Category: TamilNadu

Home TamilNadu
Post

‘கள்ளக்குறிச்சி போகாமல் கரூருக்கு ஓடோடிச் சென்றது தேர்தல் நாடகம்’ முதல்வரை சாடிய இபிஎஸ்

கச்சத்தீவை மீட்பதற்கு எடப்பாடி பழனிசாமி எதுவும் செய்யவில்லை என்று இன்று முதல்வர் ஸ்டாலின் பேசியிருக்கிறார். ஸ்டாலின் அவர்களே கச்சத்தீவைப் பற்றி பேச உங்களுக்குத் தகுதியில்லை. கட்சத் தீவு இலங்கை அரசுக்கு தாரைவார்க்கப்பட்டது எப்போது? மத்தியில் காங்கிரஸ் ஆட்சி, மாநிலத்தில் திமுக ஆட்சி. அப்போதுதான் மீனவர்கள் ஓய்வெடுப்பதற்கும் வலைகளை உலரவைப்பதற்கும் பயன்படுத்திய கச்சத்தீவை தாரைவார்த்தது திமுக. இதை மக்களும், மீனவர்களும் மறக்கவில்லை. நாடகம் ஆடாதீர்கள். ஆனால் அம்மா அவர்கள் மீன்வர்களின் நலன் கருதி, அதிமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத்...

Post

அதிமுக பிரசாரத்தில் பறந்த தவெக கொடி.. அரூர் பயணத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சுக்கு உற்சாகம்!

அதோடு, விசாரணை ஆணையம் அமைத்த பிறகு அரசு அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள், அரசியல்வாதிகள் தொடர் பேட்டிகள் கொடுப்பதைக் கண்டித்து சிபிஐக்கு வழக்கை மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

Post

‘மக்கள் துடிக்கும் நேரத்திலும் உல்லாச சுற்றுப்பயணம் முக்கியமா?’ உதயநிதிக்கு இபிஎஸ் கேள்வி!

‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப்பயணம் மேற்கொள்ளும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இன்று தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். முதலில் தர்மபுரி நகராட்சி அலுவலகம் அருகில் கூடியிருந்த பெருந்திரளான மக்களிடையே எழுச்சியுரை நிகழ்த்தினார்.

Post

‘தேசியக் கட்டமைப்பில் ஒரு நூற்றாண்டு.. ஆர்.எஸ்.எஸ்., உடன் என் அனுபவங்கள்’ மனம் திறக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி!

‘‘இந்த விஜயதசமித் திருநாளில், தேசியக் கட்டமைப்பை நோக்கிய தனது பயணத்தில் நூறாண்டுகளை நிறைவு செய்கிறது ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம். தனி நபர்களின் ஒழுக்க மேம்பாட்டின் வழியான தேசியக் கட்டமைப்பு இது. தேசிய வாழ்வின் இருளடர்ந்த நாட்களை நம் நாடு கடந்துகொண்டிருந்த காலகட்டத்தில், 1925ஆம் ஆண்டு, இதே நாளில், ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கத்தைத் தொலைநோக்குக் கொண்ட தீர்க்கதரிசி டாக்டர் கேசவ் பலிராம் ஹெட்கேவார் தொடங்கினார். காலனித்துவ ஆட்சியாளர்களும் அவர்களின் இறையியல் கூட்டாளிகளுமான அயலகக் கிறித்துவ போதகர்களும் இணைந்து,...

Post

ஊடகவியலாளர் பெலிக்ஸ் ஜெரால்டு கைது.. எக்ஸ் தளத்தில் கடும் கண்டனம் தெரிவித்த எடப்பாடி பழனிசாமி!

கரூர் நெரிசலில் 41 பேர் மரணம் அடைந்தது தொடர்பாக, விஷம கருத்துக்களை சமூக வலைதளத்தில் பதிவு செய்ததாக, தவெக, பாஜக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்களை தமிழக போலீஸ் கைது செய்து வருகிறது. அந்த வரிசையில், பிரபல ஊடகவியலாளர் பெலிக்ஸ் ஜெரால்டு கைது செய்யப்பட்டுள்ளார். அவரது கைதுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து, தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அவருடைய பதிவு:

Post

‘புரட்சி தான் ஒரே வழி..’ கரூர் சம்பவம் குறித்து ஆதவ் அர்ஜூனா சர்சை கருத்து.. எதிர்ப்பால் ‘டெலிட்’

