Category: TamilNadu

Home TamilNadu
Post

‘வெள்ளைக் காகிதம் காட்டிய டி.ஆர்.பி.ராஜா..’ எவ்வளவு ஏத்தம் என எடப்பாடி பழனிசாமி காட்டம்!

அதிமுக ஆட்சியில் திண்டுக்கல் மாவட்ட மக்கள் கோரிக்கையை ஏற்று, 350 கோடியில் மதிப்பில் அற்புதமான அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டுவந்து, ஏழை மக்களுக்கு தரமான சிகிச்சை அளிக்கச் செய்தோம். அதிமுக ஆட்சியில் இருந்தபோது இதேபோல தமிழகத்தின் பல மாவட்டங்களில் 11 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டுவந்து சாதனை படைத்தோம். 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் 17 மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டுவந்து வரலாற்று சாதனை படைத்தோம்.

Post

‘இரண்டாம் இடத்திற்குத் தான் போட்டி.. திமுக-தவெக., வை பங்கம் செய்த எடப்பாடி பழனிசாமி!

திமுக ஆட்சிப் பொறுப்பேற்று நான்காண்டு முடிந்து ஐந்தாண்டு நடக்கிறது, கூடலூருக்கு ஏதாவது பெரிய திட்டம் வந்திருக்கிறதா..? மக்கள் மீது ஆட்சியாளர்களுக்கு அக்கறையில்லை. இதே அதிமுக ஆட்சி இருந்தபோது மக்கள் கோரிக்கை ஏற்று அம்மா அவர்கள் மலை கிராம மக்கள், தேயிலை தொழிலாளர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், மாணவர்கள் நலனுக்கு அரசு கலை அறிவியல் கல்லூரி கொண்டுவந்தார்.

Post

‘அரசு விடுதியில் மாணவர் நிர்வாணம்.. நியாயப்படுத்துவரா முதல்வர்?’ எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

“சமூகநீதி விடுதிகள்” என்று பெயர் வைப்பதால் வருவது அல்ல. அந்த விடுதிகளின் நிர்வாகத்திலும், செயல்பாட்டிலும் சமூகநீதி என்பது இருக்க வேண்டும். இதனை பொம்மை முதல்வர், அவர் தலைமையிலான விளம்பர மாடல் அரசும் எப்போது தான் உணரப் போகிறது?

Post

‘அறிவாலயத்தைக் காப்பாற்றிக் கொடுத்ததே ஜெ., தான்..’ கனிமொழிக்கு இபிஎஸ் சரமாரி பதிலடி

‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப்பயணம் மேற்கொள்ளும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இன்று குன்னூர், உதகமண்டலம் சட்டமன்றத் தொகுதிகளில் மக்களை சந்திக்கிறார். குன்னூர் பயணத்தின்போது ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் இபிஎஸ்க்கு பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது. இதையடுத்து குன்னூர் பேருந்து நிலையம் அருகே மவுன்ட் ரோட்டில் கூடியிருந்த பெருந்திரளான மக்களிடம் இபிஎஸ் எழுச்சியுரை நிகழ்த்தினார்.

Post

காரைக்குடியில் இந்தியாவின் முதல் செட்டிநாடு நகை அருங்காட்சியகம் “பெட்டகம்” தொடக்கம்

இந்த அருங்காட்சியகத்தில் பாரம்பரிய நகைகள் மட்டுமின்றி, வணிக சமூகமான நகரத்தார்கள் வரலாறு குறித்த விவரங்களும் இடம்பெற்று உள்ளன. வியாபார வாய்ப்புகளைத் தேடி கடல்களைக் கடந்த துணிச்சலான வர்த்தகர்கள் என்று வரலாறு கூறுகிறது. அவர்கள் ஐரோப்பிய சுவைகளை சமையலிலும், ஆர்ட் டெகோ (Art Deco) நுணுக்கத்தை நகைகளிலும் இணைத்து, உலகளாவிய தாக்கங்களை தங்கள் செழுமையான பாரம்பரியத்துடன் கலந்தனர். இந்த அருங்காட்சியகம், நகரத்தார்களின் உலகளாவிய பயணத்தை கொண்டாடும் ஒரு இடமாக விரிகிறது.

Post

‘பச்சைப் பொய் சொல்லும் ஸ்டாலினுக்குத் தக்க தண்டனை வழங்குங்கள்’ இபிஎஸ் ஆவேசம்!

