ஜெம் வீரமணி வழக்கில் TWIST… CBI விசாரணைக்கு NO… அதிரடி காட்டிய உயர்நீதிமன்றம்!

Home TamilNadu ஜெம் வீரமணி வழக்கில் TWIST… CBI விசாரணைக்கு NO… அதிரடி காட்டிய உயர்நீதிமன்றம்!
ஜெம் வீரமணி வழக்கில் TWIST… CBI விசாரணைக்கு NO… அதிரடி காட்டிய உயர்நீதிமன்றம்!
Spread the love

ஜெம் வீரமணி மீது பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்குகளின் விசாரணையை மத்திய புலனாய்வுத் துறையான சிபிஐக்கு மாற்ற வேண்டும் எனக் கோரி வாராகி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி லஷ்மி நாராயணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெம் வீரமணி மீதான வழக்குகளை விசாரிப்பதற்காக சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு சில நாட்களே ஆகியுள்ள நிலையில், விசாரணையை உடனடியாக சிபிஐக்கு மாற்ற வேண்டிய அவசியம் என்ன? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

மேலும், ஒரு வழக்கை சிபிஐக்கு மாற்றினால் மட்டுமே சிறப்பான விசாரணை நடைபெறும் என்று கருத முடியுமா? என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார். சிபிஐ விசாரணைக்கு மட்டும் வெளிநாட்டில் இருந்து அதிகாரிகள் வரப்போகிறார்களா? என்றும் நீதிபதி லஷ்மி நாராயணன் கேள்வி எழுப்பினார்.

சிறப்பு புலனாய்வு பிரிவு ஏற்கனவே விசாரணையை தொடங்கியுள்ள நிலையில், அந்த விசாரணை எந்த அளவுக்கு முன்னேறியுள்ளது என்பதை அறியாமல் உடனடியாக விசாரணையை வேறு அமைப்புக்கு மாற்றுவது குறித்து முடிவு செய்ய முடியாது என்ற நிலைப்பாட்டை நீதிமன்றம் எடுத்துள்ளது.

இதனிடையே, மனுதாரர் தரப்பில் வழக்குகள் தொடர்பாக தங்களிடம் ஆதாரங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, மனுதாரரிடம் உள்ள ஆதாரங்களை சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரியிடம் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, மனுதாரர் தங்களிடம் உள்ள ஆதாரங்களை நாளை பிற்பகல் 3 மணிக்கு சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரியிடம் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த ஆதாரங்களையும் விசாரணையின் ஒரு பகுதியாக அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர்.

மேலும், சிறப்பு புலனாய்வு பிரிவு இதுவரை மேற்கொண்டுள்ள விசாரணையின் நிலை, சேகரிக்கப்பட்டுள்ள தகவல்கள் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய விசாரணை அறிக்கையை அக்டோபர் 7-ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதனால், ஜெம் வீரமணி மீதான பாலியல் வழக்குகளின் விசாரணை தற்போது சிறப்பு புலனாய்வு பிரிவின் கட்டுப்பாட்டிலேயே தொடர உள்ளது. சிபிஐக்கு வழக்குகளை மாற்றக் கோரிய மனுவும் தற்போது ஏற்கப்படாத நிலையில், சிறப்பு புலனாய்வு பிரிவு தாக்கல் செய்ய உள்ள அறிக்கை அடுத்தகட்ட விசாரணையில் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

× Free India Logo
Welcome! Free India