மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை கண்டித்தும், வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) சார்பில் பெரம்பலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் வி. ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் பங்கேற்று உரையாற்றினார். அப்போது, மத்திய அரசின் கொள்கைகளை விமர்சித்த அவர், மாநில அரசும் விவசாயிகளின் வேளாண் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்...
Category: TamilNadu
தமிழக அரசின் ‘SPECTRUM’… பாலியல் குற்றவாளிகளை வகைப்படுத்த புதிய திட்டம்..!
தமிழக காவல்துறையில் குற்றங்களை வகைப்படுத்தி குற்றவாளிகளை கண்காணிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் ரவுடிகளை பல்வேறு கேட்டகிரிகளாக பிரித்து அவர்களை கண்காணித்து குற்றங்களை குறைக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்களையும் இதே போன்று வகைப்படுத்தி கண்காணிக்க தமிழக காவல்துறை புதிய திட்டத்தை வகுத்துள்ளது ஸ்பெக்ட்ரம் என இந்த புதிய திட்டத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. பாலியல் குற்றவாளிகளின் விபரக்குறிப்பு தயாரிப்பு, மதிப்பீடு, வகைப்படுத்துதல், கண்காணிப்பு, ஆபத்து...
நான்கு ஆண்டுகளாக ரயில்வே நிர்வாகம் மெத்தனம்…தேனி மாவட்ட மக்கள் ஆவேசம்…
மதுரையிலிருந்து தேனி வரும் பயணிகள் ரயில், பகல் முழுவதும் இங்கேயே தூங்குகிறது, மாலையில் கிளம்பிவிடுகிறது. இந்த ரயிலால் எங்களுக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை’ என்று ஆவேசமாக முழங்குகிறார்கள் தேனி மாவட்ட மக்கள். 1928ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் போடி, தேனி வழியாக மதுரை வரை மீட்டர் கேஜ் ரயில் துவங்கப்பட்டது. ஏலக்காய், மிளகு கிராம்பு போன்ற வாசனைப் பொருட்களை உலகம் முழுவதும் கொண்டுசெல்ல இது பெரிதும் பயன்பட்டது. பிறகு அதை அகல ரயில் பாதையாக மாற்ற 2010ல் மீட்டர்...
நெல் பணம் எப்போது? காத்திருக்கும் விவசாயிகள்
ஏனிந்த குமுறல்? தமிழக விவசாயிகள் சங்க மாநிலப் பொருளாளர் ஆர்.சுபாஷிடம் கேட்டோம். தமிழக அரசு கூட்டுறவு நியாயவிலைக் கடைகளில் மக்களுக்கு அரிசி வழங்க தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் விவசாயிகளிடம் நேரடி கொள்முதல் மையங்கள் அமைத்து கொள்முதல் செய்கிறது. இதற்கான தொகையை சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கிக்கணக்கில் உடனடியாக வரவு வைக்கிறது. மத்திய அரசும் கூட்டுறவு நியாயவிலைக் கடைகளில் இலவச அரிசி (மோடி அரிசி) வழங்க என்.சி.சிபி எனும் தேசிய கூட்டுறவு நுகர்வோர் சங்கம் மூலம் நெல்...
தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி… திமுக நிர்வாகி கைது..!
இதுகுறித்து, சென்னை தி.நகரில் செயல்பட்டு வரும் Federation of Associations of Private School in Tamil Nadu அமைப்பின் செயலாளர் இளங்கோவன் சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரில், கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகள் அங்கீகாரம், பள்ளித் தர உயர்வு, திட்ட அனுமதிகள் உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளில் சிரமங்களை எதிர்கொண்ட நிலையில், சென்னை சாலிகிராமத்தில் பதிவு செய்யப்படாத “தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம்” என்ற பெயரில் செயல்பட்டு...
முதலமைச்சர் விஜய் Rocked… மேயர் ப்ரியா Shocked..!
