தொகுதி மறுவரையறை எதிர்ப்பு: விஜய்யின் தனித்தீர்மானத்தில் இருக்குற  3 விஷயத்த கவனிச்சீங்களா?

Home TamilNadu தொகுதி மறுவரையறை எதிர்ப்பு: விஜய்யின் தனித்தீர்மானத்தில் இருக்குற  3 விஷயத்த கவனிச்சீங்களா?
தொகுதி மறுவரையறை எதிர்ப்பு: விஜய்யின் தனித்தீர்மானத்தில் இருக்குற  3 விஷயத்த கவனிச்சீங்களா?
Spread the love

மாநிலங்களுக்கிடையேயான நாடாளுமன்ற பிரதிநிதித்துவ விகிதத்தையும் தற்போதுள்ள நிலையிலேயே பாதுகாக்க வேண்டும் என தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மக்களவை மற்றும் மாநிலங்களவைக்கு இடையேயான தற்போதைய 2.2:1 என்ற விகிதத்தையும் மாற்றமின்றி தொடர வேண்டும் என முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவை ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய கோரிக்கைகள்:

1.    மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 என்ற நிலையிலேயே நிரந்தரமாக தொடர வேண்டும்.
2.    மாநிலங்களுக்கு இடையேயான விகிதாச்சார பிரதிநிதித்துவம் தற்போதுள்ள அளவில் பாதுகாக்கப்பட வேண்டும்.
3.    பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டின் பலன், வரவிருக்கும் மக்களவைத் தேர்தல் மற்றும் அதன்பிறகு நடைபெறும் சட்டப்பேரவை பொதுத்தேர்தல்களிலேயே பெண்களுக்கு கிடைப்பதை ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டும்.

தொகுதி மறுவரையறை நடவடிக்கையால் மக்கள் தொகை கட்டுப்பாட்டை சிறப்பாக செயல்படுத்திய தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படக் கூடாது என்பதே தீர்மானத்தின் பிரதான நோக்கமாக உள்ளது.

முதலமைச்சர் விஜய் தீர்மானத்தை முன்வைத்ததைத் தொடர்ந்து, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வரவேற்ற நிலையில் அதிமுக, பாமக, பாஜக ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால், தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பான விவாதம் சட்டப்பேரவையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

× Free India Logo
Welcome! Free India