
டாஸ்மாக் விவகாரம் ARR தொடர்பாக டாஸ்மாக் நிறுவனத்திடம் ஆர்.டி.ஐ.யில் பதில் கேட்டால், ‘உணவு பாதுகாப்பு ஆணையத்திடம் கேளுங்கள்’ என டாஸ்மாக் பதிலளித்திருப்பதும், அந்நிறுவனம் மீது முன்வைக்கப்படும் பல்வேறு குற்றச்சாட்டுகளும் பகீர் கிளப்புகின்றன.
டாஸ்மாக் மதுவில் இருக்கும் ஆபத்துகளை அறிந்த அரசு நிர்வாகம், டாஸ்மாக் துறையை மொத்தமாக சீரமைக்க இருப்பதாக சமீபத்தில் நமது இதழில் ‘டாஸ்மாக் தனியார் மயமா, சீரமைப்பா? என்ற தலைப்பில் விரிவாக செய்தி வெளியிட்டிருந்தோம். இதன் தொடர்ச்சியாக, திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ‘என்ரிகா எண்டர்பிரைசஸ்’ நிறுவனத்தில் எஃப். எஸ்.எஸ்.ஏ.ஐ தென் மண்டல அதிகாரிகள் நடத்திய சோதனையில் அங்கு தயாரிக்கப்பட்ட மதுபானங்களில் செயற்கை சுவையூட்டிகள் சேர்க்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, அந்நிறுவனத்தின் II வகையான மதுபானங்களின் விற்பனைக்கு ஆகஸ்ட் 13ம் தேதி தடை விதித்து டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டது. ஆனால், அடுத்த 24 மணி நேரத்திலேயே அந்த தடையை தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை நீக்கியது.
இதற்கிடையே, மத்தியப் பிரதேசத்தில் தயாராகும் மதுவகை ஒன்றின் லேபிளில் தவறான தகவல்களை கொடுத்து வாடிக்கையாளர்களை ஏமாற்றுவதாக சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ நோட்டீஸ் வழங்கியிருக்கிறது. அதேபோல தமிழகத்திலும் எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ ஆய்வில் தவறு நடந்ததாக கண்டறியப்பட்டு நடவடிக்கைக்கு உள்ளான என்ரிகா எண்டர்பிரைசஸ் மதுபானங்களை கடந்த 2026 ஜனவரி முதல் ஜூலை வரை மதுவிலக்கு துறை மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் ஏதாவது பகுப்பாய்வு செய்துள்ளதா? அதில் எவ்வளவு மொலாஸஸ், கிரேன் ஸ்பிரிட் போன்ற செயற்கை சுவையூட்டிகள் இருக்கின்றன உள்ளிட்ட 5 கேள்விளை டாஸ்மாக் நிறுவனத்திடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டிருக்கிறார் சமூக ஆர்வலர் காசிமாயன்.
ஆனால், அதற்கெல்லாம் டாஸ்மாக் நிறுவனம் கொடுத்த பதில்தான் தற்போது விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. இதுகுறித்து காசிமாயனிடம் பேசினோம். “ஒரு குடிமகனாக ஆர்.டி.ஐ. மூலம் தகவல் கேட்டால், சட்டப்படி துறை அதிகாரிகள் முறையான பதிலளிக்க வேண்டும். அவர்களிடம் தகவல் இல்லையென்றால், தகவல் பராமரிக்கும் இடத்துக்கு மனுவை ஃபார்வர்ட் செய்யவேண்டும். ஆனால், டாஸ்மாக் நிர்வாகம் வேண்டுமென்றே பதிலளிக்காமல் புறக்கணிக்கிறது.
மத்தியப் பிரதேச செய்தியை தொடர்ந்து, தமிழகத்திலும் எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ ரிப்போர்ட் படிதான் II மதுபானங்களுக்கு தடை விதித்ததாக டாஸ்மாக் நிறுவனம் சொல்கிறது. எனவே, தமிழகத்தில் எத்தனை இடங்களில் ஆய்வு செய்திருக்கிறீர்கள்? அங்கு மதுபான தரம் எப்படி இருக்கிறது? நம் மாநிலத்தில் விற்கக்கூடிய மதுபானங்கள் தரமானவையா? என்பதோடு தடை செய்யப்பட்ட II மதுபானங்கள் மீது எஃப்.
எஸ்.எஸ்.ஏ.ஐ நடத்திய ஆய்வறிக்கை நகல்களையும் கேட்டிருந்தேன். ஆனால் அவர்களோ கண்ணை மூடிக்கொண்டு, மனு ‘எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ அலுவலகத்தில் செய்து தகவலை பெற்றுக்கொள்ளவும்’ என தெரிவித்துள்ளனர். ஆனால் அவர்களிடம் தகவல் இருக்கவேதானே 11 மதுபானங்களுக்கு தடை போட்டார்கள். ஏதோ ஆதாயம் கிடைக்கப்பெற்றதால்தான் தடையை திரும்பப் பெற்றுள்ளனர்.
