”முத்தமிழ்க் காவலரைப் போற்றிடும் செம்மொழிநாள்” – ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து.!

Home TamilNadu ”முத்தமிழ்க் காவலரைப் போற்றிடும் செம்மொழிநாள்” – ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து.!
”முத்தமிழ்க் காவலரைப் போற்றிடும் செம்மொழிநாள்” – ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து.!
Spread the love

இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ளதாவது, ”தாழ்ந்து கிடந்த தமிழ்நாட்டை உயர்த்திட, அறிவுச் சூரியனாய் வந்துதித்த தமிழினத் தலைவர் கலைஞரின் பிறந்தநாள்!

முச்சங்கம் கண்ட முத்தமிழுக்குச் செம்மொழிச் சிறப்பு செய்த முத்தமிழ்க் காவலரைப் போற்றிடும் #செம்மொழிநாள்!

ஐந்து முறை முதலமைச்சராகத் தமிழ்நாட்டை ஆட்சி செய்து வரலாறு பல படைத்து – இந்தியாவுக்கே வழிகாட்டும் பேரியக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்தை 50 ஆண்டுகள் வழிநடத்தி, ஒளியும் நிழலும் ஒருசேர வழங்கிய தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகள் எனப் பெருமை கொள்வோம்!” என்று மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். 

அதேபோல், தன் தாத்தாவுக்கு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலினும் பதிவிட்டுள்ளார். அதில், ”தந்தை பெரியாரின் வழியில் மானமிகு சுயமரியாதை போராளியாய், பேரறிஞர் அண்ணா வழியில் மொழியுரிமை, மாநில உரிமைகள் காத்த தமிழினத் தலைவராய் வாழ்ந்த முத்தமிழறிஞர் கலைஞர் புகழ் போற்றுவோம்! முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளில் கழகத்தலைவர் ஸ்டாலின் அவர்கள் வழியில் மக்கள் பணி, கழகப் பணி தொடர உறுதியேற்போம்” என்று உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

 

 


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

× Free India Logo
Welcome! Free India