மெரினா கடற்கரையில், கடைகளை முறைப்படுத்துவது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா அமர்வு, டிசம்பர் 22 ம் தேதி கடற்கரையை நேரில் ஆய்வு செய்தனர். இந்த வழக்கு, இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, உலகிலேயே இரண்டாவது நீளமான கடற்கரையான மெரினா கடற்கரையில் ஒரு பகுதி நீலக்கொடி சான்று பகுதி என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் இரண்டு பகுதிகளை நீலக்கொடி சான்று பகுதியாக அறிவிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். இதுதவிர, தலைவர்களின் நினைவிடங்கள் அமைந்துள்ள...
Category: TamilNadu
பொங்கலுக்கு ரொக்கம் நாளை அறிவிப்பு? பரிசுத்தொகுப்பு விநியோகம் ஜன 8-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
ஜெயலலிதா முதல்வராக இருந்த காலக்கட்டத்தில் அதிமுக ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு பொங்கலுக்கு, குடும்அட்டைதாரர்களுக்கு தலா 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. இதில், பணம் இடம்பெறவில்லை. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை வர இரண்டு வாரங்களே உள்ள நிலையில், 2.22 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான அரசாணையை, கூட்டுறவு மற்றும் உணவுத் துறை செயலர் சத்யபிரதா...
தனியார் பேருந்துகளை அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு லீசுக்கு எடுக்க தமிழக அரசு அனுமதி
தமிழ்நாட்டில் பொதுப் போக்குவரத்து சேவைகளை வலுப்படுத்தும் நோக்கில், தனியார் பேருந்துகளை அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு லீசுக்கு (Lease) எடுக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த முடிவு, போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தவும், பயணிகள் நலனை உறுதி செய்யவும் எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம், அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் பேருந்து பற்றாக்குறையை குறைத்து, அதிக பயணிகள் வரத்து உள்ள வழித்தடங்களில் கூடுதல் சேவைகள் இயக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய பேருந்துகள் வாங்குவதற்கான செலவுகளை தவிர்த்து,...
ஸ்டார்ட்அப் & சுயதொழில் திட்டம்: கிராமப்புற ஸ்டார்ட்அப் சமூகங்களை வலுப்படுத்தும் StartupTN
தமிழ்நாடு அரசின் StartupTN அமைப்பு, ஸ்டார்ட்அப் மற்றும் சுயதொழில் திட்டத்தின் கீழ் கிராமப்புற இளைஞர்கள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் கிராமப்புற ஸ்டார்ட்அப் சமூகங்களை (Rural Startup Communities) உருவாக்கி வருகிறது. இந்த திட்டத்தின் நோக்கம், கிராமப்புறங்களில் உள்ள புதிய தொழில் யோசனைகளை கண்டறிந்து, அவற்றை வளர்ச்சியடையச் செய்து, உள்ளூர் அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாகும். தொழில் தொடங்க விரும்பும் இளைஞர்களுக்கு பயிற்சி, வழிகாட்டுதல், ஆலோசனை மற்றும் தேவையான ஆதரவு வழங்கப்படுகிறது. கிராமப்புற தொழில் முனைவோருக்கு ஆதரவு...
TIDCO-வில் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு
தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டு கழகம் (TIDCO) நிறுவனத்தில் அலுவலக உதவியாளர் (Office Assistant) பணியிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியான மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் நபர்கள் TIDCO நிறுவனத்தின் நிர்வாக மற்றும் அலுவலக செயல்பாடுகளை ஆதரிக்கும் பணிகளில் ஈடுபடுவார்கள். பணியின் விவரங்கள் தகுதி மற்றும் தேர்வு முறை விண்ணப்பதாரர்கள் தேவையான கல்வித் தகுதி மற்றும் பணிப் அனுபவம் ஆகியவற்றை பூர்த்தி...
புத்தாண்டில் அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகள் எவ்வளவு தெரியுமா ?
ஆண்டுதோறும் குழந்தைகள் பிறந்து வந்தாலும், சில நாட்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு என்றுமே சிறப்பு உண்டு. அந்த வகையில் ஆங்கில புத்தாண்டு தினத்தன்று தமிழக அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகள் தனிசிறப்பை பெற்றுள்ளன. அந்த வகையில், சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 46 குழந்தைகள் பிறந்துள்ளன. சென்னை எழும்பூர் குழந்தைகள் நல அரசு மருத்துவமனையில் 15 பெண் குழந்தைகள் மற்றும் 6 ஆண் குழந்தைகள் என மொத்தம் 21 குழந்தைகள் பிறந்தன. இதில், 2 தாய்மார்களுக்கு இரட்டை பெண்...
பொங்கலை முன்னிட்டு கரும்பு விவசாயிகளிடமிருந்து நேரடி கொள்முதல் கோரிக்கை; ஆசிரியர் போராட்ட அறிவிப்புகள் நடுவே ஜனவரி 6-ல் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்
பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில், கரும்பு விவசாயிகளிடமிருந்து அரசு நேரடியாக கரும்பை கொள்முதல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இடைநிலையாளர்களை தவிர்த்து நேரடி கொள்முதல் மேற்கொண்டால், விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கும் என்றும், காலதாமதமின்றி பணம் வழங்கப்படும் என்றும் விவசாய சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன. கரும்பு அறுவடை நடைபெற்று வரும் இந்த முக்கிய காலகட்டத்தில், கொள்முதல் தொடர்பான தாமதம் விவசாயிகளை பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாக்கும் என அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். எனவே, பொங்கலுக்கு முன்பே அரசு...
புத்தாண்டில் போராடிய இடை நிலை ஆசிரியர்கள் : வலுக்கட்டாயமாக கைது செய்த போலீஸ்
சென்னை எழும்பூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் போலீசார் குண்டுகட்டாக கைது செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து, மெரினா காமராஜர் சாலையிலும் முற்றுகையிட திரண்டு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 6-வது நாளாக நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் திரண்ட ஆசிரியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில் புத்தாண்டு தினமான இன்றும் இடைநிலை ஆசிரியர்கள் 7-வது நாளாக தங்களது போராட்டத்தை நடத்தினார்கள். சென்னை எழும்பூரில்...
தமிழ்நாட்டில் முதல் முறையாக சோலார் மூலம் இயங்கும் படகு சேவை தொடக்கம்
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முயற்சியாக, தமிழ்நாட்டில் முதல் முறையாக சோலார் சக்தி மூலம் இயங்கும் படகு சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த புதிய முயற்சி, பசுமை ஆற்றல் பயன்பாட்டை ஊக்குவிக்கும் முக்கியமான அடியெடுப்பாக கருதப்படுகிறது. இந்த சோலார் படகு சேவை, சுற்றுலா மற்றும் பொதுப் போக்குவரத்து தேவைகளை கருத்தில் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எரிபொருள் பயன்பாடு இல்லாமல், சூரிய சக்தியை முழுமையாக பயன்படுத்தி இயங்குவதால், மாசுபாடு குறையும், எரிசக்தி செலவு சேமிக்கப்படும் என்பதே இதன் முக்கிய சிறப்பு. இந்த படகுகள், நவீன...
அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் : பொங்கல் போனசுக்கு ரூ 183 கோடி ஓதுக்கி முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்: முதல்வர் ஸ்டாலின் அவர்களின் உத்தரவுபடி 2024-2025ஆம் ஆண்டிற்கான ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு மிகை ஊதியம்; ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் முன்னாள் கிராம அலுவலர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிட 183 கோடியே 86 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசின் திட்டங்களை கடைக்கோடி மக்களுக்கும் கொண்டு சேர்த்திட அயராது பணியாற்றிவரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும்...





