Category: TamilNadu

Home TamilNadu
கல்வியில் தமிழ்நாட்டை சிங்கப்பூருடன் ஒப்பிட வேண்டும் – அமைச்சர் கோவி.செழியன்
Post

கல்வியில் தமிழ்நாட்டை சிங்கப்பூருடன் ஒப்பிட வேண்டும் – அமைச்சர் கோவி.செழியன்

 170 ஆண்டு கால பழமையான கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரி தென்னிந்தியாவின் கேம்பிரிட்ஜ் என போற்றப்படுகிறது, இக்கல்லூரியின் பட்டமேற்பு விழாவில் கல்லூரி முதல்வர் மாதவி வரவேற்புரை நிகழ்த்த, கல்லூரி பழைய மாணவரான, தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் 2021 – 2022ம் ஆண்டு தேர்ச்சி பெற்ற 1,487 மாணவ மாணவியர்களுக்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்று பட்டம் வழங்க வந்திருந்தார். நிகழ்ச்சிக்கு வர ஒன்றரை மணி நேரம் தாமதமான நிலையில் அதற்கு வருத்தம் தெரிவித்து சிறப்புரையாற்றினார்.  அமைச்சர் தனது...

தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க வேண்டி வழக்கு 
Post

தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க வேண்டி வழக்கு 

மதுரையைச் சேர்ந்த ரமேஷ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கு ஒன்றினைத் தாக்கல் செய்துள்ளார். அதில், இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் நிகழ்வுகள் தினமும் நடைபெறுகிறது. ஆகவே, இந்தியக் கடற்படைக் கப்பல், எல்லைக் கோட்டில் இருந்து, இந்திய மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்க இடைக்கால உத்தரவிட வேண்டும். மேலும், இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கொல்லப்படுவதையும், வலைகளைப் பறித்து, கைது செய்வதையும்  தடுக்கும் வகையில் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த அறிவுறுத்த வேண்டும்” எனக் கூறியிருந்தார். இந்த...

தாயின் கண்முன்னே மகளை இழுத்து சென்ற சிறுத்தை… பரிதாபமாக உயிரிழந்த 6 வயது சிறுமி!
Post

தாயின் கண்முன்னே மகளை இழுத்து சென்ற சிறுத்தை… பரிதாபமாக உயிரிழந்த 6 வயது சிறுமி!

கோவை மாவட்டம் வால்பாறை அருகே ஊசிமலை எஸ்டேட் பகுதிக்கு ஜார்கண்ட் மாநிலத்தில் கோன்டா என்ற பகுதியில் இருந்து தேயிலை பறிக்கும் வேலைக்காக அனுல் அன்சாரி என்பவர், தனது இரண்டு மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் வந்து வேலை செய்து வருகின்றனர்.  இந்நிலையில் இன்று ஊசிமலை எஸ்டேட் பகுதியில் ஒருவர் இயற்கை மரணம் அடைந்த நிலையில் அனைவரும் வீட்டில் இருந்து உள்ளனர். அணுல் அன்சாரி மற்றும் நசிரென் காத்துன் மற்றும் 6 வயது குழந்தை அப்சரா காத்துன் தேயிலை...

200 கிலோ கஞ்சாவை கடத்த முயற்சி… அலேக்காக தூக்கிய போலீசார்!
Post

200 கிலோ கஞ்சாவை கடத்த முயற்சி… அலேக்காக தூக்கிய போலீசார்!

தமிழகத்தில் போதைப்பொருள் பரவலைக் கட்டுப்படுத்த EBCID, தமிழ்நாடு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. முக்கிய சோதனை நடத்தப்பட்டதில் 17 அக்டோபர் 2024 அன்று மத்திய நுண்ணறிவு பிரிவு சென்னை ரேஞ்ச் இன்ஸ்பெக்டர் அன்பரசி மற்றும் அவரது குழுவினர் மாநிலங்களுக்கு இடையேயான 4 கஞ்சா கடத்தல்காரர்களை பிடித்தனர். சுமார் ரூ.20,00,000/- மதிப்புள்ள 200 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மினி லோட் கேரியரான Force Trax பதிவு எண் AP 39 UH 5461 மற்றும் பதிவு எண்...

தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு
Post

தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு

இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகையான தீபாவளிப் பண்டிகை இந்த ஆண்டு அக்டோபர் 31ம் தேதி கொண்டாடப்படவிருக்கிறது. அக்டோபர் 31ம் தேதி வியாழக்கிழமை என்பதால் வெள்ளிக்கிழமையும் விடுமுறை கிடைத்தால் அதனோடு சேர்ந்து சனி, ஞாயிறு என மொத்தம் நான்கு நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பில் மக்கள் அனைவரும் இருந்தனர்.  இந்நிலையில் பலரது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதைப் போன்று தமிழக அரசு தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், தீபாவளியையொட்டி சொந்த ஊர்களுக்குச்...

