Category: TamilNadu

Home TamilNadu
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு சிபிஐக்கு மாற்றம் – உயர்நீதிமன்றம் உத்தரவு
Post

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு சிபிஐக்கு மாற்றம் – உயர்நீதிமன்றம் உத்தரவு

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூன் மாதம் 18ஆம் தேதி அன்று மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டு 193 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 60-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.  இதைத்தொடர்ந்து அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் நேரில் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கினர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கள்ளச்சாராய...

விசாரணைக்கு சென்ற பேராசிரியர் பற்களை உடைத்த காவல் ஆய்வாளர்- நடவடிக்கை எடுக்க கோரிக்கை
Post

விசாரணைக்கு சென்ற பேராசிரியர் பற்களை உடைத்த காவல் ஆய்வாளர்- நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கந்தர்வகோட்டை காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட பேராசிரியர் பற்கள் உடைத்த கந்தர்வக்கோட்டை காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை தாலுகா, மோகனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி மகன் ஆறுமுகம். இவர் தஞ்சாவூரில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.இந்த நிலையில் ஆய்வாளர் சுகுமாரன் தலைமையிலான கந்தர்வகோட்டை காவல்துறையின் சமூக விரோத போக்கை கண்டித்தும், சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த 2 பேரின் இறப்பிற்கு நீதி...

AR Rahman Divorce: ஏ.ஆர்.ரஹ்மான்-சாய்ரா பானு பிரிவிற்கு இதுதான் காரணமா?- உருக்கமான பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்
Post

AR Rahman Divorce: ஏ.ஆர்.ரஹ்மான்-சாய்ரா பானு பிரிவிற்கு இதுதான் காரணமா?- உருக்கமான பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்

தனது மனைவி சாய்ரா பானு உடனான திருமண உறவை முறித்துக்கொள்வதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உருக்கமாக பதிவிட்டுள்ளார். ஆஸ்கர் விருது பெற்ற பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் 1995ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி சாய்ரா பானு என்பவரை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு கதீஜா, ரஹிமா என்ற 2 மகள்களும், அமீன் என்ற மகனும் உள்ளனர்.ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பல்வேறு திரைபடங்களுக்கு இசையமைத்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மானுக்கு என்று தனி இசை ரசிகர் பட்டாளமே...

சென்னையில் அதிவேகமான வந்த சொகுசு கார்- ரேபிடோ ஊழியருக்கு நேர்ந்த சோகம்
Post

சென்னையில் அதிவேகமான வந்த சொகுசு கார்- ரேபிடோ ஊழியருக்கு நேர்ந்த சோகம்

சென்னை மதுரவாயல் பைபாஸ் சாலையில் அதிவேகமாக வந்த பிஎம்டபிள்யூ கார் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற ரேபிடோ ஊழியர்  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரவாயல் பைபாஸ் சாலையில் ரேபிடோவில் பணிபுரிந்து வந்த சென்னை தி.நகரைச் சேர்ந்த பிரதீப் குமார் (39) என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்ற போது பின்னால் அதிவேகமாக வந்த பிஎம்டபிள்யூ கார் மோதி சுமார் 20 அடி தூரத்திற்கு இருசக்கர வாகனம் தூக்கி வீசப்பட்டது. பைபாஸ் சாலையில் இருந்து சர்வீஸ் சாலைக்கு தூக்கி...

விஜய் போட்ட உத்தரவு- மதுரையில் மக்களுக்கு தவெகவினர் நேரில் ஆதரவு 
Post

விஜய் போட்ட உத்தரவு- மதுரையில் மக்களுக்கு தவெகவினர் நேரில் ஆதரவு 

மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு சின்ன உடைப்பு கிராமத்தில் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடும் கிராம மக்களுக்கு தவெகவினர் நேரில் ஆதரவு தெரிவித்தனர். மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்காக சின்ன உடைப்பு கிராமத்தில் நிலம் கையகப்படுத்த அக்கிராம மக்கள் எதிர்ப்பு மீள்குடி அமர்வு, மாநகராட்சிக்குள்ளும் மூன்று சென்ற இடம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ந்து ஏழாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சின்ன உடைப்பு கிராமத்தில் பல்வேறு அரசியல் கட்சியினரும் இயக்கத்தினரும்...

