நெல்லையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் மழை நீர் கால்வாய்கள் அமைக்க உடனடியாக 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிப்படைந்த பகுதிகளை அமைச்சர் கே.என். நேரு ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தி ஆலோசனைகளை வழங்கினார். நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் பகுதியில் தேங்கியிருந்த மழை நீர் வெளியேற்றும் பணிகளை அமைச்சர் கே.என். நேரு பார்வையிட்ட...
Category: TamilNadu
இருள் சூழ்ந்த இருளர் மக்களின் வாழ்வு-‘ஜெய் பீம்’ பாணியில் அடிப்படை வசதி இல்லாமல் அவதி
அமைச்சர் கே.என். நேருவின் சொந்த கிராமம் அருகே வாழும் இருளர் என மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. திருச்சி மாவட்டம், காணக்கியநல்லூர் அருகே உள்ள பெருவளப்பூர் ஊராட்சியில் மாரியாகுளம் என்ற பகுதியில் இருளர் மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.இவர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காக கரிமூட்டம் போடும் தொழிலை செய்து வருகின்றனர். கடந்த 20 வருடத்திற்கும் மேலாக பனை ஓலை குடிசையில் வசித்து வரும் இவர்கள் குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதியும்...
தனிப்பட்ட முறையில் எனக்கு பேரிழப்பு -ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு குறித்து திருநாவுக்கரசு உருக்கம்
இளங்கோவன் மறைவு காங்கிரஸ் கட்சிக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் என திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்.எல்.ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று காலை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் சென்னை ராமாபுரத்தில் உள்ள மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள ஈவிகேஎஸ்...
ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்- அதிர்ச்சியில் காங்கிரஸ் தொண்டர்கள்
சென்னையில் உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.எல்.ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை கடந்த மாதம் மோசமடைந்தது. மூச்சு திணறல் காரணமாக சென்னை அடுத்த ராமாபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில், கடந்த மாத இறுதியில் அவர் அனுமதிக்கப்பட்டார்.இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் சென்று, அவரது உடல்நலன் குறித்து விசாரித்தனர். தொடர் சிகிச்சைக்குப் பிறகு...
உருவானது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி – தமிழகத்திற்கு பாதிப்பா?- வானிலை மையம் சொன்ன அதிர்ச்சி ரிப்போர்ட்
மன்னார் வளைகுடா பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் புயல் சின்னங்களால் கனமழை பெய்தது. இதன் காரணமாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடுமையாக பாதிக்கப்பட்டது. குறிப்பாக விழுப்புரம் மாவட்டம் வரலாறு காணாத வகையில் வெள்ள நீர் சூழ்ந்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக தமிழகத்தில் டிச.16, 17 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஃபெஞ்சல் புயல் சென்னை, விழுப்புரம்...
மழையால் தென் மாவட்டங்கள் பாதிப்பு- அரசுக்கு அறிவுறுத்திய பிரேமலதா
தமிழகம் முழுவதும் கனமழையிலிருந்து மக்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என பிரேமலதா வலியுறுத்தியுள்ளார். இது குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகம் முழுவதும் கனமழையிலிருந்து மக்களின் பாதுகாப்பை இந்த அரசு உறுதி செய்ய வேண்டி அறிக்கை திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, தேனி மற்றும் தென் மாவட்டங்களில் அனைத்து மவட்டங்களிலும் கமழை நேற்றிலிருத்து பெய்து கொண்டிருக்கிறது. கனமழையின் காரணமாக அனைத்து வீடுகளிலும் தண்ணீர் புகுந்து மக்களுடைய வாழ்வாதாரமே கேள்விக்குறியாகா...
திருவண்ணாமலை தீபத்திருவிழா.. 2,668 அடி உயர மலை உச்சியில் அரோகரா முழக்கத்துடன் மகா தீபம் ..!
நினைத்தாலே முக்தி தரும் தலமாகவும், பஞ்சபூத அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு விண்ணை பிளக்கும் அளவிற்கு அரோகரா முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலின் திருக்கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 4 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்றது. இந்நிலையில் திருக்கார்த்திகை தீபவிழா 10 ஆம் நாளான இன்று காலை அண்ணாமலையார் சன்னதியில் ஏகன் அனேகனாக மாறும் தத்துவத்தினை விளக்கும் விதமாக கோவிலில்...
எழுத்தாளரும் இயக்குனருமான 'குடிசை' ஜெயபாரதி காலமானார்..!
எழுத்தாளர், இயக்குனர், தேசிய விருது பெற்ற ஜெயபாரதி (குடிசை)வயது 77 நுரையீரல் தொற்று காரணமாக ஓமந்தூர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனிற்றி இன்று காலை 6 மணிக்கு காலமாகி விட்டார். திரைப்பட இயக்குநரும், பிரபல எழுத்தாளருமாக விளங்கியவர் ஜெயபாரதி (வயது 77). இவர் கடந்த 1979ஆம் ஆண்டு திரள் நிதி (கிரவுட் பண்டிங்) முறையில் ‘குடிசை’ என்ற திரைப்படத்தை தயாரித்து சினிமா உலகில் பிரபலமானவர். திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு பத்திரிகையாளராகப் பணியாற்றியவர் ஆவார். ...
கழிவுநீர் கலந்த குடிநீர் குடித்த 3 பேர் உயிரிழப்பு – அமைச்சருக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி
குடிநீரில் கழிவு நீர் கலக்கவில்லை என்றால், அமைச்சரும், திமுகவினரும் அந்தப் பகுதியில் வழங்கப்படும் குடிநீரைக் குடிக்க முன்வருவார்களா? என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை பல்லாவரத்தில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த 23 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து சம்பவ இடத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், மற்றும் எம்.எல்.ஏ கருணாநிதி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பொதுமக்களை சந்தித்து நலம் விசாரித்தார்....
நாதக ஒரு பிரிவினைவாத இயக்கம்?-திருச்சி எஸ்.பி வருண் குமார்
நாம் தமிழர் கட்சி கண்காணிக்கப்பட வேண்டிய ஒரு பிரிவினைவாத இயக்கம் என ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாநாட்டில் திருச்சி எஸ்.பி வருண் குமார் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐந்தாவது தேசிய ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு சண்டிகர் மாநிலத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பணியாற்றி வரும் இளம் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு அழைப்பு விடப்பட்டு கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அழைப்பின்பேரில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் கலந்து...










