Category: TamilNadu

Home TamilNadu
எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் விருது வழங்க தடை -நீதிமன்றம் உத்தரவு
Post

எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் விருது வழங்க தடை -நீதிமன்றம் உத்தரவு

2024ம் ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருதை எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில்  பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்க கூடாது என தடை விதித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம் அவரது பெயரை பயன்படுத்தாமல் விருது வழங்கலாம் என தெரிவித்துள்ளது. மறைந்த கர்நாடக இசை பாடகி எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியின் பேரன் சீனிவாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள சிவில் வழக்கில்,கடந்த 2004ல் தனது பாட்டியின் மறைவுக்குப் பிறகு மியூசிக் அகாடமி,  ஆங்கில நாளிதழுடன் இணைந்து, 2005ஆம் ஆண்டு முதல் அவரது நினைவை போற்றும் வகையில் சங்கீத கலாநிதி எம்.எஸ்....

ஜாபர் சாதிக் ஜாமின் கோரி மனு – அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு
Post

ஜாபர் சாதிக் ஜாமின் கோரி மனு – அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு

சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக முன்னாள் நிர்வாகியும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக், சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி, அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து, கடந்த ஜூன் 26ம் தேதி கைது செய்தது. பின்னர் அவரது சகோதரர்...

ஈ.சி.ஆரில் 200 ஏக்கரில் ஆன்மீக சுற்றுலா மையம் -அமைச்சர் கொடுத்த குட் நியூஸ்
Post

ஈ.சி.ஆரில் 200 ஏக்கரில் ஆன்மீக சுற்றுலா மையம் -அமைச்சர் கொடுத்த குட் நியூஸ்

ஈ.சி.ஆர் பகுதியில் 200 ஏக்கர் பரப்பளவில் ஆன்மீக சுற்றுலா மையம் அமையவுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு சுற்றுலா விருதுகள் வழங்கும் விழா சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு  2024 ஆம் ஆண்டுக்கான சுற்றுலா விருதுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழா மேடையில் பேசிய அமைச்சர் பி.கே.சேகர்பாபு,...

அறப்போர் இயக்கத்திற்கு எதிராக வழக்கு -சென்னை உயர்நீதிமன்றத்தில் இபிஎஸ் ஆஜர்
Post

அறப்போர் இயக்கத்திற்கு எதிராக வழக்கு -சென்னை உயர்நீதிமன்றத்தில் இபிஎஸ் ஆஜர்

நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு தொடர்பாக கருத்து தெரிவிக்க அறப்போர் இயக்கத்துக்கு தடை கோரி தாக்கல் செய்த வழக்கில் சாட்சியம் அளிப்பதற்காக, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,  சென்னை  உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில்  ஆஜரானார்.  கடந்த  2016-21ம் ஆண்டுகளில், அதிமுக ஆட்சியில் தஞ்சாவூர், சிவகங்கை, கோவை மாவட்டங்களின் நெடுஞ்சாலை டெண்டர் ஒதுக்கீட்டில், அரசுக்கு 692 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தி முறைகேடு செய்துள்ளதாக நெடுஞ்சாலைத் துறையை கட்டுப்பாட்டில் வைத்திருந்த முன்னாள் முதல்வர்  எடப்பாடி பழனிசாமிக்கு...

விஜய்யை உற்றுநோக்கும் உளவுத்துறை-தவெக மாநாட்டிற்கு சென்றவர்கள் குறித்து தகவல் சேகரிப்பு
Post

விஜய்யை உற்றுநோக்கும் உளவுத்துறை-தவெக மாநாட்டிற்கு சென்றவர்கள் குறித்து தகவல் சேகரிப்பு

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டிற்கு சென்றவர்கள் யார்- யார்? பட்டியலை சேகரிக்கும் பணியில் உளவுத்துறை போலீசார் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கடந்த மாதம்  நடந்தது. நடிகரும், அதன் கட்சியின் தலைவருமான விஜய் மாநாட்டில் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. விஜய் அரசியல் மாநாட்டால் அரசியல் அரங்கில்லபல்வேறு சலசலப்புகளும் ஏற்பட்டுள்ளது. அடுத்தக்கட்டமாக விஜய் அரசியல் நகர்வுகளை அதிரடியாக எடுத்து வைக்க...

