மாதத்தில் ஒரு பெண் குழந்தை என இரண்டு...
pollachi case: தைரியமாக புகார் தெரிவித்த பெண்.. சாகும் வரை ஆயுள் தண்டனை: பொள்ளாச்சி வழக்கில் நடந்தவை என்ன?
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் வெளியே தெரிய வந்தபோது ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியது. பாதிக்கப்பட்ட இளம் பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதன் பிறகு இந்த வழக்கை சி.பி.ஐ கையில் எடுத்தது. இதில் பொள்ளாச்சியை சேர்ந்தசபரிராஜன், திருநாவுக்கரசு, வசந்த குமார், சதீஷ், மணிவண்ணன், ஹேரன்பால், பாபு, அருளானந்தம், அருண்குமார் ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது பாலியல் வன்கொடுமை, அத்துமீறல், ஆள் கடத்தல், அடைத்து வைத்து...
சீமானுக்கு கொலை மிரட்டல்.. 4 பேர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸில் புகார்
நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் மற்றும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதையடுத்து இடும்பவனம் கார்த்திக் செய்தியாளர்களை சந்தித்தார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சமூகவலைதளங்கள் வாயிலாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். “கொலை மிரட்டல் விடுக்கும் விதத்தில், ‘சீமானின் தலை விரைவில்...
காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக ஸ்ரீ சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் பொறுப்பேற்பு
காஞ்சிபுரத்தை தலைமை இடமாக கொண்டு சங்கர மடம் இந்து மதத்தை பரப்பி கல்வி பணிகளில் ஈடுபட்டு வருகிறது. காஞ்சி சங்கர மடத்தின் 68-வது மடாதிபதியாக சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகளும், 69-வது மடாதிபதியாக ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகளும் இருந்து மரணம் அடைந்தனர். 70-வது மடாதிபதியாக விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இருந்து வருகிறார். காஞ்சி சங்கர மட பக்தர்களின் வேண்டுதலின்படி 71- வது மடாதிபதியை காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தேர்வு செய்துள்ளார். ஆந்திர மாநிலம் அண்ணாவரம் பகுதியை...
இனிமே ஸ்ட்ரிக்ட்டா ஃபாலோ செய்யுங்க.. தவெக கட்சித் தொண்டர்களுக்கு விஜய் அன்பு கட்டளை
TVK VIJAY: தமிழக வெற்றிக்கழகம் சார்பில் கோவை, நீலகிரி, திருப்பூர் உட்பட 7 மாவட்டங்களைச் சேர்ந்த தவெக கட்சியின் வாக்குச்சாவடி முகவர்களுக்கான கருத்தரங்கு கடந்த ஏப்ரல் 26 & 27 ஆகிய இரு நாட்கள் நடைப்பெற்றது. இரண்டு நாட்களும் விஜய் நிகழ்வுக்கு தலைமையேற்று உரையாற்றினார். விஜயை பார்க்க கட்சித் தொண்டர்கள் உட்பட ரசிகர்களும் திரளாக பங்கேற்றனர். சாலைகளில் விஜய் சென்ற காரினை பின் தொடர்ந்து பலரும் தங்களது வாகனங்களில் நிகழ்வு நடக்கும் இடத்தை நோக்கி வந்தனர். அப்போது...