”இந்தி மாதம் கொண்டாடப்படுவது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல..”  – டிடிவி தினகரன்!
Post

”இந்தி மாதம் கொண்டாடப்படுவது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல..”  – டிடிவி தினகரன்!

தூர்தர்ஷன் தமிழ் எனப்படும் சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தில் இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழாவும், சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்களும் இன்று மாலை நடைபெறும் என்றும், அந்நிகழ்ச்சிகளில் தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான இந்தி திணிப்பு என்று தமிழ்நாட்டின் ஆளும் கட்சித் தொடங்கி எதிர்க்கட்சிகள் வரை உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் விமர்சித்து வருகின்றன.  இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்...

ரத்தம் சொட்ட சொட்ட சித்ரவதை செய்யப்பட்ட நீட் மாணவர்கள்… சிசிடிவியில் பகீர்!
Post

ரத்தம் சொட்ட சொட்ட சித்ரவதை செய்யப்பட்ட நீட் மாணவர்கள்… சிசிடிவியில் பகீர்!

நாடு முழுவதும் மருத்துவ படிப்பு சேருவதற்கு நீட் தேர்வு கட்டாயமாக்கபட்டதை தொடர்ந்து நீட் தேர்வு தேர்ச்சி பெறுவதற்காக 12-ம் வகுப்பு முடித்த மாணவர்களும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களும் நீட் பயிற்சி மையங்களை நோக்கி படையெடுக்கும் நிலை தற்போது அதிகரித்துள்ளது குறிப்பாக, தமிழகத்தில் எப்படியாவது மருத்துவராகி விட வேண்டும் என்பதற்காக நடுத்தர வர்க்க முதல் வசதி படைத்தவர்கள் என அனைவரும் தங்கள் பிள்ளைகளை கடன் வாங்கியாவது பயிற்சி மையங்களுக்கு அனுப்பி படிக்க வைக்கும் நிலை தற்போது உருவாகியுள்ளது....

சுகாதாரமற்ற குடிநீரால் 10 வயது சிறுவன் வைரஸ் காய்ச்சலால் பலி 
Post

சுகாதாரமற்ற குடிநீரால் 10 வயது சிறுவன் வைரஸ் காய்ச்சலால் பலி 

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள குள்ளப்புரம் ஊராட்சிக்கு உட்பட்ட சங்கரமூர்த்திபட்டி பகுதியைச் சேர்ந்த  நாகராஜ் – ரம்யா தம்பதியரின் 10 வயது மகன் மோகித் குமார். தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த எட்டு நாட்களாக சிறுவன் மோகித் குமார் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு 7 மணியளவில் உயிரிழந்தார். இதனை வைரஸ் காய்ச்சலால் உயிரிழந்த சிறுவனின்...

சிறைகளில் கைதிகளை சந்திக்க வழக்கறிஞர்களுக்கு புது ரூல்ஸ்…..!
Post

சிறைகளில் கைதிகளை சந்திக்க வழக்கறிஞர்களுக்கு புது ரூல்ஸ்…..!

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிரபல ரவுடியான நாகேந்திரன் சிறையில் இருந்து கொண்டே அவரது மகன் வழக்கறிஞரான அஸ்வத்தாமன் மூலம் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதும் கொலையை அரங்கேற்றியதும் விசாரணையில் வெளியானது. இதில் பல வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சிறையில் இருந்து ரவுடிகள் வழக்கறிஞர்கள் மூலம் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகிறார்களா உள்ளிட்ட விவகாரம் தொடர்பாக தமிழக காவல்துறை தரப்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூலை...

மது போதையில் சண்டையிட்ட வட மாநிலப் பெண்கள் 
Post

மது போதையில் சண்டையிட்ட வட மாநிலப் பெண்கள் 

சென்னை பள்ளிக்கரணையை அடுத்த  மேடவாக்கம் பிரதான சாலையில் இரண்டு வட மாநிலப் பெண்கள் மது போதையில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. அப்பொழுது அவ்வழியே ரோந்து வாகனத்தில் வந்த பள்ளிக்கரணை போலீசார் சண்டையிட்டுக் கொண்டு இரு பெண்களை சமாதானப்படுத்தி விட்டனர். இருவரும் அதிகளவு  போதையில் இருந்ததால் சண்டையைத் தடுக்க சென்ற போலீஸாரிடம் கெட்டவார்த்தைகளால் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  போலீசார் விசாரித்துக் கொண்டிருந்த போது அவர்களில் ஒரு வட மாநில பெண்...

× Free India Logo
Welcome! Free India