கேரளா மாநிலம், ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் உள்ள பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வந்த பல கோழிகள் திடீரென உயிரிழந்ததால் அதன் ரத்த மாதிரியை சேகரித்து புனேவில் உள்ள பரிசோதனை மையத்திற்கு கால்நடைத்துறையினர் அனுப்பி வைத்தனர். அதை பரிசோதித்ததில் உயிரிழந்த பறவைகளுக்கு, எச்1, என்1 பறவை காய்ச்சல் பரவியிருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நோய் தடுப்பு நடவடிக்கைகளை கேரள அரசு தீவிரப்படுத்தியது. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக மாவட்டங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் சோதனை...
Category: TamilNadu
காஷ்மீராக மாறிய ஊட்டி:வெப்பநிலை மைனஸ் 1 டிகிரி பதிவு , உறைபனியால் சுற்றுலா பயணிகள் தடை?
நீலகிரி மாவட்டம் உதகையில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் கடும் உறைபனியால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் முழுவதும் கடந்த 10 நாட்களாக உறைபனி நிலவி வருகிறது. குறிப்பாக, உதகையில் வெப்பநிலை மைனஸ் ஒரு டிகிரி செல்சியஸ் என்ற அளவில் பதிவானது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகள் வெண்போர்வை போர்த்தியது போல் காட்சியளித்தன. உதகை தாவரவியல் பூங்கா, குதிரைபந்தய மைதானம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் உறைபனி காணப்பட்டது. சாலையோரம் நிறுத்தப்பட்ட வாகனங்களின் மீது...
பூக்கள் விலை கிடு கிடு உயர்வு : மல்லிகைப் பூ கிலோ ரூ 5 ஆயிரம்
தமிழகத்தின் மிகப்பெரிய மலர் சந்தையான குமரி மாவட்டம் தோவாளை மலர்ச்சந்தையில் தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும் பூக்கள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்தும் பூக்கள் தோவாளை மலர் சந்தைக்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இங்கிருந்து திருவனந்தபுரம் உள்பட கேரள மாநிலத்தின் பல பகுதிகளுக்கும் விற்பனைக்காகப் பூக்கள் வாங்கிச் செல்லப்படுகின்றன. மற்ற மாவட்ட மலர் சந்தைகளை ஒப்பிடுகையில் தோவாளை மலர்ச் சந்தையில் பூக்களின் விலை குறைவாக இருக்கும். இங்கு பூக்களின் வரவு, தேவை, விற்பனையைப்...
பொங்கல் ரொக்க பணம் எவ்வளவு? கோட்டையில் முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகள் அவசர ஆலோசனை
தமிழ்நாட்டில் தற்போது 2 கோடியே 26 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள் இருக்கின்றனர். இதில், அரிசி அட்டைதாரர்கள் 1 கோடியே 10 லட்சம் பேர் இருக்கிறார்கள். இந்த அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பும், ரொக்கப் பணமும் கிடைக்கும். ஜனவரி முதல் வாரத்தில் வீடு வீடாக டோக்கன் வழங்கப்பட்டு, ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்பும், ரொக்கப் பணமும் விநியோகிக்கப்படும் என்று தெரிகிறது. சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்த திமுக, 2022, 2023, 2024 ஆகிய...
ஆன்லைனில் ரூ 1 லட்சத்துக்கு ஆணுறை வாங்கிய சென்னைவாசி
இந்தியர்கள் ஆன்லைனில் எந்தந்த பொருட்கள் வாங்கப்படுகிறது என பிரபல தனியார் ஆன்லைன் வர்த்தக நிறுவனம் தகவல் வெளியிட்டு உள்ளது. உலகம் முழுவதும் பொருட்களை கடைக்கு சென்று நேரில் வாங்குவதை விட, ஆன்லைன் மூலம் ஷாப்பிங் செய்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியர்களிடம் இந்த பழக்கம் அதிகரிக்க தொடங்கிவிட்டது. சென்னையை சேர்ந்த ஒருவர் ஒரே ஆண்டில் ஆணுறை வாங்க ரூ.1 லட்சத்துக்கு மேல் செலவு செய்துள்ளார். அவர் 228 முறை ஆணுறை ஆர்டர் செய்துள்ளார். அதன் மொத்த...
