கடந்த ஆண்டு 48-வது சென்னை புத்தகக் கண்காட்சி 2024 டிசம்பர் 27-ஆம் தேதி தொடங்கி 2025 ஜனவரி 12-ஆம் தேதி வரை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது, இது பபாசி (BAPASI) அமைப்பால் நடத்தப்பட்டது, மேலும் இந்த கண்காட்சியில் சுமார் 900 அரங்குகள் இடம்பெற்றிருந்தது மற்றும் 20 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை ஆகின. 2026-ஆம் ஆண்டு நடைபெற உள்ள 49வது புத்தக கண்காட்சி எப்போதும்போலவே இந்தாண்டும் ஜனவரி மாதம் நடைபெற உள்ளது. சென்னை புத்தகக்...
Category: TamilNadu
திருப்பரங்குன்றம் தீபம் வழக்கு செவ்வாய்கிழமை ஒத்தி வைப்பு : மதுரை உயர்நீதிமன்றம்
கார்த்திகை தீபத்தையொட்டி திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்த நிலையில், இரு அமர்வு நீதிபதிகள் வழக்கை விசாரித்து தள்ளுபடி செய்தனர். நேற்று மீண்டும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், திருப்பரங்குன்ற மலையில் உள்ள தீபத்தூனில் தீபம் ஏற்றுவதோடு, இன்று காலை 10.30 மணிக்கு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு இருந்தார். ஆனால் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாமல் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த...
திருப்பரங்குன்றம் 144 தடை உத்தரவு ரத்து : 7 மணிக்கு தீபத்தூணில் தீபம் ஏற்றம் வேண்டும் : நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன்
திருப்பரங்குன்றத்தில் கோயில் தீபத்தூணில் தீபம் ஏற்றும் விவகாரத்தில், அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு தள்ளுபடி செய்தது. இந்த வழக்கை மீண்டும் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனே விசாரிப்பார் என்று நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே. கே. ராமகிருஷ்ணன் அமர்வு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில், இந்த விவகாரம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் இன்று மீண்டும் விசாரித்தார். அப்போது நீதிபதி கூறியதாவது: “தீபம் ஏற்ற வேண்டும் என்ற உத்தரவால் அரசு...
தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு : பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க அரசு அறிவுறுத்தல்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மழை நீர் பல பகுதிகளில் தேங்கி இருப்பதால், டெங்கு புழுக்கள் உருவாக தொடங்கியுள்ளது. இதன் காரணமாக சென்னை, கோவை, தஞ்சை, கடலூர், மதுரை, வேலூரில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சலால் நாள்தோறும் 100 முதல் 120 பேர் வரை பாதிக்கப்படுவதாக தகவல் வெளியாகியது. டெங்கு பாதிப்பு...
திருப்பரங்குன்றம் தீபத்தூண் : தமிழக அரசின் மனு தள்ளுபடி : மதுரை உயர்நீதிமன்ற அமர்வு
அரசுத் தரப்பின் குற்றச்சாட்டு தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அளித்த உத்தரவால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டதாகத் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த மனு நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே. ராமகிருஷ்ணன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வாய்ப்பு வழங்கவில்லை என்றும், நாங்கள் மேல்முறையீடு செய்யத் தயாராகி வந்தோம் என்றும் வாதிடப்பட்டது. மேலும், உயர் நீதிமன்றப் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரின்...
பழைய ஓய்வூதிய திட்டம் கோரி அரசு ஊழியர்கள் போராட்டம் : காவல்துறையினர் கைது செய்தனர்
பழைய ஓய்வூதிய திட்டம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை அரசு ஊழியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அரசு ஊழியர்களின் போராட்டத்திற்கு திமுக அரசு செவி சாய்க்காமல் உள்ளது. இதனால் கோரிக்கைகளை வலியுறுத்து ஆர்ப்பாட்டம், போராட்டங்களில் அரசு ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், இன்று சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்த ஒன்று கூடினார். காவல் துறை எதிர்ப்பை மீறி, காமராஜர் சாலையில் அரசு ஊழியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதை தடுக்கும்...
டிச.12-ம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் விழா : விடுப்பட்ட மகளிருக்கு உரிமை தொகை திட்டம் : ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் 1.14 கோடி மகளிருக்கு உரிமை தொகை மாதம் ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்யும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் 28 லட்சம் மகளிர் உரிமை கோரி விண்ணப்பித்தனர்....
தமிழகத்தில் 77 லட்சம் பேர் வாக்களிக்க முடியாது ? வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்க முடிவு
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் சீர் திருத்தப்பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முழுவதும் 6.41 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் மொத்தம் 6.36 கோடி சிறப்பு தீவிர திருத்தப் படிவங்கள் வீடு வீடாக சென்று வழங்கப்பட்டுள்ளது. அந்த படிவங்களை நிரப்பு கொடுக்க டிசம்பர் 4-ம் தேதி இறுதி நாள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அரசியல் கட்சியினரின் கோரிக்கைபடி டிசம்பர் 11-ம் தேதி வரை படிவங்களை நிரப்பிக்கொடுக்கலாம் என...
திருப்பரங்குன்றம் தீப வழக்கு: "தனி நீதிபதி உத்தரவால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை"- தமிழக அரசு கடும் வாதம்!
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்குப் பதிலாக, மலை உச்சியில் அமைந்துள்ள தீபத் தூணில் ஏற்ற உத்தரவிடக் கோரிய வழக்கில், தனி நீதிபதியின் உத்தரவால் அங்கு சட்டம் – ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுள்ளதாகத் தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவித்துள்ளது. தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இரு நீதிபதிகள் அமர்வில் நடைபெற்று வருகிறது....
UDAN திட்டம்: ஹோசூர் விமான நிலையத்தின் புதிய கட்டுப்பாடு
ஹோசூர் விமான நிலையம் இனி UDAN பிராந்திய இணைப்பு திட்டத்தின் நன்மைகள் பெற முடியாது என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கு காரணமாக “150 கிலோமீட்டர் விதி” குறிப்பிடப்பட்டுள்ளது. 🔍 150 கி.மீ விதி என்றால் என்ன? UDAN திட்டத்தின்படி, 🛑 ஹோசூருக்கு இந்த விதி எப்படி பொருந்துகிறது? ✈️ இதனால் மக்களுக்கு ஏற்படும் நிலை 🔧 வேலூர் & நெய்வேலி விமான நிலையங்கள் – முன்னேற்றம் UDAN திட்டத்திலிருந்து ஹோசூர் நீக்கப்பட்டாலும், இவற்றின் செயல்பாட்டு...









