SBI வாடிக்கையாளர்களுக்கு புது ரூல்ஸ்? முக்கிய அறிவிப்பை வெளியிட்ட வங்கி!

Home TamilNadu SBI வாடிக்கையாளர்களுக்கு புது ரூல்ஸ்? முக்கிய அறிவிப்பை வெளியிட்ட வங்கி!
SBI வாடிக்கையாளர்களுக்கு புது ரூல்ஸ்? முக்கிய அறிவிப்பை வெளியிட்ட வங்கி!
Spread the love

பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) வாடிக்கையாளர்களுக்கு புதிய கட்டண விதியை அறிவித்துள்ளது. அதன்படி, எஸ்பிஐ கிளைகள் மூலம் தொடங்கப்பட்ட அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு (BSBD) கணக்குகளில், மாதத்திற்கு நான்கு முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்கப்படும்.

இந்த புதிய விதி வரும் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது. அதன்படி, ஒரு மாதத்தில் நான்கு முறை வரை பணம் எடுப்பது தொடர்ந்து இலவசமாக இருக்கும். அதற்கு மேல் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பணம் எடுக்கும் பரிவர்த்தனைக்கும் ரூ.15 கட்டணம் வசூலிக்கப்படும். இதனுடன் கூடுதலாக ஜிஎஸ்டியும் செலுத்த வேண்டியிருக்கும். அதே நேரத்தில், வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் அனைத்து டிஜிட்டல் பரிவர்த்தனைகளும் எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி தொடர்ந்து இலவசமாக இருக்கும் என எஸ்பிஐ தெரிவித்துள்ளது.

BSBDகணக்கு  குறைந்தபட்ச இருப்புத்தொகையை பராமரிக்க  வேண்டிய அவசியம் இல்லாத சேமிப்புக் கணக்கு என்பதால் இந்தக் கணக்குகளுக்கு காசோலைப் புத்தகம் வழங்கப்படாது.

இதுவரையிலேயே மாதத்திற்கு 5 முறை வரை பணம் எடுப்பது இலவசமாக இருந்த நிலையில் தற்போது அந்த வரம்பை நான்கு பரிவர்த்தனைகளாக எஸ்பிஜ மாற்றியமைத்துள்ளது.


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

× Free India Logo
Welcome! Free India