போதைப்பொருளுடன் நடிகை சிக்கிய விவகாரம்-டீலர்கள் கைது 

Home TamilNadu போதைப்பொருளுடன் நடிகை சிக்கிய விவகாரம்-டீலர்கள் கைது 
போதைப்பொருளுடன் நடிகை சிக்கிய விவகாரம்-டீலர்கள் கைது 
Spread the love

சென்னையில் போதைப்பொருளுடன் நடிகை மீனா கைது செய்யப்பட்ட விவகாரத்தில் டீலர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் அண்ணாசாலையில் 5 கிராம் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்த சினிமா துணை நடிகை மீனா சமீபத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் நடிகை மீனாவுக்கு சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். மருத்துவப் பரிசோதனை முடிந்த பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். இந்தநிலையில்  கைது செய்யப்பட்ட நடிகை மீனா போலீஸ் விசாரணையில் முக்கிய வாக்குமூலம் அளித்துள்ளார்.

சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்ற பார்ட்டி மற்றும் பப்பிற்கு செல்லும்போது போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் ஏற்பட்டதாக துணை நடிகை மீனா தெரிவித்துள்ளார். மேலும், நண்பர்கள் பயன்படுத்தும்போது, அதை பார்த்து அவரிடம் கேட்டு, போதைப் பொருள் சப்ளை செய்யும் முக்கிய நபரின் தகவல் கிடைத்ததாக தெரிவித்துள்ளார். மேலும் தான் போதைப்பொருள் வாங்கி 3000 ஆயிரம் அதிகமாக விற்பனை செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.இந்த நிலையில் துணை நடிகை எஸ்தர் (எ) மீனா கைது கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

நடிகை மீனாவுக்கு மெத்தபெட்டமைன் போதைப்பொருளை சப்ளை செய்த கோடம்பாக்கத்தைச் சேர்ந்த பவன்(30) என்பவரை கைது செய்தனர்.சண்டிகரை பூர்வீகமாக கொண்ட பவன் சென்னை கோடம்பாக்கத்தில் தங்கி போதைப்பொருள் டீலராக இருந்து வந்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை சினிமா துணை நடிகை எஸ்தர் (எ) மீனா கைது செய்யப்பட்டு 5 கிராம் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், மீனாவுக்கு போதைப்பொருள் சப்ளை செய்த பவன் மற்றும் டைசனிடம் போதைப் பொருள் ஒழிப்பு நுண்ணறிவு பிரிவினர்  தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

× Free India Logo
Welcome! Free India