புதிய உச்சத்தில் முட்டை விலை : ஆம்லெட், முட்டை தோசை, பெடிமாஸ் விலை உயர்த்த ஹோட்டல்கள் திட்டம்
தமிழகத்தின் முட்டை உற்பத்தி கேந்திரமாக விளங்கும் நாமக்கல் மாவட்டத்தில் 1,100 க்கு மேற்பட்ட கோழிப் பண்ணைகள் உள்ளன. இவற்றின் மூலம் நாள்தோறும் 6 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. மொத்த உற்பத்தியில் 40 சதவீத முட்டைகள் கேரள மாநிலத்திற்கும், தற்போது தினசரி 1 கோடி முட்டைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகின்றன. தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்திற்கு போக மீதமுள்ள முட்டைகள் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பபட்டு வருகிறது. முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலையான ரூ.6.35 ல் ...
ஆதார் அட்டை இருந்தால் மதுரை திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனுமதி: காவல்துறை சொன்ன புது அப்டேட்
மதுரை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்காவில் சந்தனக்கூடு திருவிழா நடைபெற உள்ள நிலையில், கடந்த 19 நாட்களாக மலைக்குச் செல்ல மறுக்கப்பட்டிருந்த அனுமதி, இன்று (டிசம்பர் 22) முதல் அனைத்துத் தரப்பினருக்கும் வழங்கப்பட்டுள்ளது. சந்தனக்கூடு விழா மற்றும் கொடியேற்றம் திருப்பரங்குன்றம் பெரிய ரதவீதியில் உள்ள பள்ளிவாசல் மற்றும் மலையில் உள்ள தர்காவில் வருகிற ஜனவரி 6-ஆம் தேதி சந்தனக்கூடு திருவிழா நடைபெற உள்ளது. இதையொட்டி, நேற்று (டிசம்பர் 21) இரவு 8.30 மணியளவில் பெரிய ரதவீதியில் உள்ள...
அதிக பனிப் பொழிவு : பூக்களின் விலை கிடுகிடு உயர்வு – மல்லிகை கிலோ 2,000 ரூபாய்க்கு விற்பனை !!!
கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டு பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. பகல் நேரங்களில் வெயில் நிலவுவதாலும், இரவில் பனிப்பொழிவு காணப்படுவதாலும், பூக்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக மல்லிகை மற்றும் முல்லை பூக்கள் மலரும் முன்பே பனியால் கருகி விடுகிறது. இதனால் பூக்களின் உற்பத்தி குறைந்ததால் விலை அதிகரித்து காணப்படுகிறது. இது தவிர தற்பொழுது சபரிமலை சீசன் உள்ளதால் பூக்களின் தேவையும் அதிகரித்து உள்ளது. கோவையில் நேற்று ஒரு கிலோ மல்லிகை ரூபாய் 2,000 க்கு விற்பனையானது. மேலும்...
49-வது சென்னை புத்தக கண்காட்சி : ஜனவரி 8 முதல் 21 -ம் தேதி வரை நடக்கிறது
49வது புத்தக கண்காட்சி ஜனவரி 8ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக பபாசி அறிவித்துள்ளது. சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நிருபர்களிடம் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்க (பபாசி) தலைவர் சண்முகம், செயலாளர், வைரவன் ஆகியோர் கூட்டாக கூறியதாவது: சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 49வது புத்தக கண்காட்சி ஜனவரி 8ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அவருடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் அன்பில் மகேஷ்...
என்னது ! ரயிலில் ராமேஸ்வரம் வந்த உ.பி. பக்தர்கள் 300 பேர் டிக்கெட் எடுக்கலயா..!!
ராமேஸ்வரம் கோவில் (இராமநாதசுவாமி கோயில்) என்பது தமிழ்நாட்டில் உள்ள ஒரு முக்கியமான இந்துத் தலம், இது 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்று; இங்கு சிவபெருமான் ராமநாதராக அருள்பாலிக்கிறார், இது ராமர் சிவபெருமானை வழிபட்டதாக நம்பப்படுகிறது, மேலும் இங்குள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடுவது பாவங்களை நீக்கும் என்ற நம்பிக்கை உள்ளது, மேலும் அதன் நீண்ட மண்டபங்களும் கட்டிடக்கலையும் மிகவும் பிரசித்தி பெற்றவை. இங்கு சாமி தரிசிக்க தமிழகத்தில் மட்டுமில்லாமல் வட மாநிலத்தை சேர்ந்தவர்களும் அதிக அளவில் வருகை தருகின்றனர்....










