Category: TamilNadu

Home TamilNadu
தவெக மாநாட்டில் நான் பங்கேற்கிறேனா? -KPY பாலா சொன்ன பதில்
Post

தவெக மாநாட்டில் நான் பங்கேற்கிறேனா? -KPY பாலா சொன்ன பதில்

விஜய் மாநாட்டில் கலந்து கொள்ளும் அளவிற்கு நான் பெரிய ஆள் இல்லை என நடிகர் KPY பாலா  தெரிவித்துள்ளார். சென்னை பள்ளிக்கரணையில் தனியார் இருசக்கர வாகன ஷோரூம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட KPY பாலா ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.பின்னர் ஷோரூம்மில் பணியாற்றும் ஊழியர்கள், பொதுமக்கள் பாலாவுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த KPY பாலா , “ குக் வித் கோமாளி நிகழ்ச்சி பார்வையாளர்கள் குறைந்து வருவதாக குறித்த...

நில மோசடி விவகாரம்: நியாயம் கிடைக்கும் வரை  போராடுவேன் – நடிகை கெளதமி 
Post

நில மோசடி விவகாரம்: நியாயம் கிடைக்கும் வரை  போராடுவேன் – நடிகை கெளதமி 

தனக்கு இழைக்கப்பட்ட அநியாயத்திற்கு நியாயம் கிடைக்கும் வரை போராடுவேன் என நடிகை கெளதமி தெரிவித்துள்ளார். நடிகை கௌதமி, காரைக்குடியைச் சேர்ந்த அழகப்பன் என்பவரிடம் ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள சுவாத்தான் கிராமத்தில் நிலம் வாங்கி தருவதற்காக ரூ.3 கோடியை பெற்றுக் கொண்டு நிலம் வாங்கி தராமல் வேறு ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்ட நிலத்தை வாங்கி கொடுத்து பணத்தை மோசடி செய்ததாகவும், அவரிடம் இருந்து ஏமாற்றப்பட்ட தொகையை பெற்று தர வேண்டும் என்றும் கேட்டு ராமநாதபுரம் மாவட்ட...

மதுவை விற்கும் அரசால் பட்டாசு கடை அமைக்க முடியாதா?- அரசுக்கு நீதிமன்றம் கேள்வி
Post

மதுவை விற்கும் அரசால் பட்டாசு கடை அமைக்க முடியாதா?- அரசுக்கு நீதிமன்றம் கேள்வி

பட்டாசு கடைகள் அமைப்பது தொடர்பான வழக்கில், மதுவை விற்கும் அரசால் பட்டாசு கடை அமைக்க முடியாதா? என அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைப்பது தொடர்பாக டெண்டர் நடவடிக்கைகளுக்கு விதித்த  தடையை மீறியதாக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சுற்றுலாத் துறை செயலாளர் உள்ளிட்டோர் நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத் திடலில் பட்டாசு விற்பனை செய்வதற்கான...

வணிக விதிகளில் திருத்தம்… அரசிதழில் வெளியான அதிரடி அறிவிப்பு!
Post

வணிக விதிகளில் திருத்தம்… அரசிதழில் வெளியான அதிரடி அறிவிப்பு!

தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வரும் நிறுவனங்கள் கட்டுமான பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு பல்வேறு துறைகளிடம் அனுமதி பெற வேண்டும். இந்த அனுமதிகளை எளிதாக பெரும்வகையில் தமிழ்நாடு வணிக விதிகளின்படி குறிப்பிட்ட காலத்திற்குள் இந்த அனுமதி வழங்கப்படுகிறது. இந்நிலையில், இந்த விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, அதிக உயரம் இல்லாத கட்டடங்களில் கட்டுமான திட்டத்தை மாற்றுதல், கூடுதலாக சேர்த்தல், திருத்தம் செய்தல், மறுமதிப்பீடு செய்தல் ஆகியவற்றுக்கான அனுமதியை, டி.டி.சி.பி., எனப்படும் நகர ஊரமைப்பு துறை, 45 நாட்களுக்குள்...

”பாதிக்கப்படாத சென்னை… வெள்ளை அறிக்கை தேவையா?”  – அமைச்சர் துரைமுருகன் பேச்சு!
Post

”பாதிக்கப்படாத சென்னை… வெள்ளை அறிக்கை தேவையா?”  – அமைச்சர் துரைமுருகன் பேச்சு!

சென்னை நேப்பியர் பாலம் அருகே உள்ள முகத்துவாரத்தில்   நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் துரைமுருகன், “மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ள பாதிப்பால் சென்னை மாநகரம் பாதிக்கப்படுவது உண்டு. அந்த நிலை ஏற்படக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று எல்லாத் துறைகளுக்கும் முதலமைச்சர் அறிவுறுத்தி இருந்தார். அறிவுறுத்தலோடு நிற்காமல் அந்தந்த துறை செய்யக்கூடிய பணிகளுக்கு நிதியையும் முதலமைச்சர் ஒதுக்கினார். இதனால் இந்தாண்டு பெய்த கனமழையால் சென்னை மாநகரில்...

