Category: TamilNadu

Home TamilNadu
தம்பியை தாக்கிய வழக்கு … அமைச்சர் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு..!
Post

தம்பியை தாக்கிய வழக்கு … அமைச்சர் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு..!

புதுச்சேரியில் உள்ள லாஸ்பேட்டை எழில் நகரில் தமிழக நிதியமைச்சர் மரிய வில்சனின் சகோதரர் மரிய குளோத்தி வீடு உள்ளது. இந்நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு அமைச்சருக்கும் அவரது தம்பிக்கும் இடையில் சொத்துப் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அமைச்சர் மரிய வில்சன், 2022 ஆகஸ்டு மாதம் 8-ம் தேதி அன்று, மரிய குளோத் வீட்டுக்குள் புகுந்து அவரையும் அவரது தம்பி மனைவி கேர்லைன் கிளேட்டையும் தாக்கியதாக லாஸ்பேட் போலீஸார் நிலையத்தில் புகார் பதிவாகியுள்ளது.  அந்த...

”கொளத்தூர் ஜெயிக்க முடில.. ஆனா பர்சேஸ் மட்டும் நடக்குது..” – அமைச்சர் சரமாரி கேள்வி..!
Post

”கொளத்தூர் ஜெயிக்க முடில.. ஆனா பர்சேஸ் மட்டும் நடக்குது..” – அமைச்சர் சரமாரி கேள்வி..!

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் நிர்மல் குமார், “திமுகவும் திமுக சார்ந்த முன்னாள் அமைச்சர்களும் ஸ்டாலின் அவர்களும் மகன் உதயநிதி தூண்டுதலின் பேரில் தான் அனைத்து குதிரை பேரமும் நடைபெறுகிறது. அதற்கு ஆதாரத்துடன் இன்று பலர் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். குதிரை பேரத்தின் மூலம் எங்களுடைய எம்எல்ஏக்களை பர்சேஸ் பண்ண முயன்றது ஸ்டாலினும் அவருடைய உத்தரவின் பேரில்...

ஆளுநருக்கு எதிரான ஆட்ட்த்தை தொடங்கிய தவெக… !
Post

ஆளுநருக்கு எதிரான ஆட்ட்த்தை தொடங்கிய தவெக… !

மதுரையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், வைகை ஆற்றைக் கடந்து சென்றபோது அதில் தண்ணீர் இல்லாத நிலையை கண்டு வேதனை அடைந்ததாக தெரிவித்தார். மேலும், வைகை ஆற்றை சீரமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், ஆளுநர் மாளிகையே நேரடியாக களமிறங்கும் என்றும் கூறினார். ஆளுநரின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இந்நிலையில், ஆளுநரின் கருத்துக்கு பதிலடி தந்துள்ளார் அமைச்சர் நிர்மல் குமார். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்...

நாளுக்கு நாள் ஏறும் தங்கத்தின் விலை… நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சி!
Post

நாளுக்கு நாள் ஏறும் தங்கத்தின் விலை… நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சி!

இந்த வாரத் தொடக்கத்தில் தங்கத்தின் விலை சற்று குறைந்திருந்தாலும், கடந்த சில நாட்களாக அதன் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. நேற்று (ஜூலை 2) ஒரே நாளில் மட்டும் தங்கம் விலை இருமுறை அதிரடி மாற்றம் கண்டது. நேற்று காலையில் சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்த நிலையில், மாலை நேரத்தில் மேலும் ரூ.1,200 அதிகரித்து நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. இதன் மூலம், நேற்று மாலை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன்...

தவெக எம்.எல்.ஏவிடம் பேரம்… சுபாஷ் பண்ணையாரின் நெருங்கிய கூட்டாளிக்கு தொடர்பா?
Post

தவெக எம்.எல்.ஏவிடம் பேரம்… சுபாஷ் பண்ணையாரின் நெருங்கிய கூட்டாளிக்கு தொடர்பா?

தவெக ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில் சதி நடைபெற்றதாகக் கூறப்படும் வழக்கில் அடுத்தடுத்த திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன.  இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அஸ்தினாபுரத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர், “தினமுகம்” என்ற மாத இதழை நடத்தி வருவதாகவும், முதல் தகவல் அறிக்கையில் (FIR) குறிப்பிடப்பட்டுள்ள பத்திரிகையாளர் இவரே எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், எம்எல்ஏ இளையராஜாவை இருமுறை நேரடியாக தொடர்புகொண்டு, IPDS அமைப்பைச் சேர்ந்த திருநாவுக்கரசு சார்பில் பேசியது ராஜேஷ்தான் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், இந்த...

