இதுகுறித்து டெல்டா விவசாயிகள் சிலரிடம் பேசினோம். அனைத்து சிரமங்களையும் தாண்டி குறுவை விவசாயத்தை தொடங்கியுள்ளோம். ளாம்.ஆனால், மின்மோட்டார்களுக்கான மும்முனை மின்சாரம் எப்போது வரும், எப்போது போகும் என்று தெரியவில்லை. போதாததற்கு அடிக்கடி நிலவும் குறைந்த மின்னழுத்தத்தால் மோட்டார்கள் பருத்திச்செடிகளும் காய்ந்துவிட்டன. இயங்குவதே இல்லை. தொடர்ந்து இயக்கினால் மோட்டார் புகைந்து பழுதாகிவிடுகிறது. இதனால் வயல்கள் நீரின்றி வெடித்துப்போயிருக்கின்றன. கத்தரி, வெண்டை, தக்காளி, முள்ளங்கி என காய்கறி சாகுபடி செய்யவும் போதிய தண்ணீர் இல்லை. விலை கொடுத்து வாங்கி வைத்திருக்கும்...
Category: TamilNadu
தொடர் விடுமுறை சென்னையில் இருந்து 1,432 சிறப்பு பேருந்து இயக்கம்
இதுகுறித்து போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜூன் 26 (வெள்ளிக்கிழமை மொஹரம் பண்டிகை), ஜூன் 27 (சனிக்கிழமை), ஜூன் 28 (ஞாயிற்றுக்கிழமை) எனத் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது. இதனை முன்னிட்டு ஜூன் 25, 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் இந்தச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன் தெரிவித்துள்ளார். பயணிகளின் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காகச் சென்னையின் பல்வேறு பேருந்து முனையங்களில் இருந்து குறிப்பிட்ட வழித்தடங்களின்...
விஜய் Vs உதய்.. காரசாரமாக நடந்த விவாதம்.. !
முதலமைச்சர் முன்வைத்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து அவையில் பரபரப்பான சூழல் நிலவிய நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான திமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர். ஆளுநர் உரை மீதான விவாதத்துக்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் விஜய், தமிழகத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, மின்வெட்டு பிரச்சினைகள், போதைப்பொருள் புழக்கம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை சுட்டிக்காட்டினார். இந்தப் பிரச்சினைகளுக்கு முந்தைய திமுக அரசின் நிர்வாகத் தவறுகளே காரணம் என அவர் குற்றம்சாட்டினார். மேலும்,...
14 காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் – தமிழக அரசு உத்தரவு!
குறிப்பாக சென்னை காவல்துறையின் கூடுதல் ஆணையர்கள் மற்றும் பல்வேறு பிரிவுகளின் ஐஜி, ஏடிஜிபி நிலை அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். அதன்படி, மின்வாரிய விஜிலென்ஸ் பிரிவின் ஏடிஜிபியாக பணியாற்றி வந்த ஆயுஷ் மணி திவாரி, தமிழக காவல்துறை தலைமையகப் பிரிவின் ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் காவல் ஆணையராக இருந்த ராஜேந்திரன், மதுரை காவல் ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். மதுரை காவல் ஆணையராக இருந்த கபில் குமார் சரத்கர், சென்னை காவல்துறையின் வடக்கு மண்டல கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை காவல்துறையின் வடக்கு...
திருப்பரங்குன்றம் தீப விவகாரம் : பழைய நடைமுறையே பின்பற்றப்படும், உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த எழுமலை ராம ரவிக்குமார் உள்ளிட்ட சிலர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், கடந்த 2025 டிசம்பர் 1-ஆம் தேதி, வழக்கமான இடங்களைத் தவிர்த்து திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணிலும் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவு நிறைவேற்றப்படாததால் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், இரு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தற்போது மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாகத் தமிழக அரசு தனது...
”எங்களுக்கு மாடி வீடு வேண்டாம்..” – குமுறும் இலங்கைத் தமிழர்கள்..!
