Category: TamilNadu

Home TamilNadu
Post

‘அறிவாலயத்தைக் காப்பாற்றிக் கொடுத்ததே ஜெ., தான்..’ கனிமொழிக்கு இபிஎஸ் சரமாரி பதிலடி

‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப்பயணம் மேற்கொள்ளும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இன்று குன்னூர், உதகமண்டலம் சட்டமன்றத் தொகுதிகளில் மக்களை சந்திக்கிறார். குன்னூர் பயணத்தின்போது ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் இபிஎஸ்க்கு பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது. இதையடுத்து குன்னூர் பேருந்து நிலையம் அருகே மவுன்ட் ரோட்டில் கூடியிருந்த பெருந்திரளான மக்களிடம் இபிஎஸ் எழுச்சியுரை நிகழ்த்தினார்.

Post

காரைக்குடியில் இந்தியாவின் முதல் செட்டிநாடு நகை அருங்காட்சியகம் “பெட்டகம்” தொடக்கம்

இந்த அருங்காட்சியகத்தில் பாரம்பரிய நகைகள் மட்டுமின்றி, வணிக சமூகமான நகரத்தார்கள் வரலாறு குறித்த விவரங்களும் இடம்பெற்று உள்ளன. வியாபார வாய்ப்புகளைத் தேடி கடல்களைக் கடந்த துணிச்சலான வர்த்தகர்கள் என்று வரலாறு கூறுகிறது. அவர்கள் ஐரோப்பிய சுவைகளை சமையலிலும், ஆர்ட் டெகோ (Art Deco) நுணுக்கத்தை நகைகளிலும் இணைத்து, உலகளாவிய தாக்கங்களை தங்கள் செழுமையான பாரம்பரியத்துடன் கலந்தனர். இந்த அருங்காட்சியகம், நகரத்தார்களின் உலகளாவிய பயணத்தை கொண்டாடும் ஒரு இடமாக விரிகிறது.

Post

‘பச்சைப் பொய் சொல்லும் ஸ்டாலினுக்குத் தக்க தண்டனை வழங்குங்கள்’ இபிஎஸ் ஆவேசம்!

திமுக ஆட்சியின் 52 மாதத்தில் சேந்தமங்கலம் தொகுதிக்கு ஏதாவது நன்மை கிடைத்ததா? அதிமுக ஆட்சியில் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்களை, ஒரே அதிமுக ஆட்சியில் இரண்டுமுறை தள்ளுபடி செய்தோம். விவசாயிகள் எந்நேரமும் மோட்டாரை பயன்படுத்த ஏதுவாக மும்முனை மின்சாரம் 24 மணிநேரம் கொடுத்தோம். விவசாயிகளுக்காக அதிமுக ஆட்சியில் குடிமராமத்துத் திட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்மூலம் ஏரி, குளங்கள், கண்மாய்கள் தூர்வாரப்பட்டு நீர் தேக்கப்பட்டன, அதிலிருந்து கிடைத்த வண்டல் மண் விவசாயத்துக்குப் பயன்பட்டது. ஒரு பக்கம்...

Post

‘ஆட்சியில் பங்கு.. அதிகப்படியான சீட்..’ திமுக கூட்டணியில் கொடி தூக்கும் காங்.,!

திமுக கூட்டணியின் பிரதான கட்சியான காங்கிரஸ், தன்னுடைய தொகுதி பங்கீடு குறித்து பகிரங்கமாக கருத்து தெரிவித்திருக்கிறது. ஆட்சியில் பங்கு என்பதை நோக்கி, தங்களின் எதிர்பார்ப்பு இருக்கும் என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி. சிதம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்த, தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசுகையில், “50 ஆண்டுகளுக்கு மேலாக காங்கிரஸ் ஏதாவது ஒரு இயக்கத்தோடு கூட்டு சேர்ந்து பயணிக்கிறது. சாறை அவர்கள் குடிப்பதும், சக்கையை நாங்கள் பார்ப்பதுமான சூழல் நிலவுகிறது. வரும்...

Post

‘கைக்கூலிகளை வைத்து ஆட்டம் போடுகிறார்கள்.. விரைவில் பாடம் புகட்டுவோம்’ டிடிவி, ஓபிஎஸ், செங்கோட்டையனை விளாசிய இபிஎஸ்!

’’நமக்கு கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை சொல்லிக்கொடுத்தவர் பேரறிஞர் அண்ணா, மாணவர்கள் இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு முன்களப் போராளியாக நின்றவர் பேரறிஞர் அண்ணா. தமிழ்நாட்டுக்கு இரு மொழி ஆட்சியைக் கொண்டு வந்தார். ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்றார். ஏழை, எளிய மக்களுக்கு நல்ல பல திட்டங்கள் கொடுத்தார்.

