தவெக தொண்டர்கள் உயிரிழப்பு – பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு

Home TamilNadu தவெக தொண்டர்கள் உயிரிழப்பு – பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு
தவெக தொண்டர்கள் உயிரிழப்பு – பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு
Spread the love

நடிகர் விஜய் மாநாட்டிற்காக சென்னையில் இருந்து இருசக்கர வாகனத்தில் சென்ற தவெக தொண்டர்கள் இருவர் பலியான சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் மாநாட்டிற்காக சென்னையில் இருந்து இருசக்கர வாகனத்தில் சென்ற தவெக தொண்டர்கள் இருவர் பலியான சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. தேனாம்பேட்டை மெட்ரோ அருகே நடைப்பெற்ற சாலைவிபத்தில் சிக்கி வசந்தகுமார் மற்றும் ரியாஸ் ஆகிய இருவர் உயிரிழந்தனர். 

சிக்னலை கவனிக்காமல் வேகமாக வந்து போது,  லாரி குறுக்கே வருவதையும், சிவப்பு சிக்கனல் இருப்பதை கவனித்து பிரேக் அடிக்கும் போது நிலைத்தடுமாறி கீழே விழுந்து சாலையில் தேய்த்தப்படியே சிறிது தூரம் சென்று லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி பலியாகும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், தமது தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக, வந்த போது எதிர்பாராமல் நிகழ்ந்த சாலை விபத்துகளில்  தவெக நிர்வாகிகள் 6  பேர் உயிரிழந்தது, அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாக தெரிவித்துள்ளார். அவர்களின் இறப்பால், ஈடு செய்யவே இயலாத, தாங்கொணா இத்துயரில் இருந்து வெளிவரவே இயலாமல் மனம் தவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

அதனைத்தொடர்ந்து, கழகத்திற்காக அவர்கள் ஆற்றிய பணிகள் கழக வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும் எனவும்,  அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்வதாகவும் பதிவிட்டுள்ளார். 

மேலும், சாலை விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கழகத் தோழர்கள் விரைவில் முழுவதும் குணமடைந்து, வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

× Free India Logo
Welcome! Free India