Category: TamilNadu

Home TamilNadu
கோயில் நில மோசடி… காரைக்கால் துணை ஆட்சியர் ஜான்சனுக்கு காப்பு!
Post

கோயில் நில மோசடி… காரைக்கால் துணை ஆட்சியர் ஜான்சனுக்கு காப்பு!

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் கோவில்பத்து வருவாய் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீபார்வதீஸ்வர சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.  கோயில் தேவஸ்தானத்திற்கு சொந்தமான நிலத்தை  பொலிவுறு நகர திட்டத்திற்காக சுற்றுலாத் துறைக்கும், இந்திய எரிவாயு ஆணையத்திற்கும் வழங்குவது ஒரு போலியான அரசாணை சமூக வலை தளங்களில் பரவியது.  அந்த போலி அரசாணையில் தனது கையெழுத்தை மோசடியாகப் பயன்படுத்தி இருப்பதாகக் கூறி காரைக்கால் மாவட்ட துணை ஆட்சியர் ஜான்சன், நகர காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்தச்சூழலில், நில மோசடியில் அரசு...

ரீல்ஸ் பார்த்தபடி ட்ரைவிங்… அசால்ட்டாக டியூட்டி பார்த்த ஓட்டுநர்… ரியல் ஆக்ஷனில் இறங்கிய அரசு
Post

ரீல்ஸ் பார்த்தபடி ட்ரைவிங்… அசால்ட்டாக டியூட்டி பார்த்த ஓட்டுநர்… ரியல் ஆக்ஷனில் இறங்கிய அரசு

ரீல்ஸ் பார்த்துக்கொண்டே அரசு பேருந்தை ஓட்டிய பேருந்து ஓட்டுநர் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது. ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை உள்பட தொடர் விடுமுறை தினத்தை முன்னிட்டு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டன. போதுமான ஓட்டுநர்கள் இல்லாத நிலையில் தற்காலிக ஓட்டுநர்களைப் பயன்படுத்தி இந்த பேருந்துகள் இயக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இப்படி கூடுதலாக விடப்பட்ட அரசு விரைவுப் பேருந்து ஒன்று திருப்பதியில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்னை மாதவரத்தை நோக்கி...

கிடுகிடுவென உயரும் தங்கம் விலை.. எட்டிபிடிக்க முடியாமல் தவிக்கும் நடுத்தர மக்கள்!
Post

கிடுகிடுவென உயரும் தங்கம் விலை.. எட்டிபிடிக்க முடியாமல் தவிக்கும் நடுத்தர மக்கள்!

தங்கத்தின் விலை தினசரியும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஒருசவரன் தங்கத்தின் விலையானது இன்று (அக்டோபர் 11) ரூ. 56,760 ஆக உயர்ந்துள்ளது. விரைவில் ஒரு சவரன் தங்கம் 60,000 ரூபாயை எட்ட உள்ளதால் நகை வாங்குவோர் கலக்கமடைந்துள்ளனர். தங்கத்தின் விலை உயர்வுக்கு காரணம் என்ன என்று பொருளாதார நிபுணர்கள் சொல்வதை பார்க்கலாம்.  இந்த ஆண்டு மார்ச் மாதம் தங்கம் விலை உச்சத்தை தொட்டது. இதனால் நடுத்தர மக்களால் ஒரு குண்டுமணி தங்கம் கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டது....

ஷூ காலால் மிதித்து இளைஞர் கொலை… உடற்கூறாய்வு முடிவில் பகீர்.. சி.ஐ.எஸ்.எப் வீரர்கள் 2 பேர் கைது
Post

ஷூ காலால் மிதித்து இளைஞர் கொலை… உடற்கூறாய்வு முடிவில் பகீர்.. சி.ஐ.எஸ்.எப் வீரர்கள் 2 பேர் கைது

கஷ்டப்பட்டு சடலத்தை தூக்கிச் செல்லும் சி.ஐ.எஸ்.எப் வீரர்களான இவர்கள் தான், அந்த நபரையே கொலை செய்ததாக 4 மாதங்களுக்குப் பின்னர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி சுரங்கம் ஒன்று, மண்மேட்டில் கடந்த நான்கு மாதம் முன்பு இளைஞர் ஒருவரின் சடலம் கிடப்பதாகக் கூறி அங்கு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் இருவர் அதனை அப்புறப்படுத்தி, சாலையில் எடுத்துவந்து போட்டனர். நெய்வேலி தெர்மல் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் சடலமாகக் கிடந்தவர் சிதம்பரம்...

தொடர் விடுமுறை – சொந்த ஊர்களுக்குப் படையெடுத்த மக்கள்
Post

தொடர் விடுமுறை – சொந்த ஊர்களுக்குப் படையெடுத்த மக்கள்

தொடர் விடுமுறையை ஒட்டி சென்னையில் இருந்து பொதுமக்கள் சொந்த ஊர்களுக்குப்  படையெடுத்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி பண்டிகை மற்றும் வார விடுமுறை என 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குப் படையெடுத்துள்ளனர். சென்னை போரூர் சுங்கச்சாவடி அருகே மதுரவாயல் – தாம்பரம் சாலையில் போக்குவரத்து நெரிசல் காரணமாக ஏராளமான வாகனங்கள் ஊர்ந்தபடியே சென்றன. அத்துடன் பண்டிகைக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கும்...