இல்லையென்றால், ‘தமிழ்நாட்டில் விற்கப்படும் நிறுவனங்கள் எதுவும் மதுபான தரத்தில் சமரசம் செய்துகொள்ளவில்லை. எங்கள் ஆய்வில் எல்லாம் சரியாக இருக்கிறது. அவை தரமானவையே என சம்பந்தப்பட்டவர்கள் பதில் கொடுக்க வேண்டியதுதானே? சமீபத்தில் மூடப்பட்ட 717 கடைகள் தொடர்பாகவும் ஆர்.டி.ஐ.யில் விவரம் கேட்டிருந்தேன். அதற்கும் ‘விவகாரம் நிலுவையில் இருக்கிறது’ எனச்சொல்லி விவரம் தரவில்லை.
மூடப்படும் கடைகளின் நம்பரை அரசு வெளியிட்டிருந்தாலும், உண்மையில் வருவாய் குறைந்த கடைகளைத்தான் அவர்கள் மூடியிருக்கிறார்கள். பள்ளி அருகே இருக்கும் வருவாய் வரக்கூடிய கடைகளெல்லாம் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இதில் பெரிய குளறுபடியே நடந்திருக்கிறது. அதனால்தான் அந்த தகவல்களை தர மறுக்கிறார்கள். திட்டமிட்டே வெளிப்படைத்தன்மைக்கு எதிராக செயல்படுகிறார்கள்.
இதேபோல, பணமதிப்பிழப்பு சமயத்தில் சாமானியர்கள் எல்லாம் அவதிப்பட்டபோது பெரும்புள்ளிகள் சிலர், டாஸ்மாக்கில் மதுவாங்கியதுபோல சுமார் 70 கோடி அளவுக்கு கருப்பு பணத்தை மாற்றியிருக்கிறார்கள். அப்படி மாற்றிக் கொடுத்தவர்கள் மீது இதுவரை நடவடிக்கையில்லை, அதேபோல, அதிமுக ஆட்சிக் காலத்தில், மாவட்ட டாஸ்மாக் மேலாளர் பதவிகளில், நேர்காணலே இல்லாமல், சீனியாரிட்டியே பார்க்காமல் எம்.பி.ஏ. படித்தவர்களை போட்டு முறைகேடு செய்திருக்கிறார்கள். டாஸ்மாக் பணியாளர்களுக்கு குறைந்த ஊதியமே கொடுக்கிறார்கள்.
பார்களில் ஒரு ஏ.சி. பயன்படுத்தினாலும் அரசுக்கு பத்தாயிரம் ரூபாய் டெபாசிட் கட்டவேண்டும். ஆனால் மாவட்டத்திலுள்ள அதிகாரிகள் அந்த டெபாசிட் தொகையை தாங்களே எடுத்துக்கொண்டு அரசுக்கு இழப்பை ஏற்படுத்தி வருகின்றனர். இதுகுறித்த தகவல் கேட்டாலும் பதிலில்லை. இந்த தகவல்களை கொடுத்தால் ஆட்சியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் பிரச்னை ஆகும் என அரசு எந்திரமே திட்டமிட்டு தொடர்ச்சியாக எனது மனுக்களை புறக்கணிக்கிறது.” என்றார்.
இதுகுறித்து டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் நந்தகுமாரிடம் விளக்கம் கேட்க முயன்றோம். அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை. இதையடுத்து மதுவிலக்கு மற்றும் அமலாக்கத்துறை அமைச்சர் விக்னேஷிடம் பேசினோம். “11 மதுபானங்கள் மீது தடை குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம்தான் கேட்க வேண்டும். ஏனென்றால் அந்த தடையை விதித்தது மத்திய அரசு கட்டுப்பாட்டிலுள்ள பாதுகாப்புத்துறைதான்.
‘அந்த வகை மதுபானங்களை கொள்முதல் செய்யக்கூடாது’ என சொல்லப்பட்டிருப்பதாக எனக்கு தகவல் வந்தது. எனவே ‘மத்திய அரசு அப்படி சொல்லியிருந்தால் வாங்காதீர்கள் என்றேன். அடுத்த நாளே, உணவு பாதுகாப்புத் துறை தாங்கள் சொன்ன விஷயத்தை கடிதம் வந்தது. எனவே, அதன்படி உத்தரவை வாபஸ் பெற்றுவிட்டோம். டாஸ்மாக்கை சீர்படுத்தும் வேலைகள் நடக்கின்றன. இந்த அரசு எல்லாவற்றையும் வெளிப்படையாகவே செய்யும்.” என்றார்.
சிமாயன் வாபஸ் வாங்கிவிட்டதாக இன்னொரு
விரைவில் சீரமைப்பு தொடங்கட்டும்.



Leave a Reply