
வாக்காளர்களை சாக்லேட் கொடுத்து வரவேற்ற ரோபோ
கோவை கோர்ட்டு எதிரே உள்ள அரசு கலைக்கல்லூரியிலும் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு இருந்தது. அங்கு மொத்தம் 4 பூத் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்க வந்த வாக்காளர்களை வரவேற்கும் விதமாக ரோபோ வைக்கப்பட்டிருந்தது. அந்த ரோபோ வாக்குச்சாவடி மையத்திற்கு வந்த வாக்காளர்களுக்கு சாக்லெட் கொடுத்து வரவேற்றது. அதன்பின்னர் பொதுமக்கள் தங்கள் வாக்கினை பதிவு செய்து சென்றனர்.
பசுமை வாக்குசாவடி மையம்
திருவள்ளூர் மாவட்டத்தில், சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 6 சட்டப்பேரவை தொகுதிகளில் 10 பசுமை வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன என மாவட்ட தேர்தல் அலுவலர் பிரதாப் தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறைகளை ஒருங்கிணைக்கும் வகையிலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், திருத்தணி, திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி, மதுரவாயல், மாதவரம் ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகளில் 10 பசுமை வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
பிங்க் வாக்குச்சாவடி!
பிங்க் வாக்குச்சாவடி என்பது தேர்தல் ஆணையத்தால் பெண்களின் பங்கேற்பை ஊக்குவிக்க, பெண் அலுவலர்கள் மட்டுமே நிர்வகிக்கும் சிறப்பு வாக்குச்சாவடி ஆகும். மகளிர் வாக்களிக்கும் வகையில் பிங்க் வண்ணத்தில் அலங்கரித்து வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் பாதுகாப்புப் பணியிலும் பெண் காவலர்களே ஈடுபடுகின்றனர். தேர்தல் அலுவலர்கள், காவலர்கள், உதவியாளர்கள் என அனைவரும் பெண்களாகவே பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.‘பிங்க்’ வண்ணம் பூசப்பட்டு, தோரணங்கள் மற்றும் அலங்காரங்களுடன் கவர்ச்சிகரமாக அமைக்கப்பட்டுள்ளது.
5 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குசாவடி மையம்
தமிழ்நாட்டில் நாளை சட்டப்பேரவை தேர்தலுக்காக வாக்குப் பதிவு நடைபெறவுள்ள நிலையில், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வெள்ளிமலை பகுதியில் 5 வாக்காளர்களுக்காக ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் இருந்து 75 கி.மீ தொலைவில் உள்ள வெள்ளிமலை கிராமத்தில் 5 வாக்காளர்களுக்காக வாக்குசாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது.



Leave a Reply