தவெக தலைவர் விஜய் கரூரில் நடத்திய பிரசார பேரணியில், நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் போலீஸ் விசாரணையும் நடந்து வருகிறது. இந்நிலையில், கரூர் சம்பவம் தொடர்பாக, சமூக வலைதளங்களில் விஷம கருத்துக்கள் பரப்பியதாக, தவெக, பாஜக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

Post

‘முதல்வரே.. போட்டோஷூட்டால் மக்களை மேலும் துன்புறுத்தாதீர்கள்’ எடப்பாடி பழனிசாமி காட்டம்!

‘‘தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர் வெளியிட்டுள்ள போட்டோஷூட் வீடியோவே சாட்சி! நேற்று, நான் கரூர் சென்று உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தி, சிகிச்சை பெறுவோருக்கு ஆறுதல் தெரிவித்து செய்தியாளர்களை சந்தித்த போது, எந்த வித அரசியலுக்கும் இடமின்றி, மக்களின் உணர்வாக எனது கருத்துகளைத் தெரிவித்து, அதே சமயம், மக்களின் சந்தேகங்களையும் பதிவு செய்தேன்.

Post

‘விஜய் மீது நடவடிக்கையா? முன்கூட்டியே ஆம்புலன்ஸ் வந்தது எப்படி?’ கரூரில் இபிஎஸ் கேள்வி!

அரசின் பாதுகாப்பு ஏற்பாடு குறித்த கேள்விக்கு, ‘’இந்த அரசும், காவல்துறையும் இதில் முழு கவனம் செலுத்தியிருக்க வேண்டும். மெரினாவில் ஏர் ஷோ நடந்தது அதில் முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாததால் சுமார் 5 பேர் இறந்தார்கள், அங்கே அப்படி ஒரு சம்பவம் நடந்தபோது ஒரு அரசியல் கட்சி தலைவர் கூட்டம் நடத்தும்போது, அவர் ஏற்கெனவே 4 மாவட்டங்களில் கூட்டம் நடத்தியபோது, என்ன பிரச்சினை நடந்தது என்பதை ஆய்வு செய்து பாதுகாப்பு வழங்கி இருந்தால் இந்த உயிரிழப்பை தவிர்த்திருக்கலாம்.

Post

‘5 கட்சி மாறினால் தான் பெரிய பதவி..’ செந்தில் பாலாஜி, செல்வப்பெருந்தகையை கலாய்த்த இபிஎஸ்!

திமுகவின் ஆட்சி 52 மாதம் முடிந்துவிட்டது, இத்தொகுதிக்கு பெரிய திட்டம் ஏதாவது வந்திருக்கிறதா..? திமுக தேர்தல் அறிக்கையில் 525 அறிவிப்புகள் வெளியிட்டது. அதில் 98% நிறைவேற்றப்பட்டதாக ஸ்டாலின் பொய் சொல்கிறார், 10% மட்டுமே நிறைவேற்றிவிட்டு பொய் சொல்லும் திமுகவினருக்கு அடுத்தாண்டு தேர்தலில் பதிலடி கொடுக்க வேண்டும்.

Post

தமிழக கல்வி எழுச்சியை பொறுத்துக் கொள்ள முடியவில்லை..’ மத்திய அரசு மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு!

எனக்கு முன்னால் பேசிய எல்லோரும், தமிழ்நாடு எந்தளவுக்கு கல்விக்கு முக்கியத்துவம் வழங்குகின்றது, எப்படியெல்லாம் திட்டங்களைக் கொண்டு வந்து, எத்தனை இடர்கள் வந்தாலும், தன்னுடைய மாணவர்களை முன்னேற்றுகிறது என்று பேசினார்கள். இந்த நிகழ்ச்சி நடத்துவதற்கு முக்கியக் காரணம், எங்களை பாராட்டிக் கொள்வதற்காக அல்ல, இன்றைக்கு நாங்கள் உங்களை கொண்டாடுவதை பார்த்து, அடுத்தடுத்த Batch மாணவர்களும், இன்னும் படிப்பு மீது ஆர்வம் அதிகமாக வேண்டும்! அதுதான் முக்கியம்.

× Free India Logo
Welcome! Free India