"தொழில் நிறுவனங்களுக்கும், தொழிலாளா்களுக்கும் வாழ்த்துகள்" ஆயுத பூஜைக்கு தலைவர்களின் வாழ்த்து
Post

"தொழில் நிறுவனங்களுக்கும், தொழிலாளா்களுக்கும் வாழ்த்துகள்" ஆயுத பூஜைக்கு தலைவர்களின் வாழ்த்து

ஆயுத பூஜை மற்றும் விஜய தசமியையொட்டி அரசியல் கட்சிகளின் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், நவராத்திரி விழாவின் இறுதியில், ஒன்பதாவது நாளான ஆயுத பூஜை மற்றும் பத்தாவது நாளான விஜயதசமி திருநாளை பக்தியுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் உளங்கனிந்த நல்வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார். மக்கள் அனைவரும் கல்வியிலும், செல்வத்திலும், துணிவிலும் சிறந்து விளங்கவும், அன்னை பராசக்தியைப் போற்றி வணங்குகிறேன் என கூறியுள்ளார்.  முன்னாள்...

முரசொலி செல்வம் மறைவு: கண்ணீர் விட்டு அழுத முதல்வர்- நேரில் அஞ்சலி செலுத்திய பிரபலங்கள் 
Post

முரசொலி செல்வம் மறைவு: கண்ணீர் விட்டு அழுத முதல்வர்- நேரில் அஞ்சலி செலுத்திய பிரபலங்கள் 

மறைந்த முரசொலி செல்வத்தின் உடலை பார்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்ணீர் விட்டு கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.  முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் மருமகன் முரசொலி செல்வம்(84)இன்று காலமானார். பெங்களூரு மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் சென்னை கோபாலபுரத்திற்கு முரசொலி செல்வத்தின் உடல் கொண்டுவரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், கோபாலபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள முரசொலி செல்வத்தின் உடலைப் பார்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்ணீர் விட்டு கதறி அழுதார். இதைத்தொடர்ந்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும்...

பட்டாசு ஆலை வெடி விபத்தில் இந்த ஆண்டில் 52 பேர் உயிரிழப்பு
Post

பட்டாசு ஆலை வெடி விபத்தில் இந்த ஆண்டில் 52 பேர் உயிரிழப்பு

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டமன்ற அரங்கத்தில், மாவட்ட நிர்வாகம், சென்னைத் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் ஆகியவை இணைந்து பட்டாசுத் தொழிற்சாலைகளுக்கான பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுக் கூட்டத்தினை நடத்தினர். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இக்கூட்டத்துக்கு தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் பட்டாசுத் தொழிற்சாலைகளில் பாதுகாப்பு அம்சம்கள்,தொழிற்சாலை சட்டங்கள், வெடிபொருள் சட்டம், படைக்கல சட்டம் மற்றும் பட்டாசு உற்பத்தி பாதுகாப்பில் நிர்வாகத்தின் பங்கு, தொழிலாளர்களின் பங்கு, சட்ட விரோத பட்டாசு தயாரிப்பை தடுக்கும் வழிகள் ஆகியன குறித்து...

திருமணம் செய்ய மறுத்த மாணவிக்கு நேர்ந்த சோகம்- இளைஞரின் விபரீத முடிவு
Post

திருமணம் செய்ய மறுத்த மாணவிக்கு நேர்ந்த சோகம்- இளைஞரின் விபரீத முடிவு

மதகுபட்டி அருகே திருமணம் செய்ய மறுத்த  கல்லூரி மாணவியைக் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட இளைஞரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை அருகே மதகுபட்டி மேலத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் மோனிஷா(24). இவர் சிவகங்கையில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் இவரை சிங்கம்புணரி அருகே பிரான்மலையைச் சேர்ந்த ஆகாஷ்(26) என்பவர் ஒருதலையாய் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. தனது காதலியை மோனிஷாவை திருமணம் செய்ய அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை...

உதயநிதி குறித்து பேச்சு: பவன் கல்யாண் மீது அடுத்தடுத்து புகார்
Post

உதயநிதி குறித்து பேச்சு: பவன் கல்யாண் மீது அடுத்தடுத்து புகார்

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை இழிவுப்படுத்திய ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சனாதனத்தை அழிக்க முயன்றால் அழிந்து போவீர்கள் என்று ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் திருப்பதியில் பேசியிருந்தார். மறைமுகமாக தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை விமர்சித்து இருந்தது அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் இரு தரப்பு ஆதரவாளர்களும் கருத்து மோதல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். ...

× Free India Logo
Welcome! Free India
FREE INDIA · Reader account

Login is optional. You can close this window and keep reading.