சென்னையில் பட்டப்பகலில் இளம்பெண்ணை வெட்ட முயற்சி- சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சி
Post

சென்னையில் பட்டப்பகலில் இளம்பெண்ணை வெட்ட முயற்சி- சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சி

சென்னை அயனாவரத்தில் பட்டப்பகலில் இளம் பெண்ணை வெட்ட முயன்ற சிசிடிவி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  சென்னை அயனாவரம் கே.எச்.சாலையில் இளம்பெண் ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் வந்து ஹோட்டலில் சாப்பாடு வாங்கி வீட்டுக்கு செல்வது போல் தெரிகின்றன. அந்த நேரத்தில் ஒருவர் வழிமறித்து பட்டா கத்தியால் சரமாரியாக  வெட்டிய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.  உடனே இதை தடுக்க முயன்ற அந்த இளம் பெண்ணுக்கும் கையில் வெட்டு விழுந்தது.மேலும் உயிருக்கு பயந்து அந்த இளைஞர் தன்னுடன் வந்த இளம்பெண்ணை...

பேரிடர் மீட்புப் பணி –  அவசர கால வெள்ள மீட்பு குழு அமைப்பு
Post

பேரிடர் மீட்புப் பணி –  அவசர கால வெள்ள மீட்பு குழு அமைப்பு

பேரிடர் காலத்தில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள அவசரகால வெள்ள மீட்பு குழுவை அமைத்து நீர்வளத்துறை உத்தரவிட்டுள்ளது. மழை, புயல், வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் மீட்பு பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு துறையின் சார்பில் அவசர கால வெள்ள மீட்பு குழுக்கள் அமைக்கப்படும். இதன்படி, பேரிடர் காலத்தில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள அவசரகால வெள்ள மீட்பு குழுவை அமைத்து நீர்வளத்துறை உத்தரவிட்டுள்ளது.  நீர்வளத்துறையின் 147 பொறியாளர்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவில் ஒருங்கிணைப்பு அலுவலர்களாக மண்டல கண்காணிப்பு...

சென்னையில் ஜன.16ல் பன்னாட்டு புத்தகத் திருவிழா- அமைச்சர் அன்பில் மகேஷ்
Post

சென்னையில் ஜன.16ல் பன்னாட்டு புத்தகத் திருவிழா- அமைச்சர் அன்பில் மகேஷ்

நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி தொடங்கி 18 ஆம் தேதி வரை 3 நாட்கள் சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா நடைபெறும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் பொது நூலக இயக்ககம் சார்பில் நடைபெற்ற அரசு விழாவில், நூலகர்களுக்கு “டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் விருது”, சிறந்த நூலகங்கள் மற்றும் வாசகர் வட்டங்களுக்கு கேடயம் வழங்கி, சென்னை...

அமைச்சர் முன்னிலையில் தகாத வார்த்தையால் வசைப்பாடி வாக்குவாதம்- ராசிபுரம் திமுகவில் உட்கட்சி பூசல்?
Post

அமைச்சர் முன்னிலையில் தகாத வார்த்தையால் வசைப்பாடி வாக்குவாதம்- ராசிபுரம் திமுகவில் உட்கட்சி பூசல்?

ராசிபுரம் அருகே நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் அமைச்சர் முன்னிலையில் கட்சி நிர்வாகிகள் தகாத வார்த்தைகளில் வசைப்பாடி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட கூனாவேலம்பட்டி,  குறுக்குபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தார் சாலை அமைப்பதற்காக பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.அரசு நிகழ்ச்சியில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் கலந்து கொண்டார்.அப்போது குறுக்குபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ரூ.26 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்வின்போது, குறுக்குபுரம் ஊராட்சி மன்ற...

இந்தி திணிப்புக்கான பரப்புரைக் கருவியாக LIC இணையதளம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
Post

இந்தி திணிப்புக்கான பரப்புரைக் கருவியாக LIC இணையதளம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

இந்தி திணிப்புக்கான பரப்புரைக் கருவியாக LIC இணையதளம் மாற்றப்பட்டுள்ளதாக  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எல்ஐசி நிறுவனத்தின் இணையதள முகப்பு பக்கம் இன்று காலை முழுமையாக இந்தி மொழிக்கு மாற்றப்பட்டது. மேலும் மொழி என்பதை குறிக்கும் பாஷா என்ற ஆப்ஷனை கிளிக் செய்து அதில் ஆங்கிலத்தை தேர்வு செய்தால் மட்டுமே ஆங்கில பக்கத்திற்கு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தி மொழிக்கு மாற்றப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது மீண்டும் ஆங்கிலத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.எல்ஐசி நிறுவனத்தின்...

× Free India Logo
Welcome! Free India