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வாணியாறு அணை அருகே இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையத்தில் ஏராளமான இலங்கை தமிழர்கள் வசித்து வருகின்றனர். கடந்த 36 வருடங்களாக வசித்து வரும் இவர்களுக்கு, முறையாக வாழ்வதற்கான வாழ்விடம் இல்லை என தெரிவித்து வருகின்றனர். மேலும் அடுக்குமாடி குடியிருப்பில் இவர்களுக்கு வீடுகள் வழங்குவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்தும், அந்த அடுக்குமாடி குடியிருப்புகளுக்குள் வசித்து வந்தால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் எனவும், தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தற்போது வசிக்கும் பகுதியிலேயே குடியிருப்புகளை...
அம்மோனியா வாயு கசிவு உயிரிழப்பு 7 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 74 பேர் கவலைக்கிடம்…
திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கன்னிகைப்பேர் கிராமத்தில் செயல்படும் தனியாருக்குச் சொந்தமான கடல் உணவு ஏற்றுமதி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில் அசாம் ஒடிசா,மற்றும் ஜார்கண்ட் போன்ற வட மாநில புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் இரவு பகல் என இரண்டு ஷிப்ட்களில் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஜுன் 21 தொழிலாளர்கள் ஆழமான உறக்கத்தில் இருந்தபோது ஆலையின் குளிரூட்டும் பிரிவில் பயன்படுத்தப்படும் அம்மோனியா நச்சு வாயு திடீரென கசியத் தொடங்கியது. இந்த வாயுவை...
சட்டமன்ற Live Cut சர்ச்சை.. சபாநாயகருக்கு உதயநிதி கடிதம்; விளக்கம் அளித்த அமைச்சர் ராஜ்மோகன்.!
இதுதொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, சபாநாயகர் ஜேசிடி பிரபாகருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், “சட்டமன்ற நேரலை துண்டிக்கப்பட்டது குறித்து மக்கள் மத்தியில் சந்தேகங்கள் எழுந்துள்ளன. எதிர்க்கட்சியினரின் விவாதங்கள் மற்றும் கருத்துகளை மக்கள் அறிய விடாமல் தடுப்பது ஜனநாயகத்தை இருட்டில் தள்ளுவதற்கு சமமானது. எனவே, சட்டமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து நேரலையாக ஒளிபரப்பப்படுவதை உறுதி செய்ய சபாநாயகர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார். இதற்கிடையில், கைத்தறி துறை அமைச்சர் விஜய் பாலாஜி,...
சென்னையில் முகாமிட்ட கரூர் போலீஸ்; செந்தில் பாலாஜி தம்பி அசோக்கை தீவிரமாக தேடும் தனிப்படை!
அசோக் கரூரில் இல்லாதது உறுதியானதைத் தொடர்ந்து, அவரை கண்டுபிடிக்கும் முயற்சியாக கரூர் தனிப்படை போலீஸார் சென்னை வந்துள்ளனர். ஏடிஎஸ்பி தலைமையிலான தனிப்படை போலீஸார், சென்னையின் முக்கிய பகுதிகளில் தேடுதல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். குறிப்பாக, எம்.ஆர்.சி நகரில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் இல்லத்திற்கே நேரடியாக சென்ற போலீஸார், அங்கு விசாரணை மற்றும் தேடுதல் பணிகளில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த திடீர் நடவடிக்கை அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அசோக்கை எந்த வழக்கு...
நாளை நீட் மறுதேர்வு: சென்னை தேர்வு மையங்களில் பலத்த பாதுகாப்பு
கடந்த மே மூன்றாம் தேதி மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வானது நடத்தப்பட்ட நிலையில் அதில் வினாத்தாள் கசிவு மற்றும் சில முறைகேடுகள் நடந்ததாக கூறி ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் நீட் மறு தேர்வானது நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக தேர்வு மையங்களில் நடந்து வருகிறது. சுமார் 22 லட்சத்து 79 ஆயிரம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதக்கூடிய நிலையில் 2.5 லட்சம் பணியாளர்கள் மற்றும் 15 ஆயிரம் துணை ராணுவத்தினர்...