திமுக ஆட்சியின் 52 மாதத்தில் சேந்தமங்கலம் தொகுதிக்கு ஏதாவது நன்மை கிடைத்ததா? அதிமுக ஆட்சியில் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்களை, ஒரே அதிமுக ஆட்சியில் இரண்டுமுறை தள்ளுபடி செய்தோம். விவசாயிகள் எந்நேரமும் மோட்டாரை பயன்படுத்த ஏதுவாக மும்முனை மின்சாரம் 24 மணிநேரம் கொடுத்தோம். விவசாயிகளுக்காக அதிமுக ஆட்சியில் குடிமராமத்துத் திட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்மூலம் ஏரி, குளங்கள், கண்மாய்கள் தூர்வாரப்பட்டு நீர் தேக்கப்பட்டன, அதிலிருந்து கிடைத்த வண்டல் மண் விவசாயத்துக்குப் பயன்பட்டது. ஒரு பக்கம்...

Post

‘ஆட்சியில் பங்கு.. அதிகப்படியான சீட்..’ திமுக கூட்டணியில் கொடி தூக்கும் காங்.,!

திமுக கூட்டணியின் பிரதான கட்சியான காங்கிரஸ், தன்னுடைய தொகுதி பங்கீடு குறித்து பகிரங்கமாக கருத்து தெரிவித்திருக்கிறது. ஆட்சியில் பங்கு என்பதை நோக்கி, தங்களின் எதிர்பார்ப்பு இருக்கும் என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி. சிதம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்த, தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசுகையில், “50 ஆண்டுகளுக்கு மேலாக காங்கிரஸ் ஏதாவது ஒரு இயக்கத்தோடு கூட்டு சேர்ந்து பயணிக்கிறது. சாறை அவர்கள் குடிப்பதும், சக்கையை நாங்கள் பார்ப்பதுமான சூழல் நிலவுகிறது. வரும்...

Post

‘கைக்கூலிகளை வைத்து ஆட்டம் போடுகிறார்கள்.. விரைவில் பாடம் புகட்டுவோம்’ டிடிவி, ஓபிஎஸ், செங்கோட்டையனை விளாசிய இபிஎஸ்!

’’நமக்கு கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை சொல்லிக்கொடுத்தவர் பேரறிஞர் அண்ணா, மாணவர்கள் இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு முன்களப் போராளியாக நின்றவர் பேரறிஞர் அண்ணா. தமிழ்நாட்டுக்கு இரு மொழி ஆட்சியைக் கொண்டு வந்தார். ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்றார். ஏழை, எளிய மக்களுக்கு நல்ல பல திட்டங்கள் கொடுத்தார்.

Post

‘தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம்’ ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இணைந்தவர்கள் உறுதிமொழி!

ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் மூலம் ஒரு கோடிக்கும் அதிகமான குடும்பத்தினர் திமுகவில் இணைந்துள்ளனர். பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான இன்று, மாநிலம் முழுவதுமுள்ள 68 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குச்சாவடிகளில் அந்தந்த வாக்குச்சாவடிக்குட்பட்ட பகுதியில் அவர்களை ஒன்றுதிரட்டி, உறுதிமொழியேற்றிட வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியிருந்தார்.

விஜய்யின் பேச்சில் முதிர்ச்சியில்லை.. கூட்டணியை நம்பி திமுக உள்ளதா? ஜவாஹிருல்லா கருத்து
Post

விஜய்யின் பேச்சில் முதிர்ச்சியில்லை.. கூட்டணியை நம்பி திமுக உள்ளதா? ஜவாஹிருல்லா கருத்து

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்த கருத்துகள் பின்வருமாறு- ”நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், பிரதமருக்கும், முதலமைச்சருக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் எதிராகக் குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அந்த வழக்கின் தீர்ப்பு வருவதற்கு முன்பு, விசாரணை நிலுவையில் இருக்கும் சூழலில், 30 நாட்கள் சிறையில் இருந்தால் அவர்கள் பதவி இழப்பார்கள் என்ற சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் கடுமையாக இதை எதிர்த்தபோதிலும், அவர்களின் எதிர்ப்புகளையும் மீறி இந்த மசோதா...

× Free India Logo
Welcome! Free India