என்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜா வீட்டில் சோதனை- போலீஸ் குவிப்பு
Post

என்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜா வீட்டில் சோதனை- போலீஸ் குவிப்பு

என்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜா தொடர்புடைய 14 இடங்களில் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் இணைந்து சோதனை நடத்தி வருகின்றனர். நில மோசடி வழக்கு தொடர்பாக என்கவுன்டர் செய்யப்பட்ட சீசிங் ராஜா வீடு உட்பட 14  இடங்களில் பள்ளிகரனை துணை ஆணையர் தலைமையில் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தாம்பரம் காவல் ஆணையர் அபின் தினேஷ் மொடக் உத்தரவின் பேரில்  பள்ளிக்கரணை துணை ஆணையாளர் கார்திகேயன் தலைமையிலான உதவி ஆணையாளர்கள்,  14 ஆய்வாளர்கள் உள்ளிட்ட 200க்கும்...

சிக்கன் ரைஸ் தான் காரணமா?-பரிதாபமாக உயிரிழந்த வீராங்கனை
Post

சிக்கன் ரைஸ் தான் காரணமா?-பரிதாபமாக உயிரிழந்த வீராங்கனை

ரயிலில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டதால் கூடைப்பந்து வீராங்கனை உயிரிழந்தாரா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராபின் டென்னிஸ். இவரது மகள் எலினா லாரெட் (15). கோவையில் உள்ள  பெப்பூல் சிபிஎஸ்சி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.  பள்ளிகளுக்கு இடையேயான  கூடைப்பந்து  போட்டி  மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியரில் நவம 8ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடந்தது. இந்த  போட்டியில் எலினா லாரெட் கலந்து கொண்டார்....

இளம்பெண் பாலியல் வன்கொடுமை புகார்- பாடகர் குருகுகன் கைது
Post

இளம்பெண் பாலியல் வன்கொடுமை புகார்- பாடகர் குருகுகன் கைது

சாப்ட்வேர் என்ஜினியரான இளம்பெண் புகாரில் பரங்கிமலை மகளிர் போலீசார் வழக்குப்பதிவு தேடி வந்த நிலையில், பாடகர் குருகுகனை கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்தவர்  குரு குகன்(26). இவர் தனியார் தொலைக்காட்சி இசை நிகழ்ச்சியில் பாடகராக பங்கேற்று பிரபலமானவர்.சென்னையில் வாரந்தோறும் நடக்கும் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியிலும் பல இசையமைப்பாளர்களின், நேரலை இசை நிகழ்ச்சியிலும் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில், பாடகர் குரு குகன் மீது பரங்கிமலை பகுதியைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியரான இளம்பெண்...

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மெயின் தேர்வில் முறைகேடு? – நடவடிக்கை எடுக்க தேர்வர்கள் கோரிக்கை
Post

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மெயின் தேர்வில் முறைகேடு? – நடவடிக்கை எடுக்க தேர்வர்கள் கோரிக்கை

கடந்த பிப்ரவரியில் நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மெயின் தேர்வு விடைத்தாள்களில் பல முறைகேடுகள் நடந்திருக்கலாம் என தேர்வர்கள் சந்தேகம் எழுப்பி உள்ளனர்.  கடந்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற குரூப் 2 மெயின் தேர்வு விடைத்தாள்களில் பல முறைகேடுகள் நடந்திருக்கலாம் என தேர்வர்கள் சந்தேகம் எழுப்பி உள்ளனர். தேர்வு எழுதியவர்களில் ஐந்தாயிரம் பேருக்கு அண்மையில் அரசு பணி வழங்கப்பட்ட நிலையில், தற்போது தான் விடைத்தாள் நகல்களை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறது . அதில் பலருக்கு மதிப்பெண்கள் முரண்பாடாக...

நடிகை கஸ்தூரி தீவிரவாதியா? – காவல்துறைக்கு தமிழிசை செளந்தரராஜன் கேள்வி
Post

நடிகை கஸ்தூரி தீவிரவாதியா? – காவல்துறைக்கு தமிழிசை செளந்தரராஜன் கேள்வி

நடிகை கஸ்தூரி தவறான கருத்துக்களை தெரிவித்ததற்கு மன்னிப்பு கேட்டார்.ஆனாலும் அவரை ஒரு தீவிரவாதி போன்று  காவல்துறையினர் நடத்துவது சரியானது அல்ல என தமிழிசை சௌந்தரராஜன்  தெரிவித்துள்ளார். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 88வது நினைவு தினத்தையொட்டி சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் உள்ள வ.உ.சிதம்பரனாரின் திருவுருவச்சிலைக்கு அருகே வைக்கப்பட்டுள்ள வ.உ.சிதம்பரத்தின் திருவுருவப்படத்திற்கு பாஜக மூத்த தமிழிசை சௌந்தரராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், “ வ.உ. சிதம்பரனாருக்கு நினைவஞ்சலி செலுத்துவதில் பெருமை...

× Free India Logo
Welcome! Free India
FREE INDIA · Reader account

Login is optional. You can close this window and keep reading.