அரக்கோணம் பணிமனையில் ஜூன் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் கடவுப்பாதை மற்றும் தண்டவாள மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக ஜூன் 27-ஆம் தேதி இயக்கப்பட இருந்த 27 இமு மற்றும் மெமு புறநகர் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. அதன்படி, அரக்கோணத்திலிருந்து அதிகாலை 4, 5, 5.50 மற்றும் 6 மணி, காலை 7.20, 9.15, 10 மணி, பிற்பகல் 2.50 மணி, மாலை 6.15 மணி,...
Category: TamilNadu
விஜய் அரசுக்கு அண்ணாமலை வைத்த கோரிக்கை..!
கடந்த 5 ஆண்டுகளில் வெளிச்சத்துக்கு வந்த அனைத்து ஊழல் புகார்களையும் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தவெக அரசுக்கு ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “2022-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட சாலை ஒப்பந்தங்களில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி, முன்னாள் திமுக அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்து சோதனை நடத்தியுள்ளது. திமுக ஆட்சிக் காலத்தில்...
ஜனநாயகன் தயாரிப்பாளருக்கு அரசு பதவி… அதிமுக கண்டனம்..!
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக கே. வெங்கட நாராயணா நியமிக்கப்படுகிறார். அவர் இந்த தற்காலிகப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் நாளிலிருந்து ஓராண்டு காலத்திற்கு பதவி வகிப்பார். இப்பணி நியமனத்திற்கான நிபந்தனைகள் தனியாக வெளியிடப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கே. வெங்கட நாராயணா திரைப்பட தயாரிப்பாளராக அறியப்படுகிறார். தற்போதைய தமிழக முதல்வர் விஜய் நடித்துவரும், அவரது கடைசி திரைப்படமாகக் கூறப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் தயாரிப்பாளரும் அவரே என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நியமனம் அரசியல்...
அம்மோனியா வாயு கசிவு: சிகிச்சை முடிந்த 62 தொழிலாளர்கள் ஒடிசாவுக்கு அனுப்பி வைப்பு
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கசிவு விபத்தால் ஒடிசாவை சேர்ந்த தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இதில் 13 பேர் உயிரிழந்தனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 62 பேர் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். பூரண குணமடைந்த 62 தொழிலாளர்களை அவர்களுடைய சொந்த ஊருக்கு...
அமோனியா வாயு கசிவு தனியார் ஆலையை நிரந்தரமாக மூட ஆய்வு குழு பரிந்துரை
கடந்த ஜூன் 21, 2026 அன்று திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர் கிராமத்தில் உள்ள ‘M/s St. Peter & Paul Seafoods Exports Private Limited’ என்ற தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் நிகழ்ந்தது. அமோனியா வாயு கசிவு காரணமாக இதுவரை 11 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர் மற்றும் 60-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். முதலமைச்சர் விஜய்யின் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட இந்த ஆய்வுக் குழுவில் பின்வரும் முக்கிய அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். தொழிற்சாலை பாதுகாப்பு...
தாய்மாமன் சீர் வேண்டாம்…? விஜய்க்கு திருமா கோரிக்கை..!
தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகள் பயன்பெறும் வகையில் ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை’ அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 அன்று தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக் அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும், தமிழகத்தில் நிரந்தரமாக வசிக்கும் குடும்பங்களை சார்ந்த தாய்மார்களின் குழந்தைகளுக்கு தமிழக முதலமைச்சரின் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “தமிழர் பாரம்பரியத்தில், ‘தாய்மாமன்...
மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் தவெகவினர்… அமைச்சர் விடுத்த எச்சரிக்கை..!
பெரம்பலூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களை சந்தித்தார். இதில் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்த அமைச்சர் ராஜ்மோகன், பெரம்பலூர் மாவட்டத்தின் ஆய்வு பணியை தொடங்கியுள்ளதாகவும், சொந்த ஊரில் பொறுப்புள்ள அமைச்சராக செயல்பட உள்ளதாகாவும் பெருமிதம் தெரிவித்தார். தொடர்ந்து, “தனியாருக்கு நிகராக அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. தனியார் பள்ளி மாணவர்கள் அரசுபள்ளி ஆகிய இரண்டுமே இருகண்களைபோல் அரசு பார்க்கும் தனியாரைபோல அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்துவோம்” என தெரிவித்த...
மின் வாரியத்தில் திமுக செய்த ஊழல் ? நாளை வெளியிடப்படும் வெள்ளை அறிக்கை!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே மின்வெட்டு பிரச்சனை அதிகமாக இருந்து வருகின்றது,இதனால் இரவு நேரங்களில் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் மிகுந்த அவதி நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதைப் பற்றி மின்சார துறையிடம் விளக்கம் கேட்டால் இதற்கு முன்னால் திமுக அரசு மின்சார துறையை பல மடங்கு கடன் சுமையில் வைத்துள்ளதாகவும். இது குறித்து முழு தகவலும் விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிட்டு ஆதாரப்பூர்வமாக நிரூபிப்போம் என்றும் அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்திருந்தார். இந்நிலையில் மின்சாரத்தின் அளவு,...
த்ரிஷா போட்ட பதிவு: AI விஜய்யா? “00:00” என்றால் என்ன?
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் 52 ஆவது பிறந்தநாள் நேற்று முன் தினம் (ஜுன் 22) கொண்டாடப்பட்டது. நடிகர் டூ அரசியல்வாதி டூ முதலமைச்சராக மாறியுள்ள அவருக்கு திரையுலக பிரபலங்கள், தவெக தலைவர்கள், பிற அரசியல் கட்சி தலைவர்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இதன் தொடர்ச்சியாக, சட்டமன்ற கூட்டத்தொடரின் போது கூட முதலமைச்சர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன. இந்நிலையில், சட்டமன்றக் கூட்டத்தொடரின் கடைசி நாளான நேற்று எதிர்கட்சியான திமுகவை கடுமையாக சாடி, அவருக்கே உரித்தான...
அம்மோனியா வாயு கசிவு: பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு!
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே உள்ள கன்னிகைப்பேர் கிராமத்தில் ஒரு கடல் உணவு ஏற்றுமதி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் கடந்த 21 ஆம் தேதி அன்று அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இதில் அங்கு பணியில் இருந்த 65-க்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டுப் பாதிக்கப்பட்டனர். உடனடியாக அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகே உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே இரண்டு பெண்கள் பரிதாபமாக...










