
ஈரான் அமெரிக்கா இடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் அந்நியச் செலாவணி மதிப்பைக் கணக்கில்கொண்டு, பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் விமான எரிபொருள் விலையை ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி மாற்றியமைத்து வருகின்றன.
இந்த நிலையில், மே மாதத்தில் வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை இன்று ரூ. 993 உயர்த்தப்பட்டுள்ளது.அதன்படி, உணவகங்களில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட வர்த்தக சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.993 உயர்த்தப்பட்டுள்ள நிலையில், சென்னையில் வணிக சிலிண்டர் விலை ரூ.3,237-க்கு விற்பனையாகிறது.
அதே போன்று 5 கிலோ சிறிய வகை சிலிண்டர் விலையும் இன்று ஒரே நாளில் ரூ.261 உயர்ந்தது. வணிக சிலிண்டர் உயர்வு காரணமாக ஹோட்டல், உணவங்களில் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தற்காலிகமாக விலை ஏற்றியே ஹோட்டல்களில் உணவு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.



Leave a Reply