கடந்த பிப்ரவரி மாதம் சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் மேயர் ஆர். பிரியா முன்னிலையில் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்திற்காக, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கு சில நாட்களுக்கு முன்பாகவே அவசரமாக டெண்டர்கள் கோரப்பட்டதாக கூறப்படுகிறது. ஆட்சி மாற்றத்திற்கு முன்பே இறுதி ஒப்பந்ததாரர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்த போதிலும், பணி ஆணைகள் வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு, முந்தைய ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட டெண்டர் நடைமுறைகளை மறுஆய்வு செய்ய முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டிருந்தார். அதன்படி...
தயாரிப்பாளருக்கு அரசு பதவி… ஐடி கார்டில் சாதி.. விளக்கம் அளித்த அமைச்சர்..!
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் நிர்மல்குமார் தலைமையில் நடைபெற்ற அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூடத்தில் எம்பி வெங்கடேசன், ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, மற்றும் மாநகராட்சி ஆணையாளர், காவல் ஆணையர், சட்டமன்ற உறுப்பினர்கள் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நிர்மல்குமார், ஜனநாயகன் பட தயாரிப்பாளரை டெல்லி பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளதற்கு எழும் எதிர்ப்புகள் குறித்த பதிலளித்தார். “டெல்லி பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள வெங்கட் நாராயணா கர்நாடகாவை சேர்ந்தவரல்ல. அவர் ஆந்திராவை சேர்ந்தவர். அந்த...
குமுதம் எக்ஸ்குளூசிவ் – ‘நிறைய படிச்சா பெரிய பணக்காரனாகலாம்னு அப்போ நினைச்சேன்!’ பாக்யராஜ் சிறப்பு பேட்டி
திரையுலகில் 50 ஆண்டுகள் நிறைவுசெய்து, “ஒரு படம், ஒரு வெப் சீரிஸ் பண்றேன்…” என அடுத்த 50-&க்கு ரெடியாகி யிருக்கும் கே.பாக்யராஜுக்கு குமுதத்தின் பூங்கொத்து… கடந்த இதழில் ஆரம்பித்த பேட்டியின் தொடர்ச்சி…இப்படி தேடித்தேடி புத்தகம் படிக்கும் பழக்கம் எப்போ ஆரம்பிச்சது? ஸ்கூல் படிக்கும் காலத்திலேயா? என்றதும், பள்ளிக்-கூட காலத்துக்குச் சென்று, நம்மையும் அங்கே கூட்டிச் சென்றார், பாக்யராஜ். “நிறைய படிச்சா பெரிய பணக்-காரனாகலாம்னு ஸ்கூல் படிக்கிறப்ப பலர் சொல்லக் கேள்விப்பட்டேன். படிக்க ஆரம்பிச்சேன். அப்புறம் கொஞ்ச நாள்ல...
ஈரக்குலையறுத்த இறால் ஆலை! அப்பாவி உயிர்களை பறித்த அமோனியா வாயு!
தி ருவள்ளூரில் உள்ள தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட அமோனியா வாயுக்கசிவால் ஏராளமான தொழிலாளர்களின் நுரையீரல், இதயம் உள்ளிட்ட உறுப்புகள் கிட்டத்தட்ட வெந்துபோய்விட்டன. அவர்களில் எட்டு பேர் துள்ளத்துடிக்க உயிரிழந்துவிட்டார்கள். தனியார் நிர்வாகத்தின் அலட்சியத்தால் நடந்த இந்தக் கொடூர விபத்து சென்னை சுற்றுவட்டாரத்தையே கதிகலங்கச் செய்திருக்கிறது! இதுகுறித்து நம்மிடம் பேசிய அப்பகுதி மக்கள், ‘திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே கன்னிகைபேர் பகுதியில் செயின்ட் பீட்டர் பவுல் எனும் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலை இயங்கிவருகிறது. மோகன், ஜோசப்...
தமிழகம் முழுவதும் நாளை 43,051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்
இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் வெளியான அறிக்கையில், ‘தேசிய போலியோ சொட்டு மருந்து முகாம் வரும் நாளை ஜூன் 28 (ஞாயிற்றுக்கிழமை) அன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெறவுள்ளது. தமிழ் நாட்டில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 43,051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். இம்மையங்களில் 52.91 லட்சம் 0-5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க...