சபாநாயகருக்கு எதிரான வழக்கு – அதிமுக வழக்கறிஞருக்கு நீதிமன்றம் கேள்வி
Post

சபாநாயகருக்கு எதிரான வழக்கு – அதிமுக வழக்கறிஞருக்கு நீதிமன்றம் கேள்வி

ஜெயலலிதா மரணத்துக்கு பின் 40 எம்.எல்.ஏ.க்கள் திமுக-வில் இணைய தயாராக இருந்ததாக சபாநாயகர் அப்பாவு கூறியது எப்படி அவதூறாகும் என விளக்கமளிக்க அதிமுக வழக்கறிஞர் அணி இணைச்செயலாளருக்கு  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் கடந்த ஆண்டு நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய சபாநாயகர் அப்பாவு, ஜெயலலிதா மரணம் அடைந்த நேரத்தில் 40 அதிமுக எம்.எல்.ஏக்கள் திமுகவில் இணைய தயாராக இருந்ததாகவும், அதை திமுக தலைவர் ஸ்டாலின் ஏற்க மறுத்து விட்டதாகவும் கூறியிருந்தார்.இது அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு...

சாம்சங் ஊழியர்கள் மீண்டும் பணிக்குத் திரும்பினர் – பேச்சுவார்த்தையில் உடன்பாடு 
Post

சாம்சங் ஊழியர்கள் மீண்டும் பணிக்குத் திரும்பினர் – பேச்சுவார்த்தையில் உடன்பாடு 

சாம்சங் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் நாடறிந்தது. சாம்சங்க ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு, தொழிற்சங்கம் தொடங்க அனுமதி, 8 மணி நேர வேலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி 1,500க்கும் மேற்பட்ட சாம்சங் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். கம்யூனிஸ்ட் கட்சிகள் தீவிரமாக இப்போராட்டத்தை முன்னெடுத்தனர். 36 நாள்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த இந்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.  பல கட்டப் பேச்சுவார்த்தைக்குப் பின்னரும் முடிவு...

”டீ வாங்கிக் கொடுக்கும் சேகர்பாபு.. முதிர்ச்சியின்மை கொண்ட உதயநிதி” – எடப்பாடி பழனிசாமி காட்டம்! 
Post

”டீ வாங்கிக் கொடுக்கும் சேகர்பாபு.. முதிர்ச்சியின்மை கொண்ட உதயநிதி” – எடப்பாடி பழனிசாமி காட்டம்! 

அதிமுகவின் 53 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் முன்னாள் முதலமைச்சர்களான எம்ஜிஆர் ,  ஜெயலலிதா சிலைகளுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலையிட்டு மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து கட்சிக் கம்பத்தில் அதிமுக கொடியை ஏற்றிய அவர்,  தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, ”குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தல் சென்னை உட்பட பல மாவட்டங்களில் அதி கன மழை பெய்யும் என வானிலை...

விட்றா ஏர்போட்டுக்கு பஸ்-அ..டாக்சி கிடைக்காமல் தவித்த பயணிகள்.. பிக்-அப் செய்ய விரைந்த அரசு பேருந்து
Post

விட்றா ஏர்போட்டுக்கு பஸ்-அ..டாக்சி கிடைக்காமல் தவித்த பயணிகள்.. பிக்-அப் செய்ய விரைந்த அரசு பேருந்து

கனமழை காரணமாக கால்டாக்சி உள்ளிட்ட வாகனங்கள் கிடைக்காமல் விமான நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருந்த பயணிகள் மாநகர பேருந்து மூலம் அழைத்து செல்லப்பட்டனர்.  வடகிழக்கு பருவழை தீவிரமடைந்துள்ளதால் சென்னையில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு ஓலா, உபர், ரேபிடோ உள்ளிட்ட தனியார் வாடகை வாகனங்கள் கிடைக்கவில்லை என்ற புகார் எழுந்தது. இதையடுத்து  விமான நிலையம் வழியாக செல்லும் பேருந்துகள் விமானங்களின் வருகை நேரத்திற்கு ஏற்றவாறு விமான நிலையத்திற்கு உள்ளே...

இன்றும், நாளையும் இலவச உணவு… முதலமைச்சர் கொடுத்த அசத்தல் அறிவிப்பு!
Post

இன்றும், நாளையும் இலவச உணவு… முதலமைச்சர் கொடுத்த அசத்தல் அறிவிப்பு!

அம்மா உணவகங்களில் இன்றும், நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார் . சென்னையில் கனமழை கொட்டித் தீர்த்ததால் பெரும்பாலான இடங்களில் அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அத்துடன் உணவகங்களுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் உணவுக்காக அலையும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில், அம்மா உணவகங்களில் இன்றும் நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், அனைத்து நிவாரணப் பணிகளும்...

× Free India Logo
Welcome! Free India