Category: TamilNadu

Home TamilNadu
“1000 ஏக்கர், 1000 மாடு!” – முன்னாள், இந்நாள் அமைச்சர்களை மாட்டிவிட்ட எம்.ஆர்.கே..!
Post

“1000 ஏக்கர், 1000 மாடு!” – முன்னாள், இந்நாள் அமைச்சர்களை மாட்டிவிட்ட எம்.ஆர்.கே..!

வேளாண் பட்ஜெட் குறித்து பேசிய எம்ஆர்கே பன்னீர்செல்வம், விவசாயக் குடும்பத்தில் பிறக்க வேண்டும் என முதலமைச்சர் விஜய் முன்பு தெரிவித்திருந்ததை சுட்டிக்காட்டினார். அந்த எதிர்பார்ப்புடன் வேளாண் பட்ஜெட்டில் பல்வேறு மாற்றங்கள் இடம்பெறும் என நினைத்ததாகவும், ஆனால் தங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளதாகவும் அவர் விமர்சித்தார். தொடர்ந்து பேசிய அவர், முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவிடம் அதிக அளவில் நிலங்கள் இருப்பதாக குறிப்பிட்டார். இதற்கு பதிலளித்த செங்கோட்டையன், நிலம் வைத்திருப்பதில் குறிப்பிட்ட கட்டுப்பாடுகள் இருப்பதாக சுட்டிக்காட்டி, நேருவை அந்த விவகாரத்தில் சிக்க...

“தினந்தினம் டென்ஷன்ல இருக்கோம்..”: புஸ்ஸி ஆனந்த் –  எம்ஆர்கே இடையே கலகல…!
Post

“தினந்தினம் டென்ஷன்ல இருக்கோம்..”: புஸ்ஸி ஆனந்த் –  எம்ஆர்கே இடையே கலகல…!

வேளாண் பட்ஜெட் குறித்து பேசிய எம்ஆர்கே பன்னீர்செல்வம், விவசாயக் குடும்பத்தில் பிறக்க வேண்டும் என முதலமைச்சர் விஜய் முன்பு தெரிவித்திருந்ததை சுட்டிக்காட்டினார். அந்த எதிர்பார்ப்புடன் வேளாண் பட்ஜெட்டில் பல்வேறு மாற்றங்கள் இடம்பெறும் என நினைத்ததாகவும், ஆனால் தங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளதாகவும் அவர் விமர்சித்தார். தொடர்ந்து, தங்களது ஆட்சிக் காலத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் எவ்வாறு பணிச்சுமையுடன் செயல்பட்டனர் என்பதை அவர் குறிப்பிட்டார். செய்திகளில் ஏதேனும் பிரச்சினை வந்தால் அதிகாலை நேரத்திலேயே அமைச்சர்களைத் தொடர்புகொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டிய...

ஏன் எதிர்க்கட்சித் தலைவர்கள் கை தட்டலா? வன்னி அரசு பேச்சால் சலசலப்பு..!
Post

ஏன் எதிர்க்கட்சித் தலைவர்கள் கை தட்டலா? வன்னி அரசு பேச்சால் சலசலப்பு..!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது தொடர்பாக தொடர்ந்து எழுந்து வந்த சர்ச்சைகளுக்கு மத்தியில், அரசு மற்றும் கல்வி நிறுவனங்களின் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடுவதை கட்டாயமாக்கும் தனித் தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் இன்று (ஆகஸ்ட்10) சட்டப்பேரவையில் முன்மொழிந்தார். அனைத்து கட்சி உறுப்பினர்களின் விவாதத்துக்குப் பின்னர், குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து தொடக்கத்தில் இடம்பெறாமல், வந்தே மாதரம் மற்றும் தேசிய கீதத்துக்குப் பிறகு...

எதிர்க்கட்சிகளுக்கு காத்திருக்கும் மாஸ்டர் ஸ்ட்ரோக்..? தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி..!
Post

எதிர்க்கட்சிகளுக்கு காத்திருக்கும் மாஸ்டர் ஸ்ட்ரோக்..? தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி..!

அரசு சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு உரிய முன்னுரிமை வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் சமீபகாலமாக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வந்தன. பதவியேற்பு நிகழ்ச்சி தொடங்கி, அரசின் பல்வேறு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து தொடக்கத்தில் இடம்பெறாமல் இறுதியாக பாடப்பட்டதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் முன்வைத்திருந்தன. மண், மொழி, மானம் காப்பதே தமிழ்நாட்டின் அடையாளமாக இருந்தது, அந்தவகையில் மொழி அடையாளத்தை தவெக அரசு விட்டுக் கொடுத்துவிட்டது என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.  இதனால் தமிழ்த்தாய் வாழ்த்தின் முக்கியத்துவம் குறைக்கப்படுகிறதா...

லுலு மாபியா சர்ச்சை: ”செருப்படி உனக்காக ரெடி..” – குஷ்புவை வம்பிழுத்த தமிழச்சி!
Post

லுலு மாபியா சர்ச்சை: ”செருப்படி உனக்காக ரெடி..” – குஷ்புவை வம்பிழுத்த தமிழச்சி!