Post

‘தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம்’ ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இணைந்தவர்கள் உறுதிமொழி!

ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் மூலம் ஒரு கோடிக்கும் அதிகமான குடும்பத்தினர் திமுகவில் இணைந்துள்ளனர். பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான இன்று, மாநிலம் முழுவதுமுள்ள 68 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குச்சாவடிகளில் அந்தந்த வாக்குச்சாவடிக்குட்பட்ட பகுதியில் அவர்களை ஒன்றுதிரட்டி, உறுதிமொழியேற்றிட வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியிருந்தார்.

விஜய்யின் பேச்சில் முதிர்ச்சியில்லை.. கூட்டணியை நம்பி திமுக உள்ளதா? ஜவாஹிருல்லா கருத்து
Post

விஜய்யின் பேச்சில் முதிர்ச்சியில்லை.. கூட்டணியை நம்பி திமுக உள்ளதா? ஜவாஹிருல்லா கருத்து

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்த கருத்துகள் பின்வருமாறு- ”நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், பிரதமருக்கும், முதலமைச்சருக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் எதிராகக் குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அந்த வழக்கின் தீர்ப்பு வருவதற்கு முன்பு, விசாரணை நிலுவையில் இருக்கும் சூழலில், 30 நாட்கள் சிறையில் இருந்தால் அவர்கள் பதவி இழப்பார்கள் என்ற சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் கடுமையாக இதை எதிர்த்தபோதிலும், அவர்களின் எதிர்ப்புகளையும் மீறி இந்த மசோதா...

பாமகவின் 10 வருட போராட்டம்.. ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு அன்புமணி வரவேற்பு!
Post

பாமகவின் 10 வருட போராட்டம்.. ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு அன்புமணி வரவேற்பு!

பணம் கட்டி விளையாடப்படும் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்கான சட்ட மசோதா நாடாளுமன்ற மக்களவையில் இன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதனை பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் வரவேற்றுள்ளனர்.  ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் நிறைவேற்றப்பட்டதை வரவேற்று பாமகவின் அன்புமணி தனது எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவின் விவரங்கள் பின்வருமாறு- ”சூதாட்டங்கள் மற்றும் பண இழப்பிலிருந்து மக்களைக் காக்கும் நோக்குடன் ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் நிறைவேற்றப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய...

பருத்தி மீதான இறக்குமதி வரி நீக்கம் எதிரொலி.. மானியம் கோரும் தமிழக விவசாயிகள்!
Post

பருத்தி மீதான இறக்குமதி வரி நீக்கம் எதிரொலி.. மானியம் கோரும் தமிழக விவசாயிகள்!

ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை குறிப்பிட்டு, இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரியினை அமெரிக்கா விதித்துள்ளது. இதில் 25 சதவீத வரி ஏற்கெனவே அமலுக்கு வந்துவிட்ட நிலையில், மீதமுள்ள 25 சதவீத இம்மாத இறுதியில் அமலுக்கு வர உள்ளது. இதனால் ஜவுளித்துறையினர் பெரிதும் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனையடுத்து, பருத்தி மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு ஆகஸ்ட் 19 முதல் செப்டம்பர் 30 வரை ரத்து செய்வதாக அறிவித்தது. இந்த முடிவினால், பாதிக்கப்படும் பருத்தி...

முதலில் கிட்னி திருட்டு.. இப்போ கல்லீரல்: திமுக அரசின் சாதனை இதுதானா? அன்புமணி கேள்வி
Post

முதலில் கிட்னி திருட்டு.. இப்போ கல்லீரல்: திமுக அரசின் சாதனை இதுதானா? அன்புமணி கேள்வி

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் மற்றும் குமாரபாளையம் பகுதியில் ஏழ்மை நிலையிலுள்ள பொதுமக்கள் மற்றும் விசைத்தறி தொழிலாளர்களை குறிவைத்து கிட்னி திருட்டு நடைப்பெற்றுள்ள சம்பவம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், அதே பகுதியில் கல்லீரல் திருட்டு தொடர்பான புகார்களும் வெளிவந்துள்ளன. இதனைத் தொடர்ந்து, உரிய விசாரணை மேற்கொண்டு அறிக்கை அளிக்குமாறு நாமக்கல் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநருக்கு தமிழக மருத்துவ நல்வாழ்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தை உலுக்கியுள்ள உடல் உறுப்புகள் திருட்டு சம்பவம் தொடர்பாக பாமகவின் அன்புமணி அறிக்கை ஒன்றினை...

× Free India Logo
Welcome! Free India
FREE INDIA · Reader account

Login is optional. You can close this window and keep reading.