பண்டிகை நேரத்தில் இப்படியா? 67 பொருள்களின் விலை உயர்த்தி ஷாக் கொடுத்த ஆவின்!

Home TamilNadu பண்டிகை நேரத்தில் இப்படியா? 67 பொருள்களின் விலை உயர்த்தி ஷாக் கொடுத்த ஆவின்!
பண்டிகை நேரத்தில் இப்படியா? 67 பொருள்களின் விலை உயர்த்தி ஷாக் கொடுத்த ஆவின்!
Spread the love

தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 8-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், ஆவின் நிறுவனத்தின் பால் பொருட்களின் விலை நாளை (அக். 28) முதல் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு அரசின் பால்வளத் துறையின் கீழ் செயல்படும் ஆவின் நிறுவனம் மூலம் தரமான பால் மற்றும் பால் பொருட்கள் குறைந்த விலையில் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் தயாரிப்பு கொள்முதல் செலவுகள் அதிகரித்துள்ள காரணத்தால் விலை உயர்வு தவிர்க்க முடியாததாகிவிட்டதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆவின் நிர்வாக இயக்குநர் சிவராசு உத்தரவின்படி, ஆவின் விற்பனை செய்யும் 230-க்கும் மேற்பட்ட பால் உபபொருட்களில் 67 பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன.

பொதுமக்கள் தீபாவளிப் பண்டிகைக் காலத்தில் அதிகம் வாங்கும் நெய், வெண்ணெய், தயிர் மற்றும் இனிப்பு வகைகளின் விலைகள் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளன.

ஒரு லிட்டர் நெய் ரூ.80 உயர்ந்து ரூ.770 (அல்லது நெய் வகையைப் பொறுத்து ரூ.780) ஆகவும், 500 மி.லி நெய் ரூ.30 உயர்ந்து ரூ.390 (அல்லது ரூ.400) ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 100 கிராம் நெய் பாட்டில் ரூ.10 உயர்ந்து ரூ.95-க்கு விற்பனையாகும்.

100 கிராம் வெண்ணெய் ரூ.10 உயர்ந்து ரூ.70 ஆகவும், அரை கிலோ வெண்ணெய் ரூ.45 உயர்ந்து ரூ.320 ஆகவும் உயர்ந்துள்ளது.

250 கிராம் குலோப்ஜாமுன் ரூ.15 உயர்ந்து ரூ.115 ஆகவும், பால்கோவா ரூ.20 உயர்ந்து ரூ.150 ஆகவும், 250 கிராம் மைசூர்பா ரூ.160 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. ரசகுலா 200 கிராம் ரூ.95-க்கு விற்பனையாகும்.

அன்றாடம் பயன்படுத்தப்படும் 200 மி.லி லெஸ்ஸி ரூ.3 அதிகரித்து ரூ.23 ஆகவும், 10 வகையிலான மில்க் ஷேக்குகளின் விலை ரூ.30-லிருந்து ரூ.35 ஆகவும் உயர்ந்துள்ளது. ஒரு கிலோ தயிர் ரூ.130 ஆகவும், 500 மி.லி தயிர் ரூ.40 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 200 மி.லி மோர் ரூ.8-லிருந்து ரூ.10 ஆகவும், பெட் பாட்டிலில் விற்கும் மோர் ரூ.14 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு, பண்டிகைக் காலத்தில் ஆவின் பொருட்களின் இந்த திடீர் விலை உயர்வு கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்தியுள்ளது.


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

× Free India Logo
Welcome! Free India
FREE INDIA · Reader account

Login is optional. You can close this window and keep reading.