விஜய் அரசியலுக்கு வந்தால், எங்களுக்கு பாதிப்பில்லை – திமுக எம்.பி., பதில்

Home TamilNadu விஜய் அரசியலுக்கு வந்தால், எங்களுக்கு பாதிப்பில்லை – திமுக எம்.பி., பதில்
விஜய் அரசியலுக்கு வந்தால், எங்களுக்கு பாதிப்பில்லை – திமுக எம்.பி., பதில்
Spread the love

வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க சென்றபோது பொதுமக்கள் குறைவாக இருந்ததால், கோபத்தில்  நிர்வாகி போட்ட துண்டை தூக்கி எறிந்த தங்க தமிழ்ச்செல்வனின் செயலால் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி., சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட அலங்காநல்லூர் பாலமேடு பகுதிகளில் தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.அலங்காநல்லூர் அருகே முடுவார்பட்டி பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த தங்க தமிழ்ச்செல்வன் பேசும்போது, விலைவாசி உயர்வு , மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு என  தமிழகத்தில் இல்லை தமிழகத்திற்கு வேண்டிய திட்டங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார்

நாடாளுமன்ற தேர்தலில் தமிழக முதல்வரின் மக்கள் நலத்திட்டங்களுக்காக தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணிக்கு அமோக வெற்றியை தேடித் தந்துள்ளனர்.சொத்து வரி உயர்வு குறித்து தவறான தகவல்களை பொதுமக்களிடம் சொல்லி அதிமுகவினர் போராட்டம் நடத்துகின்றனர்.  இது தவறு, விலை உயர்வு தமிழ்நாட்டில் இல்லை என்பது நிலைமை. அடிச்சு சொல்றேன்.60% மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. என் மீது அதிமுக வழக்கு போட்டால் சந்திக்க தயார். 100%அடித்து சொல்வேன்.சில திருத்தங்கள் செய்து தமிழ்நாடு அரசு மக்களுக்கு வேண்டிய திட்டங்களை கொடுக்குது. இதை ஒத்துக்கொள்ள முடியாமல் அதிமுக தவறான பொய் பிரச்சாரத்தை செய்யுது.

ஹரியானாவில் பாரதிய ஜனதா வெற்றி பெற்றது குறித்த கேள்விக்கு, ஹரியானா, ஜம்மு-காஷ்மீர் ஆகிய இரண்டு தேர்தலிலும் காங்கிரஸ் தான் ஜெயிச்சது. இன்னைக்கு  ஹரியானாவில் பிஜேபியும், ஜம்மு-காஷ்மீரில் காங்கிரஸும் ஜெயிச்சிருக்கு இருந்தாலும் 13% கூடுதலாக வாக்குகள் காங்கிரஸ் வாங்கி உள்ளார்கள். பாராட்டக்கூடிய விஷயம்.அடுத்து சட்டமன்றம், நாடாளுமன்றம் என எந்த தேர்தல் என்றாலும், காங்கிரஸ் தான் ஜெயிக்கும். சோழவந்தான் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும் என்ற கேள்விக்கு, சோழவந்தானில் அனைத்து ரயிலும் நின்று செல்ல வேண்டும் என எனது பாராளுமன்ற கன்னிப் பேச்சில் பேசியிருக்கேன் அதற்குண்டான நடவடிக்கையை எடுப்பேன்.

 விஜய் கட்சி ஆரம்பித்தது திமுகவுக்கு பாதிப்பு என செல்லூர் ராஜு கூறியுள்ளார் என்ற கேள்விக்கு, யார் கட்சி ஆரம்பித்தாலும் திமுகவிற்கு எந்த பாதிப்பும் வராது. எங்க லைன் வேற அவங்க லைன் வேற, வலுவான கூட்டணி அமைத்து மக்களுக்கான திட்டங்கள் கொடுத்து இந்தியாவிலேயே தமிழகம் சிறந்த மாநிலம் என பெயர் வாங்கியது. அதற்கு காரணம் தளபதி செய்த சாதனை மக்களை தேடி மருத்துவம் இல்லம் தேடி கல்வி என ஏராளமான திட்டங்களை தமிழகத்திற்கு கொடுத்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

விமான சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்தது குறித்த கேள்விக்கு, தடுக்கி விழுந்து செத்தாலும் கூட திமுக தான் காரணம் என்று சொல்வார்கள் போல, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுத்திருக்கு தமிழக அரசு. அதுல சில இடர்பாடுகள் நடந்து இருக்கு. இனிமே அப்படி நடக்காது என தமிழக அரசு சொல்லி இருக்கு என்று தெரிவித்தார்.மேலும் தேனி எம்.பியாக வெற்றி பெற்று திமுகவைச் சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வன்  பொதுமக்களுக்கு நன்றி கூறி சென்றுள்ளார். முடுவார்பட்டி கிராமத்தில் பொதுமக்கள் கூட்டம் குறைவாக இருந்ததால் நிர்வாகி போட்ட சால்வை கோபத்தில் பிடுங்கி எறிந்தார்.

பல்வேறு கிராமங்களில் பொதுமக்கள் இல்லாமல் சுமார் 20 மேற்பட்ட நிர்வாகிகள் மட்டுமே இருந்ததால் தேனி எம்.பி., தங்கம் தமிழ்ச்செல்வன்  எனக்கு வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றி எனக் கூறிவிட்டு விரக்தியில் வேகமாக சென்று விட்டார்.இதேபோன்று தேனி பாராளுமன்ற வேட்பாளராக வந்த போது தங்கம் தமிழ்ச்செல்வன் பொதுமக்கள் மத்தியில் வெகு நேரம் உரையாடி மக்களுக்கு செய்ய வேண்டிய திட்டங்களை கூறி வாக்கு சேகரித்து சென்றார். ஆனால் வெற்றி பெற்று நன்றி சொல்ல வந்தபோது பொதுமக்கள் இல்லாததால் விரக்தியில் பேச மனம் இல்லாமல் சில நிமிடங்களே எனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி எனக்கூறி சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

× Free India Logo
Welcome! Free India
FREE INDIA · Reader account

Login is optional. You can close this window and keep reading.