Confident – அ இருங்க.. 5 வருஷமும் நாம தான்… முதல்வர் விஜய் உறுதி..!
Post

Confident – அ இருங்க.. 5 வருஷமும் நாம தான்… முதல்வர் விஜய் உறுதி..!

தமிழக முதல்வர் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தோழமை கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம், சென்னையை அடுத்த கோவளத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இன்று(ஜூலை 01) மாலை நடைபெற்றது. 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்த தவெக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்தது. இந்நிலையில், ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த தோழமை...

றெக்க கட்டி பறந்த ரெக்க கார்த்திக் பிரண்ட்ஸ்… கண்டுகொள்ளாத காவல்துறை..!
Post

றெக்க கட்டி பறந்த ரெக்க கார்த்திக் பிரண்ட்ஸ்… கண்டுகொள்ளாத காவல்துறை..!

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரை சேர்ந்த ரெக்க கார்த்தி என்ற இளைஞர் உயிரிழந்த நிலையில் அவரின் இறுதி சடங்கு நேற்று நடைபெற்றது. இதற்காக அவரது உடலை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பிணவரையிலிருந்து ஆம்புலன்ஸ் மூலமாக  எடுத்துச் சென்றனர். அப்போது அரசு ராஜாஜி மருத்துவமனை தொடங்கி வைகையாற்று கரையோரம் இல்ல வடகரை சாலை வரை  இறந்துபோன ரெக்க கார்த்தியின் நண்பாஸ் அனைவரும் தங்களது பைக்குகளை முறுக்கியபடி, ஒரே பைக்கில் மூன்றுபேர் வீலிங் என சாலையில் நடுவே அட்ராசிட்டியில் ஈடுபட...

முன்னாள் முதல்வர்கள் குறித்து அவதூறு வழக்கு: சாட்டை துரைமுருகன் விடுதலை..!
Post

முன்னாள் முதல்வர்கள் குறித்து அவதூறு வழக்கு: சாட்டை துரைமுருகன் விடுதலை..!

கும்பகோணம் அருகே பந்தநல்லூர் அரசரடித் தெருவைச் சேர்ந்தவர் ரா.முருகேசன். திமுக நிர்வாகியான இவர், கடந்த 9.10.2021 அன்று சமூக வலைதளமான யூடியூப்பில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன், மாநில செயலாளர் மகிழன் என்கிற சந்தோஷ் மற்றும் திருநாவுக்கரசு ஆகியோர், முன்னாள் முதல்வர்கள் மு.கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோரை உருவ கேலி செய்து பேசியுள்ளதாகக் கூறி,  பந்தநல்லூர் காவல் நிலையத்தில் மூவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார்.  இந்த புகாரின்...

இதுக்கு ஒரு End-ஏ இல்லையா சார்? தொடரும் ரீல்ஸ் மோகம்… நீக்கப்பட்ட தவெக ஒ.செ..!
Post

இதுக்கு ஒரு End-ஏ இல்லையா சார்? தொடரும் ரீல்ஸ் மோகம்… நீக்கப்பட்ட தவெக ஒ.செ..!

கடந்த ஜூன் 28 ஆம் தேதி, விருதுநகர் அருகே செங்குன்றாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்ற நிலையில், தவெக விருதுநகர் மத்திய ஒன்றியச் செயலாளர் முத்துவேல், அதிகாரி போல் ஆய்வு செய்தார்.  தொடர்ந்து, அவர் ஆய்வு செய்தது மட்டுமல்லாமல் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கியதை வீடியோவாக எடுத்து, அதனை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் சினிமா பாடலுடன் சேர்த்து ரீல்ஸாக வெளியிட்டுள்ளார்.  முன்னதாக, தமிழக சுகாதாரத்துறை சார்பில் அரசு மருத்துவமனைகளில்...

TN Weather: வட தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
Post

TN Weather: வட தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!

கோவை, நீலகிரி மற்றும் வட தமிழகத்தில் இன்று (ஜூன் 30) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், சுமார் 0.9 கிமீ உயரம் வரை வடக்கு கடலோர தமிழகத்திலிருந்து குமரிக்கடல் பகுதிகள் வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. கனமழைக்கு வாய்ப்பு இதன்காரணமாக, இன்று கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40...

× Free India Logo
Welcome! Free India
FREE INDIA · Reader account

Login is optional. You can close this window and keep reading.