பொங்கலுக்கு வெளியாகுமா விஜய் படம்? இடியாப்ப சிக்கலில் 'ஜனநாயகன்' திரைபடம்

Home TamilNadu பொங்கலுக்கு வெளியாகுமா விஜய் படம்? இடியாப்ப சிக்கலில் 'ஜனநாயகன்' திரைபடம்
பொங்கலுக்கு வெளியாகுமா விஜய் படம்? இடியாப்ப சிக்கலில் 'ஜனநாயகன்' திரைபடம்
Spread the love

நடிகர் விஜய்-ன் ஜனநாயகன் படம்  ஜனவரி 9 ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,  இதுவரை  தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை எனக் கூறி, படத்துக்கு தணிக்கை சான்று வழங்க உத்தரவிடக் கோரி, பட தயாரிப்பு நிறுவனமான
கே. வி. என் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு, அவசர வழக்காக  நீதிபதி பிடி ஆஷா முன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

பட்ச் தயாரிப்பு நிறுவனம் தரப்பில்,  500 கோடி ரூபாய் முதலீட்டில் எடுக்கப்பட்டுள்ள இந்த படம், கடந்த டிசம்பர் மாதம் சென்சார் போர்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. படத்தை ஆய்வு செய்த சென்சார் போர்டு, சில காட்சிகளை நீக்கவும், வசனங்களை மியூட் செய்யவும் அறிவுறுத்தியது. இந்த அத்தனை நிபந்தனைகளையும் பூர்த்தி செய்து, படத்தை மீண்டும் சென்சார் போர்டுக்கு அனுப்பி வைத்ததாகக் குறிப்பிட்டார்.

மீண்டும் படத்தை ஆய்வு செய்த சென்சார் போர்டு, படம், யு/ஏ சான்று பெற தகுதி உள்ளது என பரிந்துரைத்த நிலையில், மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் உள்ளதாகக் கூறி, படத்துக்கு எதிராக புகார் வந்துள்ளதாகக் கூறி, படத்தை மறு ஆய்வு குழுவுக்கு சென்சார் போர்டு அனுப்பி வைத்துள்ளது. யாரும் படத்தை பார்க்காத நிலையில் எப்படி புகார் அளிக்கப்பட்டது என்பதால், படத்துக்கு சான்று வழங்க உத்தரவிட வேண்டும் என வாதிடப்பட்டது.

சென்சார் போர்டு தரப்பில், மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் உள்ளதாக புகார் வந்ததால் மறு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலத்தில் சான்று வழங்க வேண்டும் என நிர்பந்திக்க முடியாது என தெரிவிக்கப்பட்டது.இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, படத்துக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரை நாளை தாக்கல் செய்யும்படி, சென்சார் போர்டுக்கு உத்தரவிட்டார்.

வழக்கு விசாரணை நாளைக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்த போது, ரிலீஸ் தேதியை முடிவு செய்தாலும் சட்டப்படி தான் செல்ல முடியும். சென்சார் போர்டு அறிவுறுத்தல்களை பெற வேண்டும் என சென்சார் போர்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து,  படத்தை ஏன் 10 ஆம் தேதி தள்ளி வைக்க கூடாது? தை பிறந்தால் வழி பிறக்குமே? என பட தயாரிப்பு நிறுவனம் தரப்பிடம் நீதிபதி கூறினார். அதற்கு, படம் வெளியாகும் தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக படத் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, விசாரணையை நீதிபதி, நாளைக்கு தள்ளிவைத்துள்ளார்.


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

× Free India Logo
Welcome! Free India