இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: வங்கக்கடலில் மணிக்கு 8 கிலோ மீட்டர் வேகத்தில் தமிழக கடலோர பகுதிகளை டிட்வா புயல் நெருங்கி வருகிறது. சென்னையில் இருந்து தெற்கே 380 கிலோ மீட்டர் தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய 5 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. அதேபோல், திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம்,...
Category: TamilNadu
சென்னைக்கு தெற்கே 430 கி.மீ. தொலைவில் டிட்வா புயல்: மீட்பு பணிக்கு ஹெலிகாப்டர் பயன்படுத்த திட்டம்- அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
சென்னைக்கு தெற்கே 430 கி.மீ. தொலைவில் டிட்வா புயல் மையம் கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கை அருகே உருவாகியுள்ள டிட்வா புயல் வடக்கு- வட மேற்கு திசையில் தமிழகம் நோக்கி நகர்ந்து வருகிறது. நாளை (30ம் தேதி) அதிகாலையில் தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட தமிழகம்-புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் கரை...
டிட்வா புயல் எதிரொலி : 54 விமானங்கள் ரத்து- 300 பயணிகள் இலங்கையில் சிக்கி தவிப்பு
டிட்வா புயலால் ஏற்பட்டுள்ள மோசமான வானிலை காரணமாக சனிக்கிழை சென்னை விமானநிலையத்தில் இருந்து இயக்கப்படும் மற்றும் வருகை தரும் 54 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளனர்.சென்னையில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் 12 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோன்று சென்னைை, பெங்களூரு, மும்பையில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் 11 சிறிய விமானங்களும், ஹைதராபாத்தில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் 1 விமானங்கள் மற்றும் சென்னைக்கு வரும் விமானங்கள் என 54 விமானங்களின் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னையிலிருந்து தூத்துக்குடி,...
18 நாள் பஞ்சாயத்து ஓவர் : வெளிமாநிலங்களுக்கு மீண்டும் துவங்கிய தனியார் ஆம்னி பஸ் சேவை
நவம்பர் 7ம் தேதி கேரளா சென்ற தமிழக ஆம்னி பஸ்களுக்கு, அம்மாநில போக்குவரத்து துறை அதிகாரிகள், சாலை வரி உட்பட பல்வேறு காரணங்களைக் கூறி, 70 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர், தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு இயக்கப்பட்ட, 230க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ் சேவைகளை நிறுத்தினர். இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என போக்குவரத்து துறை அமைச்சருக்கு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை...
டிட்வா புயல் : 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் : அவசரக் கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மீட்புகுழுக்கள் மாவட்டங்களுக்கு விரைவு
சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தின் தென்மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கடுமையான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் ஆட்சியர்களிடம் காணொலி மூலம் தொடர்பு கொண்டு பேசிவருகிறோம். நேற்று என்னுடைய தலைமையில் இது தொடர்பாக கூட்டத்தை கூட்டி எச்சரிக்கை விடுத்துள்ளோம். அனைத்து மாவட்டங்களுக்கும் கண்காணிப்பு அதிகாரிகளை அனுப்பி வைத்துள்ளோம்....
ஜெயலலிதா பெயர் சூட்டப்பட்ட பல்கலைக்கழகத்தை நாங்கள் புறக்கணிக்கவில்லை: முதல்வர் ஸ்டாலின்
சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த, தமிழ்நாடு ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலை பட்டமளிப்பு விழாவில், மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பட்டங்களை வழங்கி கவுரவித்தார். நடிகர் சிவகுமாருக்கு வாழ்நாள் சாதனைக்காக மதிப்புறு முனைவர் பட்டத்தை முதல்வர் ஸ்டாலின் வழங்கி வாழ்த்தினார். நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: பட்டமளிப்பு விழாவிற்கு முதல்வராக, பல்கலை வேந்தராக மட்டுமல்ல, கலைஞன் என்ற முறையில் வந்துள்ளேன். நடிகர் சிவகுமார், ஓவியர் சந்துருவுக்கு மதிப்புறு முனைவர் பட்டங்களை வழங்கியதில் பெருமை அடைகிறேன். சிவகுமாருக்கு...
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க டிச 9-ம் தேதி விண்ணப்பிக்கலாம் : தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கான கணக்கீட்டு படிவங்களை பெற்றுக்கொண்ட வாக்காளர்கள் தங்கள் படிவங்களை உடனடியாக பூர்த்தி செய்து, கடைசி நேர நெருக்கடியை தவிர்க்க வரும் 4-ந்தேதி வரை காத்திருக்காமல் வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் அல்லது உதவி மையத்தில் உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும். கணக்கீட்டு படிவங்களை பூர்த்தி செய்து ஒப்படைத்துள்ள அனைத்து வாக்காளர்களின் பெயர்களும் 9-ந்தேதி அன்று வெளியிடப்படவுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறும். 2002 மற்றும் 2005 வாக்காளர் பட்டியலில்...
ரயில் படிக்கட்டில் பயணம் செய்தால் கடும் தண்டனை : தெற்கு ரயில்வே எச்சரிக்கை
சென்னை புறநகர் மற்றும் MRTS ரயில்களில் நாள்தோறும் ஆயிரகணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். வேலை நேரம் தவிர்த்து பிற நேரங்களில் இந்த ரயில்கள் பயணிகள் கூட்டம் குறைவாக இருக்கும். கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் சிலர் ரயில்களில் தொங்கியபடி சாகங்களில் ஈடுபடும் வீடியோக்கள் அடிக்கடி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். இதுபோன்ற செயல்களில் ரயிலில் பயணம் மேற்கொள்ளும் மற்ற பயணிகள் கடும் இன்னலுக்கு ஆளாகின்றனர். சில உயிரிழப்பு சம்பவங்கள் அடிக்கடி ஏற்படுகின்றன. இந்த விவகாரத்தில் ரயில்வே...
உதயநிதி பிறந்தநாள் : குறிஞ்சி இல்லத்தில் பிரியாணி, ஆடல் பாடலுடன் உற்சாக கொண்டாட்டம்
தமிழ் நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். உதயநிதி தனது பிறந்தநாளையொட்டி இன்று காலை பெரியார், அண்ணா, கருணாநிதி சமாதிகளுக்கு நேரில் சென்று மரியாதை செலுத்தினார்.இதை தொடர்ந்து சிஐடி காலணியில் உள்ள கனிமொழி இல்லத்திற்கு சென்ற உதயநிதி, அவரிடம் ஆசி பெற்றதோடு, அங்கிருந்த கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதன் பின்னர் மதியம் நிர்வாகிகள் அடையாறு...
உருவானது டிட்வா புயல் : அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
டிட்வா புயல் சென்னைக்கு 700 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் 12 மாவட்டங்களுக்கு ஐஏஎஸ் அதிகாரிகளை கண்காணிப்பு அதிகாரியாக நியமித்துள்ளார். இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்மேற்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய இலங்கை கடற்கரையில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 15 கிலோ மீட்டர்...