‘லுலு மாபியா’ தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில், தற்போது சமூக ஆர்வலர் தமிழச்சி மற்றும் நடிகை குஷ்பு இடையேயான எக்ஸ் தளப் பதிவு விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணியாரும் தண்ணீரும்… ஓபிஎஸூடன் ஓயாத பிரச்னை… சட்டமன்றத்தில் கலகல..!
Post

அண்ணியாரும் தண்ணீரும்… ஓபிஎஸூடன் ஓயாத பிரச்னை… சட்டமன்றத்தில் கலகல..!

விவாதத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், சட்டப்பேரவையில் உறுப்பினர்களுக்கு தண்ணீர் வழங்குவது தொடர்பாக ஏற்கெனவே தான் கேட்டிருந்ததாகக் குறிப்பிட்டார். அப்போது, இதற்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தடையாக இருந்ததாகக் கூறிய அவர், நேற்று(ஆகஸ்ட் 06) அவரிடம் இதுகுறித்து கேட்டபோது, “சும்மா சொன்னேன்” என்று தெரிவித்ததாகவும் கூறினார். இதனைத் தொடர்ந்து எழுந்து பேசிய ஓ.பன்னீர்செல்வம், தண்ணீர் பாட்டில் வழங்குவதற்கு தான் எந்தத் தடையும் விதிக்கவில்லை என விளக்கம் அளித்தார். மேலும், தன் மீது கூறப்பட்ட அந்தக் கருத்தை வாபஸ் பெற்றுக்கொள்வதாக...

"ஆதவ் அர்ஜூனாவால் தான் எனக்கு சீட்டே கிடச்சது.." – திமுக எம்.எல்.ஏவின் சர்ச்சை பேச்சு..!
Post

"ஆதவ் அர்ஜூனாவால் தான் எனக்கு சீட்டே கிடச்சது.." – திமுக எம்.எல்.ஏவின் சர்ச்சை பேச்சு..!

சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 05 தொடங்கி நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்கள் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பொது விவாதம் இன்று(ஆகஸ்ட் 07) தொடங்கியது. பட்ஜெட் விவாதத்தின்போது பேசிய ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன், ஆதவ் அர்ஜூனாவுடன் தனக்கு நீண்டகால நட்பு இருப்பதாகவும், இருவருக்கும் இடையிலான நட்பை அரசியல் ரீதியாக பிரிக்க முயற்சிக்க வேண்டாம் என்றும் அவைத் தலைவரிடம் கூறியது கவனத்தை பெற்றுள்ளது.  மேலும், திமுக சார்பில் முதன்முறையாக தேர்தலில் போட்டியிட...

பாட்டிலுக்கு 10 ரூபா …….. அதிரடி ஆக்‌ஷன் காட்டிய உயர்நீதிமன்றம் !
Post

பாட்டிலுக்கு 10 ரூபா …….. அதிரடி ஆக்‌ஷன் காட்டிய உயர்நீதிமன்றம் !

சென்னையில் பெரம்பூர், கொளத்தூர்,மாதவரம் உட்பட 30 இடங்களில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளில் அதிக விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்த ஊழியர்கள்  மீது ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் அமலாக்கத் துறைக்கு உத்தரவிடக் கோரி சென்னை செம்பியத்தைச் சேர்ந்த ஜி.தேவராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இதுபோல, 2022ஆம் ஆண்டு முதல் 2026ஆம் ஆண்டு வரை கூடுதலாக வசூலிக்கப்பட்ட...

முதலமைச்சர் Divorce Case …… Investigation பிற்பகலிலும் நடக்குமா?
Post

முதலமைச்சர் Divorce Case …… Investigation பிற்பகலிலும் நடக்குமா?

தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா தொடர்பான விவாகரத்து வழக்கு இன்று (ஆகஸ்ட் 7) செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கில், இருவரும் நேரில் ஆஜராகுவதற்குப் பதிலாக வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராக அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு டிசம்பரில், கணவர் விஜய்யுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை காரணமாகக் கூறி சங்கீதா, செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல்...

"முன்ன பின்ன பேப்பர் படிச்சா தான"….உதய் VS விஜய் !
Post

"முன்ன பின்ன பேப்பர் படிச்சா தான"….உதய் VS விஜய் !

தமிழ்நாடு சட்டசபையில் த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் நிதிநிலை அறிக்கை நேற்று முன்தினம் (ஆகஸ்டு 5) தாக்கல் செய்யப்பட்டது. நேற்று (ஆகஸ்டு 6) வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று பட்ஜெட் மீதான பொது விவாதம் செய்வதற்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று நடைபெற்று வருகிறது. இன்று காலை 9.30 மணிக்கு சட்டசபை கூடியதும் முதலில் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட இருக்கிறது என்று கூறப்பட்ட நிலையில் மறைந்த திரைப்பட இயக்குனர் மற்றும்...

× Free India Logo
Welcome! Free India
FREE INDIA · Reader account

Login is optional. You can close this window and keep reading.